Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமலின் அடுத்த ட்விட்..! அன்புமணி ராமதாஸூக்கு பதிலா..?

'முந்திச் செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை' என்று நடிகர் கமலஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஆளும் அரசில் ஊழல் அதிகரித்துவிட்டது என்று பேசியிருந்தார். அதற்கு அமைச்சர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துடன் ஆதாரத்துடன் பேசவேண்டும் என்று தெரிவித்தனர். உடனே மக்கள் ஊழல் தொடர்பான புகார்களை துறை அமைச்சர்களுக்கு அனுப்பவேண்டும் என்று தெரித்திருந்தார். இதற்கிடையில் அரசியலுக்கு வருவது குறித்தும் ஒரு ட்விட் பதிவிட்டிருந்தார். எனவே கமல் அரசியலுக்கு வரும் விவகாரம் வைரலாகியது.

அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ரஜினி, கமல் அரசியல் அரசியலுக்கு வருவது தான் பிரச்னையா, இங்கே வாழ்வாதார பிரச்னைகள் இருக்கின்றன என்று செய்தியாளர்களை கடிந்து கொண்டார். இந்த நிலையில் கமல் மீண்டும் ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், 'டாக்டர். நீங்கள் சொன்னதை நான் இங்கே வழிமொழிகிறேன். முந்திச் செல்வதைவிட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை.

பின்பற்றுவோர் தொண்டரல்லர் மக்கள், குடியரசு புரிந்ததா?' என்று பதிவிட்டுள்ளார். புரிந்ததா என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தாலும் யாருக்கும் அந்த ட்விட் புரிந்த மாதிரி தெரியவில்லை. நெட்டீசன்கள் அனைவரும் புரியவில்லை என்றே பதில் ட்விட் பதிவிட்டிருந்தனர். இருப்பினும் சிலர் இந்த ட்விட் அன்புமணிக்கு தான் என்றும் பதிவிட்டுள்ளனர். கமல் அரசியலுக்கு வருவதை கண்டிக்கும் வகையில் பேசிய அன்புமணிக்கு தான் இந்த ட்விட் என்று நெட்டீசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். 


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close