Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கர்மா இஸ் எ பூமராங்! - 'இறவாக் காலம்' ரகசியம் சொல்லும் இயக்குநர்!

'மாயா' படத்துக்குப் பிறகு, இயக்குநர் அஸ்வின் சரவணன் எடுத்திருக்கும் திரைப்படம், 'இறவாக் காலம்'. எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா நடித்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியாகி, வைரலாகி வருகிறது. தனது முதல் படத்தில் ஹாரர் த்ரில்லர் ஜானரில் ஸ்கோர் அடித்த இயக்குநரை அவரது அடுத்த படமான 'இறவாக்காலம்' படத்தின் சுவாரஸ்யத்துக்காகத் தொடர்புகொண்டு பேசினோம்.

iravakalam

'' 'இறவாக் காலம்' படம் ஒரு சினிமா டிராமா, மூன்று பேருக்குள் நடக்கும் விஷயங்கள்தான் படத்துக்கான கோர் தீம். ஆனால், த்ரில்லர் எலிமென்ட்டும் படத்தில் இருக்கும். தமிழில் இறந்தகாலம்' என்றால் இறந்துபோன காலம் என்று பொருள். அதேபோல இறவாக் காலம் என்றால் இறந்துபோகாத காலம் என்று அர்த்தம். எனக்கு, கர்மா மேல் அதீத நம்பிக்கை இருக்கு. நாம் பண்ணும் செயல்கள் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும்  நிச்சயம் அதற்கான பலன் நம்மைத் தேடி வரும். நாம் செய்யும் செயல்கள் முடிந்துபோவதில்லை. நேரம் முடிந்தாலும் அதன் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் நம்மைத் தொடர்ந்து வரும். அதைப் பற்றிய படம்தான் இந்த 'இறவாக் காலம்'. 

படத்தின் பெயரே ஒரு தீமாக இருக்கும். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, இந்தப் படத்துக்கு இந்தப் பெயர் வைத்தற்கான காரணத்தை ஆடியன்ஸ் உணர்வார்கள். 'மாயா' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துகொண்டிருந்தபோதே, 'இறவாக் காலம்' படத்துக்கான ஸ்க்ரிப்ட் எழுத ஆரம்பித்துவிட்டேன். ஸ்க்ரிப்ட் எழுதி முடித்த பிறகு, படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கத்தான் சிறிது காலம் ஆனது. 'மாயா' திரைப்படம், நடிகர்களைச் சார்ந்திருக்கும். பட், கம்ப்ளீட்டாக நடிகர்களைச் சார்ந்திருக்காது. ஆனால், இந்தப் படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திங்களின் பெர்ஃபாமன்ஸை வைத்துதான் படம் வொர்க் ஆகுமா ஆகாதான்னு சொல்ல முடியும். அதனால், நன்றாக நடிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அப்போதுதான் 'இறைவி' படம் பார்த்தேன்.

அதில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால்தான் அவரைத் தேடிச்சென்று கதை சொல்லி, இந்தப் படத்தில் கமிட் பண்ணினேன். 'மாயா' படத்தில் நயன்தாரா நடித்திருப்பாங்க. ரொம்ப நல்லா பண்ணியிருந்தாங்க. அதே மாதிரி இந்தப் படத்திலும் ஒரு பெரிய ஹீரோவை நடிக்க வைத்திருந்தால், அவங்க மேல் கதையின் கவனம் திருப்பப்பட்டிருக்கலாம். அதனால்தான், இந்தப் படத்தில் அப்படி எதுவும் செய்யவில்லை. 'இறவாக் காலம்' படத்தில் நடித்திருக்கும் மூன்று பேரையும் ஒரே மாதிரி ஆடியன்ஸ் பார்க்க வேண்டும் என்பதால்தான், இந்தப் படத்தில் இவர்கள் மூன்று பேரையும் நடிக்க வைத்தேன். ஷிவதா நடித்த படங்களைப் பார்த்தால், அவர் கதாபாத்திரத்தை மிகவும் நன்றாக, நேர்த்தியாகப் பண்ணியிருப்பார். அதனால்தான் அவரை செலெக்ட் பண்ணினேன். அதேபோல வாமிகா, 'மாலை நேரத்து மயக்கம்' படத்தில் தன் நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருப்பார்'' என்றவரிடம் படத்துக்கான இசை பற்றி கேட்டால்,

'மாயா' படத்தின் இசையமைப்பாளர்தான் இந்தப் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். ஒரு நல்ல நட்பு எனக்கும் அவருக்கும் உண்டு. இந்த ஸ்க்ரிப்ட் பற்றி முதலில் அவரிடம் டிஸ்கஷன் பண்ணும்போது, அவர்தான் இந்தப் படத்தை இயக்குங்கள் என்று சொன்னார். படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே, இந்தப் படத்துக்கான பின்னணி இசையை முடித்துவிட்டோம். பின்னணி இசையைவைத்து படப்பிடிப்பு நடத்தியது எனக்கு புதுசா இருந்தது. ஒரு பிளான் பண்ணிச் செய்தோம். படப்பிடிப்பு நடக்கும்போது, அந்தப் பின்னணி இசை எனக்கும் கேமரா மேனுக்கு மட்டும்தான் கேட்கும். நடித்துக்கொண்டிருப்பவர்கள் யாருக்கும் கேட்காது. தற்போது, எடிட்டிங்கூட அப்படித்தான் பண்ணப்போறோம்; ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது'' என்று முடித்தார் இயக்குநர் அஸ்வின்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close