Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துப்பறிவாளன் படப்பிடிப்பில் விஷால் காயம்..!

மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் 'துப்பறிவாளன்'. விஷாலின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் வினய், பிரசன்னா, ஆண்ட்ரியா, சிம்ரன், பாக்யராஜ் எனப் பலர் நடிக்கிறார்கள்.

vishal

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலான நிலையில், சில நாள்களுக்கு முன்பு படத்தின் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. த்ரில்லர் படமான இதில் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் சற்று அதிகம். 'துப்பறிவாளன்' படத்துக்கு இசை வெளியீடு நடத்துவதற்குப் பதிலாக, ஆக்‌ஷன் வெளியீடு நடத்தலாம் என்று விஷால் தன்னிடம் கூறியதாக, மிஷ்கின் சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தார். அந்த அளவுக்கு படத்தில் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் உண்டு. 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிச்சாவரத்தில் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் இன்று விஷால் பங்கேற்று நடித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விஷாலின் வலது காலில் அடிபட்டது. தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்துக்கொண்டிருக்கின்றனர். இதனால், படப்பிடிப்பு ரத்து ஆகாது என்றும் தொடர்ந்து நடைபெறும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close