Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிம்புவின் சர்ச்சைக்குரிய ’அந்த’ ட்விட்..! - மறுக்கும் சிம்பு

பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியாவுக்கு அதிக ரசிகர்கள் இருப்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்றுதான். இதில் பல சினிமா பிரபலங்களும் அடக்கம். ஓவியாவுக்கு ஆதரவாக பல சினிமா பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவித்தனர்.

சிம்பு

அந்த வகையில் அண்மையில் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஓவியாவைத் திருமணம் செய்ய விருப்பம் என ட்விட் போட்டதாகவும் அதை அவர் உடனே நீக்கவிட்டதாகவும் ஒரு வதந்தி பரவியது. அதைப் பலரும் நம்பினார்கள். தற்போது அந்த மாதிரி ட்விட்டை நான் பதியவில்லை என்று சிம்பு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர், ''எனது பெயரைக் களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர் என்ற செய்தி எனக்கொன்றும் புதிதல்ல. இவற்றையெல்லாம் மீறி வெற்றி காண்பவன் நான். ஆனால் நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையைப் பற்றி தனிப்பட்ட ட்விட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான, எனது மனதை புண்படவைக்கும் செய்தி. பொறுப்பற்ற சிலர் எனது பெயரில் போலியான சமூக ஊடக  அக்கவுன்ட் உருவாக்கி அதன் மூலம் இது போன்று ட்விட் செய்வது எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை. இதுபோல் என் பெயரில் போலியாக உருவாக்கப்பட்டுள்ள அக்கவுன்ட்களால் பரப்பப்படும் செய்திகளை நம்பவேண்டாம்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார் நடிகர் சிம்பு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close