Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகார்த்திகேயன் 'வேலைக்காரன்' செகண்ட் லுக் போஸ்டர்..!

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம், 'வேலைக்காரன்'. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை '24 AM STUDIOS' தயாரித்திருக்கிறது.

வேலைக்காரன்


கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. குறிப்பாக, `ஃபாலிங் டௌன்' என்ற ஹாலிவுட் பட போஸ்டரின் காப்பி என்று அடுத்த நொடியிலிருந்தே, மீம்ஸ் மழையால் நெட்டிசன்கள் அதை கலாய்த்தனர். ஆனால், அந்தப் படத்துக்கும் இதற்கு சம்பந்தம் இல்லை என்று படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.


இந்நிலையில், படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை இன்று நள்ளிரவு 12 மணி அளவில் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவா மட்டும் சோலோ பெர்ஃபார்மன்ஸ் கொடுத்திருந்தார். ஆனால், இந்த போஸ்டரில் பகத் பாசிலும் தலையைக் காட்டியுள்ளார். செப்டம்பர் 29-ம் தேதி படம் வெளியாக உள்ளது. ஏற்கெனவே, இந்தப்  படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லரும் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close