Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைரலாகும் தந்தை பிரகாஷ் படுகோன், தீபிகாவுக்கு எழுதிய உணர்ச்சிகரமான கடிதம்!

தீபிகா படுகோன்

டிகை தீபிகா படுகோன் இப்போது பாப்புலராக இருக்கலாம். ஆனால், அவரின் தந்தை பிரகாஷ் படுகோன் மிகப் பெரிய முன்னாள் பேட்மின்டன் சாம்பியன். கௌரவமிக்க 'ஆல் இங்கிலாந்து பேட்மிட்டன்' தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் ஆவார். பின்னர், கோபிச்சந்த் இந்தப் பட்டத்தை பெற்றார். பிரகாஷ் படுகோன் - உஜ்வாலா தம்பதியின் மகள்தான் தீபிகா. சிறுவயதில் மகளை ஊக்கப்படுத்தும்விதத்தில் சுதந்திரப் பெண்ணாக வளர வேண்டுமென்கிற எண்ணத்தில் பிரகாஷ் படுகோன் எழுதிய கடிதம் இப்போது பள்ளியில் ஆங்கிலப் பாடத்தில் இடம் பிடித்திருக்கிறது.  

தீபிகா படுகோன்


ரசிகர் ஒருவர் அதைப் புகைப்படமெடுத்து ட்வீட் செய்திருக்கிறார். அதைப் பார்த்த தீபிகா மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் உணர்ச்சிகரமான வார்த்தைகளில் பிரகாஷ் படுகோன் கூறியிருப்பதாவது, '' ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பியதை காதலுடன் செய்ய வேண்டும். பதினெட்டு வயதில் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு, மும்பை போனால்தான் வெற்றி பெற முடியும் என என்னிடம் கூறினாய். நீ மும்பை போக வேண்டுமென்று சொன்னபோது, அது எனக்குக் கொஞ்சம் வருத்தத்தைத் தந்தது. ஆனால், உன் இதயம் சொல்வதைக் கேட்டு நீ நடக்க வேண்டுமென்றே நான் விரும்பினேன். என் தந்தை என்னை மிகுந்த சுதந்திரத்துடன் வளர்த்தார். என்னை அவர் கட்டுப்படுத்தியிருந்தால் நான் ஒரு சாதாரண இன்ஜினீயராக அடங்கிப் போயிருப்பேன். ஒரு குழந்தை வருங்காலத்தில் என்னவாக மாற வேண்டுமென்கிற முடிவை எடுக்கும்போது, பெற்றோர்கள் அதைத் தடுக்க முயலுவது கொடூரமான விஷயமாகத்தான் நான் கருதினேன். இப்போது நீ விரும்பியபடி வெற்றி பெற்றிருக்கிறாய். அது எங்களைப் பெருமைப்பட வைத்திருக்கிறது. தோல்வியடைந்தாலும் அதற்காக வருத்தப்படத் தேவையில்லை. உன் முயற்சி போதவில்லை என்றுதான் அர்த்தம். அதற்காக நீ தோற்றுவிட்டாய் என்று அர்த்தம் இல்லை. 


தீபிகா.. நீ சினிமாத்துறையில் இருக்கிறாய். நெகட்டிவாக இந்த துறையை கருதும் மக்களைக் கொண்ட உலகம் இது. ஆனாலும் அதிலும் நீ ஒரு கேம் சேஞ்சர்தான். யாரையும் வேதனைப்படுத்தாதே, யார் குறித்தும் தவறான எண்ணம் கொள்ளாதே. உன்னை குறித்து உன்னிடமே புகார் கூறுவார்கள். அதில் உண்மை இருந்தால் ஏற்றுக்கொள், திருத்திக்கொள். உண்மையில்லை என்றால் புறக்கணித்து விடு. பிரார்த்தனையில் ஈடுபடுவது நம் குடும்பத்தினரின் பாரம்பர்ய வழக்கம். ஒரு நாளைக்குச் சிறிது நேரமாவது தியானம் செய். கடவுளை மனதில் நினைத்துக்கொள். மூத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதில் பின்தங்கிவிடாதே. எல்லோரிடமும் நேர்மையாக இரு. இதுதான் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். நிலையற்ற வாழ்க்கையில் என்ன நடந்தாலும் உன் குடும்பம் உன்னுடனே இருக்கும்'' எனக் கூறியிருக்கிறார். 


இந்தக் கடிதத்தைப் பலரும் பகிர்ந்து, பாராட்டி வருகிறார்கள். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close