Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் - ஏ.ஆர். ரஹ்மான் மெர்சல் காம்போ: 'ஆளப்போறான் தமிழன்' பாடல் டீசர் இதோ!

'தெறி' ஹிட்டுக்குப் பிறகு விஜய் - அட்லி காம்போவில் உருவாகிக்கொண்டிருக்கும் படம், 'மெர்சல்'. இந்தப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துவருகிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் வடிவேலு, சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் போஸ்டர்கள் ஏற்கெனவே நல்ல வரவேற்பைப்பெற்றன.

ஆளப்போறான் தமிழன்


இந்தப் படத்தின் பாடல்கள், வரும் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் 'ஆளப்போறான் தமிழன்' பாடலின் டீசரை படக்குழுவினர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டுள்ளனர்.  இந்தப் பாடலின் முழு வெர்ஷன், இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஜய், 'ஆளப்போறான் தமிழன்'  ஹேஷ் டேக் ஆக்கி, சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

 

படத்தின் போஸ்டரில், 'இளையதளபதி டூ தளபதி' என்று அரசியல் டச் கொடுத்து ஏற்கெனவே பரபரப்பைக் கிளப்பியிருந்தனர். ரஜினி, கமல் என்று நடிகர்கள் அடுத்தடுத்து அரசியல்குறித்து கருத்துத் தெரிவித்துவரும்நிலையில், 'ஆளப்போறான் தமிழன்' என்ற பாடல் மூலம் அரசியல் ரேஸில் இடம்பிடித்துள்ளார் விஜய். இந்தப் படம், வரும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close