Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வேலைக்காரன்' வெற்றிக்காக சிவகார்த்திகேயன், நயன்தாராவின் சென்டிமென்ட் ஸ்டில்ஸ்!

சிவகார்த்திகேயன்  வேலைக்காரன்

சிவகார்த்திகேயனின் சினிமா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும், வெற்றிப்படமாகவும் அமைந்தது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. அந்தப் படத்தில் கேமராமேனாக வேலை செய்தவர் பாலசுப்ரமணியெம். பி.சி.ஶ்ரீராமின் பரமசிஷ்யர், 'வாட்டக்குடி இரணியன்' படத்தின் ஒளிப்பதிவாளர். பாலசுப்ரமணியெமின் ராசியான கைகளில் இருக்கும் கேமராவால் படம்பிடித்தால் அந்தப்படம் நிச்சயமாக வெற்றிப்படமாக அமையும் என்பது சிவகார்த்திகேயனின் தீர்க்கமான சென்டிமென்ட். 'வேலைக்காரன்' படத்தில் பால சுப்ரமணியெம் வேலை செய்யவில்லை, ராம்ஜி ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 8-ம்தேதி அன்று ஏவி.எம் ஸ்டுடியோவில் 'வேலைக்காரன்' படத்துக்கு என்றே ஸ்பெஷலாக செட்போட்டு போட்டோ செஷன் நடத்தி இருக்கிறார்கள்.  சிவகார்த்திகேயனின் சென்டிமென்ட்டை மதித்து சிவா, நயன்தாரா  காம்பினேஷன் ப்ளஸ் ஷோ ஸ்டில்களை விதவிதமாக தன்னுடைய கரங்களால் படம்பிடித்து இருக்கிறார், பாலசுப்ரமணியெம். 'வேலைக்காரன்' படத்தின் ஃப்ரமோஷன், போஸ்டர் விளம்பரங்களுக்கு பாலசுப்ரமணியெம் எடுத்த ஸ்டில்களைப் பயன்படுத்த தயாரிப்பாளர் ராஜாவும், கதாநாயகன் சிவகார்த்திகேயனும் திட்டமிட்டு இருக்கின்றனர். பொதுவாக புதுசாக ஒரு படத்தை ஆரம்பிப்பதற்கு முன்புதான் போட்டோ செஷன் எடுத்து வைப்பார்கள். 'வேலைக்காரன்'  திரைப்படம் முழுமையாக முடிந்த பிறகு  போட்டோ ஷூட் நடத்தி முடித்ததை ஆச்சர்யமாக பேசிக்கொண்டு இருக்கிறது கோடம்பாக்கம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close