Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவாஜி சிலையை பொது இடத்தில் நிறுவ வேண்டும்..! நடிகர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றம்

நடிகர் சிவாஜி கணேசன் சிலையை மக்கள் அதிகமாகக் கூடும் பொது இடத்தில் வைக்கவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 


சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் அமைந்திருந்த சிவாஜி சிலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டது. தற்போது அந்த சிலை மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தில், 'காமராஜர் சாலையிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசனின் சிலையை மீண்டும் கடற்கரையில் அமைந்துள்ள காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடத்திலோ நிறுவ வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக நடிகர் சங்கம் அளித்த செய்திக்குறிப்பில், 'இந்த விவகாரம் குறித்து தமிழக அரசுக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தப்படும். சிவாஜி சிலை விவகாரம் தொடர்பாக குரல் கொடுத்த சமூக அமைப்புகளுக்கும், பெப்சி அமைப்புக்கும், இயக்குநர்கள் சங்கத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close