Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நாட்டை அழிப்பவர்களைக் கேள்வி கேளுங்கள்' - சீறும் பாடகி சின்மயி

கடந்த ஜூலை மாதம் அமைச்சர் சி.வி. சண்முகம் நடிகர் கமலை, 'கமல்ஹாசன் ஒரு மூன்றாம் தர நடிகர் என்றும் பணத்துக்காக எதையும் செய்வார்' எனவும் சாடியிருந்தார். இந்தக் கருத்துக்கு எதிராக சின்மயி ட்வீட் செய்திருந்தார். 

சின்மயி

அதில், கமல்ஹாசன் நடத்திவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. இது எப்படிக் கலாசார சீரழிவாகும். 40 வருடங்களுக்கு முன்பு கிராமப்புற கோயில் விழாக்களில் கலைநிகழ்ச்சிகளும் தெருக்கூத்துகளும் நடந்தன. ஆனால், இப்போது கோயில் விழாக்களுக்குச் சென்று பாருங்கள். ரிக்கார்டு நடனங்களையும் வீடியோ படங்களையும்தான் பார்க்க முடியும். இது கலாசார முன்னேற்றமா, கலாசார பாதுகாப்பு என்று பேசுவதாக இருந்தால், கடற்கரையைச் சுத்தப்படுத்துங்கள்'என்பது போன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கருத்துக்கும், சின்மயிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அது என்னுடைய தனிப்பட்ட கருத்து என பாடகி சின்மயின் தாயார் பத்மஹாசினி மறுப்புத் தெரிவித்திருந்தார். இப்படி சின்மயி சார்ந்து அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. 


இந்நிலையில் இன்று பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கதில், ''பிக் பாஸ்லேர்ந்து வெளியேறும் கன்டஸ்டன்ட்ஸை அவமானப்படுத்த நினைக்கும் நம்ம மக்கள், அதே ஆர்வத்த அரசியல்ல காண்பித்திருந்தா நாடு முன்னேறியிருக்கும்" எனப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, "நாட்டை அழிக்கிறவங்கலயெல்லாம் கேள்வி கேட்க முடியலயாம், ஒரு ரியாலிட்டி ஷோவுல பங்கேற்பவங்கள துரத்தி, அவமானப்படுத்தறதல என்ன யூஸ்" எனவும் பதிந்திருக்கிறார். பாடகி சின்மயின் போஸ்டுக்குப் பலரும் பாசிட்டிவ் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close