Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசியல் நோக்கி நகரும் ரசிகர்கள்

தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் நிலையற்ற அரசியல் நிலவி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து தமிழக அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆளும்கட்சி அதிரடியாகப் பல மாற்றங்கள் செய்வதும் பிற கட்சிகள் அதை விமர்சனம் செய்வதும் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிலையில் இந்த நிரந்தரமில்லா அரசியல் சூழ்நிலையை நடிகர்கள் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்களா என்ற கேள்வி ஒவ்வொரு மக்கள் மனதிலும் தற்போது துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. நடிகர்கள் மற்றும் அவர்கள் ரசிகர்களின் செயல்பாடுகள் இதை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது.

  முதற்கட்டமாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்த் திரையுலகின்  ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இருப்பதாக அவரின் ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக ரஜினி மற்றும் அவரது ரசிகர்கள் உடனான சந்திப்பு அமைந்தது. வருகிற டிசம்பர் மாதம் அவரின் பிறந்த நாளன்று அவர் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்துவார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித்

        அடுத்ததாக கமல்,சமீபகாலமாக தமிழக அரசியலைத் தொடர்ந்து விமர்சித்து வருபவர். தமிழக அமைச்சர்களும் இவருக்குப் போட்டியாகப் பல எதிர்ப்புகளை வெளியிட்டு வந்தனர். இந்த நெருக்கடியான அரசியல் சூழ்நிலை கமலை அரசியலுக்குள் தள்ளும் செயலாகவே பார்க்கப்படுகிறது. தனது அரசியல் பிரவேசம் குறித்த செய்தியை கமல் மறுத்ததாகவும் தெரியவில்லை.

 இந்த இரு அரசியல் பிரவேசங்களுக்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்திருப்பது ரசிகர்களின் விருப்பமும் ஆதரவுமே. இவர்கள் தமிழகமெங்கும் பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டி தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

அஜித்

 தற்போது இந்த அரசியல் உத்தியை அஜித் ரசிகர்களும் கையில் எடுத்துள்ளனர். அஜித்தை அரசியலுக்குள் இழுக்கும் விதமாகப் பல இடங்களிலும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். குறிப்பாக மதுரை மாநகரில், 'வெற்றிடத்தை நிரப்ப வரும் விவேகமே' போன்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி அமர்க்களப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் அடுத்த அரசியல் பிரவேசம் குறித்த அறிக்கை அஜித் உடையதாக இருக்குமோ என்ற எண்ணம் காண்போர் மனதில் தோன்றுகிறது.

பத்து வருடங்களுக்கு முன்னரே விஜயை அரசியலுக்குக் கொண்டு வர வேண்டும் என அவர் தந்தை விரும்பினாராம். தற்போது அத்தகைய ஆசை இல்லை என்றாலும், சில நாள்களில் இதே போன்று விஜய்யின் போஸ்டர்களையும் காணும் வாய்ப்பு ஏற்படலாம்.

  மொத்தத்தில் வருங்கால தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்களுக்கும், பல புதுவரவுகளுக்கும் நிச்சயம் வாய்ப்பு உண்டு. கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலை தொற்றிக்கொண்டிருக்கும் பதற்றத்துக்கு எதிர்காலத்திலும் இடைவேளை இல்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close