Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மே 19: இந்திய தொழிற்துறையின் தந்தை ஜாம்ஷெட்ஜி டாட்டா நினைவு தின பகிர்வு

ஜாம்ஷெட்ஜி டாட்டா-எண்ணற்ற கனவுகள் காண்பது எல்லாருக்கும் உரிய பண்பு ;எனினும் அதை நிஜமாகும் தீர்க்கம் மற்றும் தெளிவு மிகச்சிலருக்கே வாய்க்கிறது . அப்படி ஒருவர் இவர் .

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தொழிற்புரட்சியின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது . இருபதே வயதில் பார்சி குடும்பத்தில் பிறந்த இவர் அவர்கள் மதக்கோயிலின் அங்கமாக போகாமல் அப்பாவின் வழியில் வியாபாரத்தில் நுழைந்தார் . ஒன்றுக்கும் உதவாது என கைகழுவப்பட்ட எண்ணெய் ஆலை ஒன்றை வாங்கி அதை பருத்தி ஆலை ஆக்கி நல்ல லாபம் சம்பாதித்தார் .

தாமஸ் கார்லைல் எனும் இங்கிலாந்து அறிஞரின் பேச்சை கேட்டு இந்தியாவில் உருக்காலை ஒன்றை உருவாக்க வேண்டும் என கனவு கண்டார் .நாக்பூரில் பருத்தி,ரயில் நிலையம்,நீர் ஆகியன அருகருகே உள்ள இடத்தில் பருத்தி ஆலையை தொடங்கினார் .லட்சத்துக்கு வருமானம் உயர்ந்தது .

வெறும் பணம் சேர்க்கிற தொழிலாக அதை பார்க்காமல் ஜே என் டாட்டா அறக்கட்டளையை உருவாக்கி வெளிநாடு சென்று படிக்க இந்திய மாணவர்களுக்கு உதவினார் . இந்தியர்களும்,நாய்களும் ஹோட்டலுக்குள் நுழையக்கூடாது என வெளியே அறிவிப்பு பலகைகள் ஹோட்டல்களில் இருந்த காலத்தில் இந்தியர்களுக்கு அனுமதி தரும் நல்ல ஹோட்டல் ஒன்றை கட்ட வேண்டும் என முன்னெடுப்பு எடுத்தார் .

இந்தியாவிலேயே முதன்முதலில் மின்சார வசதி கொண்டதாக தன் ஹோட்டலை மாற்றினார் ;அமெரிக்க மின்விசிறிகள்,ஜெர்மன் லிப்ட்கள்,துருக்கிய குளியலறைகள் என அந்த ஹோட்டலை இழைத்தார் ,அது தான் தாஜ் ஹோட்டல் . கப்பல் பயணத்தில் விவேகானந்தரை சந்தித்த பொழுது அறிவியல் முன்னேற்றம் நாட்டுக்கு அவசியம் என உணர்ந்து ,முப்பது லட்ச ரூபாய் முதலீடாக தந்து இந்திய அறிவியல் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார் .

இந்திய தொழில்துறையின் தந்தை என அன்போடு அழைக்கப்படும் அவரின் பெயரால் தான் ஜாம்ஷெட்பூர் உருவானது ."இருப்பதை என்றைக்கும் இழந்துவிடாதீர்கள் ;சரிதலை நோக்கி நம் பயணம் அமையக்கூடாது .எல்லையில்லா ஆர்வமும்,உழைப்பும் உங்களை முன்னே கொண்டு செல்லட்டும் .இந்தியர்கள் பொருளாதார தன்னிறைவை நோக்கி பயணிக்க வேண்டும் !"என்ற அவரின் நினைவுநாள் இன்று 

- பூ.கொ.சரவணன்

எடிட்டர் சாய்ஸ்