Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறுதானிய ஓட்டல் நடத்தும் எம்.இ. பட்டதாரி!

- சாவித்ரி கண்ணன்                                                                 
 

ன்ஜினீயரிங்கில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, ஐ.டி.நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஒரு இளைஞர், குடும்ப எதிர்ப்பை மீறி, பிடிவாதமாக ‘சமையல்காரனாக’ மாறியிருப்பது... ஆச்சர்ய செய்தி!

நம்மாழ்வார் அய்யாவின் தாக்கத்தால், படித்த இளைஞர்கள் பலர் இயற்கை வேளாண்மையை நோக்கி பயணப்பட்டது நல்விதை. அந்தப் பாதை யில்தான், எம்.இ., இன்ட்ரஸ்ட்ரியல் இஞ்சினீயரிங் முடித்துவிட்டு, இயற் கை வேளாண்மைக்கு ஆதரவாக சிறுதானிய சாப்பாடுகள், பலகாரங்களை விற்பனை செய்யும் ‘திருக்குறள் உணவகத்’தை, சென்னை, பூந்தமல்லி அருகேயுள்ள கரையான்சாவடியில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார், சுரேஷ்.

“நல்ல உணவுக்கான வெற்றிடம் நம் சமூகத்தில் அதிகம். எவ்வளவு பணம் தந்தாலும் ஆரோக்கியமான உணவு என்பது குதிரைக் கொம்பாக இருக்கி றது. இந்த ஆதங்கமும் ஏக்கமும்தான் என்னை இந்தத் தொழிலுக்கு கொண்டுவந்தது. ‘அடுப்பங்கரையில நின்னு கரண்டி பிடிக்கவா இன்ஜினீயரிங் படிச்ச?’ என்ற கேள்விகளைக் கடந்து, முதலில் விருகம்பாக்கத்தில் மிகச்சிறிய இடத்தில் ‘திருக்குறள் உணவகம்’ தொடங்கினேன்.

வரவேற்பு பெரிதாக இல்லை. மூன்று மாதத்தில் கடையை மூட வேண்டிய நிலை. ‘இப்பவாவது புத்தி வந்துச்சா?’ என்று மீண்டும் கோபக் கேள்விகள் துரத்தின. தோல்வி, என் வைராக்கியத்தைக் கூட்டியது. என்னைப் போலவே, எம்.இ., படித்த என் நண்பன் தினேஷும் என்னுடன் இந்த முயற்சியில் இணைந்தான்.

பல தரப்பிலும் இரண்டு லட்சம் கடன் பெற்று, கரையான்சாவடியில் சற்று பெரிய அளவில் மீண்டும் ‘திருக்குறள் உணவகம்’ தொடங்கினேன். 10 மாதங்கள் கடந்த நிலையில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது. முழுக்க முழுக்க சிறுதானியம் என்று செய்யமுடியவில்லை. சாதாரண சாப்பாடு, பலகாரங்களு டன் சிறுதானிய உணவுகளையும் இணைத்து தருகிறேன். ஆனாலும், ஆவாரம் பூ சாம்பார், தினைப் பொங் கல், கம்பு லட்டு, சோள கொழுக்கட்டை, வில்வம்பூ தண்ணீர், ஏதேனும் ஒரு கீரை, கொள்ளு சூப், மூலிகை டீ என தருகிறோம். மிக தொலைவில் இருந்தும் பலர் வந்து சாப்பிடுகிறார்கள்.

பல கட்ட சோதனைகளைத் தாண்டி இன்றைக்கு காலூன்றிவிட்டேன். பார்ட்டனாராக சேர்ந்த நண்பன் தாக்குப் பிடிக்காமல் பாதியில் சென்றுவிட்டான். சமையல் மாஸ்டர்கள் கூட, இந்த சமையலை விரும்பாததால் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவார்கள். அதே சமயம் எப்படியோ சில கைகள் ஒத்தாசைக்கு வந்து விடும். சிறுதானிய உணவுக்கான விழிப்பு உணர்வும் வரவேற்பும் பெருகிக்கொண்டே வருவது சந்தோஷம்.

கல்யாணம், பிறந்தநாள் விழா போன்ற விசேஷங்களுக்கு எல்லாம் இப்போது சிறுதானிய விருந்து கேட்கி றார்கள். வீட்டில் சிறுதானிய சமையலை செய்து பார்க்க ஆசைப்படுகிறார்கள். அதனால், அதற்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறோம். பக்கத்தில் உணவகங்கள் நடத்துபவர்கள் கூட சிறுதானிய பயிற்சி வகுப்பு களுக்கு வருகிறார்கள்.

அவங்களின் ஓட்டலில் ஏதாவது ஒன்று மட்டும் சிறுதானிய உணவாக தர முடியுமா என்று ஆலோசிக்கிறார்கள். இதுதான் என் ஆசை. சிறுதானிய உணவுப் பழக்கம் அதிகரித்தால் எனக்கு மகிழ்ச்சி. இதற்குத்தான் நான் உழைத்தேன்!’’ -கொள்ளு சூப்பை குவளையில் ஊற்றுகிறார், சுரேஷ் எம்.இ!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close