Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடுத்த வாட்ஸ் அப் வம்பு: தகாத வார்த்தையால் அர்ச்சிக்கும் கலெக்டர்!

னி யாரும் தப்பிக்க முடியாது. குறிப்பாக போனில் பேசுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. எது பேசினாலும் அது அடுத்த நிமிடமே வாட்ஸ் அப்பில் வைரஸ் போல பரவி வெளியுலகத்துக்கு தெரிந்து விடும். போனில் பேசும் உரையாடல்கள் அனைத்தையும் ரெக்கார்டு செய்யும் வசதி பெரும்பாலான செல்போன்களில் உள்ளன. இந்த வசதியைப் பயன்படுத்தி தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் முகத்திரையை கிழித்து விடலாம்.

சமீபத்தில் வாட்ஸ் அப் வம்பில் சிக்கியது வடசென்னையில் பணியாற்றிய உதவி கமிஷனர் ஒருவர். இவர் மீதான விசாரணை, காவல் துறையில் நடந்து வருகிறது. அடுத்து சென்னையில் திருநங்கையும், போக்குவரத்து காவலரின் கடும் வாக்குவாதமும் வாட்ஸ் அப் பதிவானது. மீண்டும் சென்னை போக்குவரத்து துணை கமிஷனரும், போக்குவரத்து காவல் ஆய்வாளரின் உரையாடலின் வாட்ஸ் அப் பதிவு. இவ்வாறு காவல்துறையையே சுற்றி கலங்கடித்துக் கொண்டு இருந்த வாட்ஸ் அப்-பில், இப்போது தென்மாவட்ட கலெக்டர் ஒருவர் பேசுவதாக இடம்பெற்றுள்ள உரையாடல் அதிர்ச்சி ரகமாக உள்ளது.

இதுதான்  அந்த வாட்ஸ் அப் உரையாடல்...

ராமசந்திரன்: ஹலோ... குட்மார்னிங் சார்.

கலெக்டர்: ஹலோ ராமசந்திரனா

ராமசந்திரன்: ஆமாம் சார்

கலெக்டர்: என்ன மெசேஜ் கொடுத்து இருக்கிறீங்க... என்ன மெசேஜ் அது?

ராமசந்திரன்: என்ன மெசேஜ்ன்னா... எனக்கு புரியல...... என்ன கேட்கிறீங்க...?

கலெக்டர்: பேப்பர் மில் சம்பந்தமா ஒரு லட்சம் பணம் கொடுத்தீங்கன்னு மெசேஜ் கொடுத்து இருக்கீங்க. யார் கிட்ட கொடுத்தீங்க....

ராமசந்திரன்: உண்மையத்தான் சொல்றேன்.

கலெக்டர்: யாருக்கு கொடுத்தீங்க?

ராமசந்திரன்: உங்கிட்ட தான் கொடுத்தேன். உங்க ரூம்ல வந்து கொடுத்தேன்... பி.சி இரண்டு பேர் சாட்சி. எந்த கோயில்லேயும் சத்தியம் செய்றேன்.

கலெக்டர்: பரதேசி (இதற்கு பிறகு அவர் சொன்ன வார்த்தைகளை குறிப்பிட முடியாதளவுக்கு ஆபாசமாக இருக்கிறது)

ராமசந்திரன்: எவ்வளவு அழகா கலெக்டர் பேசுறீங்க.

கலெக்டர்: ......................

ராமசந்திரன்: உண்மையை சொல்றேன்.

கலெக்டர்: யார் கிட்ட................ பணம் வந்து கொடுத்ததா மெசேஜ் கொடுக்கிற...... பரதேசி

ராமசந்திரன்: இன்னும் மெசேஜ் போடுவேன். இப்படியெல்லாம் பேசினீங்கன்னு அனுப்புவேன்.

என்பதோடு ஒரு நிமிடம் 52 விநாடிகள் அடங்கிய உரையாடல் முடிகிறது. ஒரு மாவட்ட கலெக்டரா இப்படி அநாகரீகமாக பேசினார் என, வாட்ஸ் அப்பில் அந்த உரையாடலை கேட்பவர்களுக்கு அதிர்ச்சியை   ஏற்படுத்துகிறது.

இது தொடர்பாக விசாரித்தபோது, பணம் கொடுத்ததாக கூறும் ராமச்சந்திரனுக்கும், அவரது பார்ட்டனருக்கும் உடுமலைப்பேட்டையில் உள்ள பேப்பர் மில் ஒன்று சம்பந்தமாக தகராறு இருந்ததாகவும், இது தொடர்பாகவே அவர் பணம் கொடுத்ததாகவும், ஆனால் கலெக்டர் பார்ட்டனருக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி குறிப்பிட்ட கலெக்டருடன் பேசியபோது அவர் மேற்கூறியவாறு கோபமாக பேசியதாக தெரிய வருகிறது.

எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ