Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாளை முழு அடைப்பு: பொதுமக்களிடம் ஒத்துழைப்பு கேட்குது விவசாயிகள் சங்கம்

சென்னை: காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகத்தில் நாளை (மார்ச் 28) நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேக்கேதாத், ராசிமணல் ஆகிய இடங்களில் 3 அணைகளைக் கட்ட கர்நாடகம் திட்ட மிட்டுள்ளது. ஏற்கெனவே 7 அணைகளையும், 3 ஆயிரம் ஏரிகளையும் உருவாக்கி தண்ணீரைத் தடுத்ததால் காவிரி பாசன மாவட்டங்களில் ஒருபோக சம்பா சாகுபடி கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப் புக் குழு நாளை முழு அடைப்பு அறிவித் துள்ளது. தி.மு.க, காங்கிரஸ், பாஜ.க உள்ளிட்ட கட்சிகளும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலை யில் பொதுமக்களிடமும் ஒத்துழைப்பு கேட்டுள்ளது ஒருங்கிணைப்புக் குழு.

பெ.மணியரசன்,  தலைவர், தமிழ் தேசிய பேரியக்கம்


நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டம், காவிரி டெல்டாவுக்கு மட் டும் சம்பந்தமானது அல்ல. காவிரி நீர் என்பது 12 மாவட்டங்களுக்கு வேளாண்மைக்கும், 19 மாவட்டங்களின் குடிநீருக்கும் ஆதாரமாக உள் ளது. கர்நாடகத்தில் புதிய அணைகள் கட்ட, அனுமதித்தால், காவிரி நீரை நம்பியுள்ள, அத்தனை மாவட்டங்களும் மனிதர்கள் குடியிருக்க தகுதியில் லாத நிலையை அடையும். சொல்லப்போனால், தமிழகத்தின் தலைக்கே தண்ணீர் இல்லாமல் போய்விடும்.

ஆம், இன்றைக்கு சென் னையில் 50 சதவிகிதம் அளவுக்கு காவிரி நீர்தான் குடிக்கப்படுகிறது. வீராணம் ஏரியில் நிரம்பும் காவிரி நீர், சென்னையின் குடிநீராகிறது என்கிற உண்மையை யாரும் மறந்துவிட வேண்டாம். என வே, குமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை உள்ள, ஓர் உயிர், ஓர் உடலாக இருந்து முழு அடைப்பில் பங்கு கொள்ள வேண்டும்.

சுந்தரவிமலநாதன், செயலாளர். தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்

1971-ம் ஆண்டு முதல் சென்னையின் மக்கள் தொகை 25 மடங்கு பெருகியுள்ளது. இதற்கு மூலக்காரணம், தண்ணீர் பிரச்சனைத்தான். விவசாயத்திற்கு அடிப்படையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், சென்னையை நோக்கி மக்கள் பிழைக்க சென்றுள்ளனர்.

ஆகையால், சென்னையில் உள்ள மக்களும் தங்களின் தாய்வீட் டுப் பிரச்சனையாக காவிரி நீர் போராட்டத்தை பார்க்க வேண்டும்.
 

மு.சேரன், தலைவர், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு


காவிரியில் நீர் வராவிட்டால், ஒட்டு மொத்த தமிழ்நாடும் பாதிக்கப்படும். கர்நாடகத்தில் புதிய அணைகள் கட்டிவிட்டால், காவிரியில் ஒரு சொட்டு நீர் கூட வராது.

எனவே, இந்த முழு அடைப்புக்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கும் ஆதரவு, கர்நாடகத்தை மிரள வைக்க வேண்டும்.

இப்போது, இந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல் விட்டுவிட்டால, நாளை நமது சந்ததிகள் வாழ்வதற்கான பூமியாக தமிழகம் இருக்காது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
 

எடிட்டர் சாய்ஸ்