Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செம்மரக்கடத்தலும் தமிழக, ஆந்திர அரசியல்வாதிகளும்: வெளிவராத பகீர் ரிப்போர்ட்!

ந்திர வனப்பகுதியில் நெல்லூர், கடப்பா, கர்னூல், சித்தூர் ஆகிய  நான்கு மாவட்டங்களில் காணப்படும் செம்மரங்களை கடத்தி கொள்ளை லாபம் சம்பாதித்த மாஃபியா கும்பலின் பின்னணி முழுக்க முழுக்க அரசியல் பின்புலத்தைக் கொண்டவை. தமிழக, ஆந்திர அரசியலில் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அசைக்க முடியாத சக்திகளாக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சி, லேட்டர்பேடு அமைப்புகள் வரைக்கும் செம்மரக்கடத்தலில் பங்கு இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

அரசியல்வாதிகளின் ஆசியோடு செம்மரக்கடத்தல் தமிழகத்திலும், ஆந்திராவிலும் கொடிக்கட்டி பறக்கி றது. சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இந்த மாஃபியா கும்பலை சேர்ந்தவர்கள் கோடிகளில் புரளுகிறார்கள். நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து, சர்வதேச கடத்தல் கும்பலுடன் பிசினஸ் பேசி பேரத்தை முடிக்கிறார்கள். மாதத்தில் பாதி நாட்கள் வெளிநாடு, சில நாட்கள் உள்ளூர் என்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் சமயங்களில் கோடி கோடியாகக் கொட்டி தங்கள் கட்சி தலைமைகளை குளிர வைக்கிறார்கள்.

இது எல்லாம் காவல்துறைக்கும், வனத்துறைக்கும் தெரிந்தாலும் மாஃபியா கும்பல் மீது மட்டும் நடவடிக்கை  எடுக்கப்படுவதில்லை. அப்படியே எடுக்கப்பட்டாலும் இரண்டாம் கட்டத் தலைவர்களை வரை நெருங்கும் காவல்துறை, முக்கிய தலைவர்கள் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை.

ஏனெனில் இந்த தொழிலில் நம்பர் ஒன் பாஸ் என்று அழைக்கப்படும் அவர்கள் தமிழகத்திலோ, ஆந்திரா விலோ இருப்பதில்லை. டெல்லியிலும், வெளிநாடுகளிலும் இருந்து கொண்டு தங்களுடைய நெட்வொர்க் மூலம் தொழிலை கவனித்து வருகிறார்கள். இவர்களை யாராலும் நெருங்க முடிவதில்லை.

செம்மரக்கடத்தலின் பங்கு ரவுடிகள், காவல்துறையினர், வனத்துறையினர், அரசியல்வாதிகள் என அனை வருக்கும் கொடுக்கப்படுவதால் முதல்கட்ட தலைவர்கள் என்றழைக்கப்படும் மாபிஃயா கும்பல் மீது யாரும் கை வைப்பதில்லை. மேலும் முதற்கட்ட தலைவர்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே இருக்கின்றன. அவர்கள் யார் என்ற விவரம் கடத்தலில் ஈடுபவர்களுக்கே தெரியாது.

உள்ளூர் கடத்தல் கும்பலில் ஏஜென்ட் என்றழைக்கப்படுவர்களைக்  கொண்டு, ஆந்திர வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த ஏஜென்ட்கள்தான் பணத்தாசைக் காட்டி தமிழகத்தில் வறுமை யின் பிடியில் சிக்கி இருக்கும் மலைக்கிராம தொழிலாளர்களுக்கு வலைவிரிக்கிறார்கள். அவர்களும் பிழைப்பில்லாததால் இந்த தொழிலில் வந்து சிக்கி கொள்கிறார்கள்.

இப்படி ஆந்திர அரசின் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரிடம் சிக்கிய தமிழக தொழிலாளர் களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுகிறது. இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வ தால், ஜாமீன் கிடைக்காமல் சிறைக்குள்ளேயே இந்த 'அப்பாவி' கள் காலத்தை கடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடத்தல் கும்பலின் புகலிடமாக திருவள்ளூர் மாவட்டமும், வடசென்னையும் திகழ்கிறது. இந்த மாவட்டத்திலிருக்கும் அரசியல்வாதிகளில் பலர் செம்மரக்கட்டையால் செழிப்படைந்தவர்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அழுக்கு வேட்டியும், சட்டையும் அணிந்த ஒருவருக்கு இன்று தமிழகம் முழுவதும் சொத்துக்கள். இந்த சொத்துக்களின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என்கிறார்கள்.

பல ஆண்டுகளாக தமிழக, ஆந்திர காவல்துறையினருக்கு 'தண்ணி' காட்டிய இந்த கடத்தல் கிங், 2013 ல் தமிழக காவல்துறையிடம் வசமாக சிக்கினார். சிக்கியவர் காவல்துறையில் செல்வாக்குமிக்கவர் என்ப தால் நேர்மையான அந்த ஐ.பி.எஸ் அதிகாரி, யாரையும் நம்பாமல் தன்னந்தனியாக வழக்குகளை கையாண் டார்.

அதிகாலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாம் என்று அனைத்து விவரங்களையும் காவல் நிலைய கம்ப்யூட்டரில் சேமித்துவிட்டு, வீட்டிற்கு சென்ற அந்த ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விடியற்காலை கடும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் காவல்நிலையத்தில் ரைட்டராக இருந்த ஒரு கறுப்பு ஆடு, எத்தனை பிரிவுகளில் வழக்குகள் போடப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட வழக்கின் முழு ஜாதகத்தையும் கம்ப்யூட்டரின் பாஸ் வேர்டை திருடி, அந்த கடத்தல் கிங் வக்கீல்களுக்கு தகவல் கொடுத்துவிட்டார்.

அதை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று கடத்தல் கிங்கை தப்ப வைத்து விட்டார்கள். இதன்பிறகு அந்த வழக்கு தமிழக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு இன்னும் நிலுவையில் கிடக்கிற தாம். இப்போதும் அந்த கடத்தல் கிங், இந்த செம்மரக்கடத்தல் தொழிலில் கொடிக்கட்டி பறந்து வருகிறாராம். கையில் கோடிகள் புரளுவதால் இப்போது கட்சியின் மாவட்ட செயலாளர் பொறுப்பு இவரை தேடி வந்துள்ளது. சொகுசு காரில் உலா வருகிறார். தன்னைக் காப்பாற்றிய கறுப்பு ஆட்டிற்கு 30 லட்சம் மதிப்பிலான இடத்தை தந்து அசத்தினார். இப்போது அதன் மதிப்பு பல கோடி பெறும்.

அந்த கறுப்பு ஆடுதான் திருவள்ளூர், வேலூர் மாவட்ட கடத்தல் கும்பலுடன் இன்னமும் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு பல லட்சங்களை அள்ளிக் கொண்டு இருக்கிறதாம். சமீபத்தில் அவருடைய மகள் திருமணத்தை பல கோடிகளை செலவழித்து ஆடம்பரமாக அந்த கறுப்பு ஆடு  நடத்தி முடித்திருக்கிறது. இதற்காக எத்தனை முறை இடமாற்றம் செய்யப்பட்டாலும் உயரதிகாரிகளை 'கவனித்து' மீண்டும் அதே இடத்துக்கு வந்துவிடுவது இவரது வாடிக்கை.

தமிழக ஆளுங்கட்சியை சேர்ந்த இருவர் செம்மரக்கடத்தலில் கில்லாடிகளாம். நேரிடையாக இவர்கள்  களத்தில் இருக்கிறார்களாம். மற்ற ஆளுங்கட்சியினர் மறைமுகமாக இந்த தொழிலை தங்களது அடிவருடிகளை வைத்து கவனித்து வருகிறார்களாம். செம்மரக்கடத்தல் கில்லாடிகளில் ஒருவர் எம்.பியாக இருக்கிறாராம். இதனால் ஆந்திர, தமிழக காவல்துறையினர் இவர்களை நெருங்க அச்சப்படுகின்றனர். வடசென்னையில் பல இடங்களில் செம்மரக்கடத்தல் குடோன்கள் ரகசியமாக செயல்படுகின்றன.

செம்மரங்களை தக்காளி, வெங்காயம், தோல் உள்ளிட்ட பொருட்களுடன் மறைத்து துறைமுகம் வழியாக கடத்தப்படுவதிலும் எக்ஸ்பர்ட்கள் இருக்கிறார்கள். துறைமுக, சுங்கத்துறை அதிகாரிகளை வளைக்க பணம், பெண் என்ற இரு ஆயுதங்களை கையாள்கிறது மாஃபியா கும்பல். இரண்டுக்கும் அடிபணியாதவர் களை குடும்பத்தினரை காட்டி மிரட்டி பணியவைக்கிறார்கள்.

செம்மரக்கடத்தலைக் தடுக்க வேண்டிய காவல்துறையினரில் சிலரே இந்த தொழிலில் நேரிடையாக களமிறங்கி இருக்கிறார்கள். சென்னை துறைமுகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய மலியக்கல் மூசா, ஆந்திர காவல்துறையினருக்கு 11 ஆண்டுகள் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர். ஆந்திராவிலிருந்து செம் மரங்களை கடத்தி, சென்னை துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுவதில் கில்லாடி மலியக்கல் மூசா. இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதும் ஆந்திர போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி சென்னை செங்குன்றத்தில் குடும்பத்துடன் பதுங்கினார்.

இங்கிருந்து தன்னுடைய நெட்வொர்க் மூலம் செம்மரங்களை கடத்தினார். சர்வதேச கும்பலுடன் நேரிடை யாக டீல் பேசும் மலியக்கல் மூசா, தனக்கென்று தனி ராஜ்ஜியத்தை இந்த கடத்தல் சாம்பிராஜ்ஜியத்தில் நிறுவியிருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 24 -ம் தேதி மூசா குறித்த ரகசிய தகவல் நெல்லூர் காவல்துறை யினருக்கு தெரிய தெரிந்தது. நீதிமன்ற வாரண்டுடன் சென்னை வந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள். மூசாவிடம் 10 ஆயிரம் கோடிக்கு அதிகமான சொத்துக்கள் இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூசாவை காவல்துறையினர் கொஞ்ச வருடங்கள் நெருங்காததற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் உண்டு. கடந்த 2003 ஆம் ஆண்டு மூசாவை கைது செய்ய வந்த ஆந்திர வனத்துறையினர் மீதே மூசா கொடுத்த புகார் ஒட்டுமொத்த ஆந்திர அதிகாரிகளை அலற வைத்துவிட்டது. கைது செய்ய வந்த அதிகாரி மீது, தன் வீட்டில் உள்ள பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக மூசா பகிரங்க குற்றசாட்டைக் கூறினார்.

இது தொடர்பான வழக்கு சமீபத்தில்தான் தள்ளுபடி செய்யப்பட்டது.  நேர்மையான அதிகாரிகளுக்கு கடத்தல் கும்பலினால் இப்படியும் சில நெருக்கடிகள்.

இந்தியாவில் இருந்து விரட்ட முடியாத லஞ்சம், வறுமை இவற்றின் வரிசையில் செம்மரக் கடத்தலும் சேர்ந்துவிட்டது.

வாழ்க ஜனநாயகம்!

- எஸ்.மகேஷ் 


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ