Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலக பணக்காரர் வீட்டுத் திருமணம்!

ப்ரூனேவின் சுல்தான் ஹசனல் போல்கியாவின் இளைய மகன் மற்றும் வருங்கால இளவரசரான அப்துல் மாலிக்கின் திருமணம், உலக சென்சேஷன்.  மக்களை வாய் பிளக்க வைத்த மற்றுமொரு `ராயல் வெட்டிங்`இது.     

                                                          

அப்துல் மாலிக் - டயாங்கு ராபியின் திருமணம் 11 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் 5 ஆம்  தேதியில் இருந்து ஆரம்பித்த திருமண நிகழ்வுகள், ஏப்ரல் 15 ஆம்  தேதி அன்று  தேங்க்ஸ் கிவிங் பிரேயரோடு முடிந்தது. ப்ரூனேவின் தலைநகரான பந்தர் செரி பெகவானில் உள்ள இஸ்தானா நூரல் இமான் மாளிகையில் நடந்த இந்தத் திருமணத்தில், எங்கெங்கு காணினும் பிரமாண்டம், ஆடம்பரம்.

மணமக்கள் இருவரின் ஆடைகளும் தங்கம் மற்றும் வைரத்தால் உருவாக்கப்பட்டிருக்க, மணமகள் ராபியின் கைகளில் பூக்களாலான பொக்கேவுக்கு பதில் விலை உயர்ந்த ஜெம் கற்கள் பதித்த பொக்கே கொடுக்கப்பட்டு மேடைகளில் அமர வைக்கப்பட்டபோது, பார்த்தவர்கள் கண்கள் பூத்துப் போயின. மணமகள் ராபியா தன் பாதங்களில் தங்க சலங்கை, ஸ்வரோஸ்கி கற்கள் பதிக்கப்பட்ட செருப்புகள், தலையில் எமரால்ட் மற்றும் வைரம் பதிக்கப்பட்ட க்ரீடம், கழுத்தில் வைரம், எமரால்ட் பதித்த நெக்லஸ் என ஜொலிஜொலித்தார். ஐ.டி துறையில் இன்ஸ்ட்ரக்டராக வேலை பார்த்து வந்தவர் ராபியா என்பது குறிப்பிடத்தக்கது.

5 ஆம் தேதியே திருமண சடங்குகள் ஆரம்பித்துவிட்டாலும், மணமக்கள் இருவரும் மக்களின் முன்னால் முதல் முறையாக ஏப்ரல் 12 ஆம்  தேதி அன்று தோன்றி, உலகையே ‘வாவ்!’ சொல்ல வைத்துவிட்டார்கள். மணமகன் அப்துல் மாலிக்கின் அப்பா மற்றும் ப்ரூனேவின் இளவரசரான சுல்தான் ஹசனல் போல்கியா, உலகப் பணக்காரர்களில் ஒருவர். திருமணத்திற்கு பல நாடுகளைச் சேர்ந்த உலக தலைவர்கள் வந்து வாழ்த்திவிட்டுப் போயிருக்கிறார்கள்.

தங்கத் திருமணம்!

- அதிதி

எடிட்டர் சாய்ஸ்