Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வட அமெரிக்கத் தமிழர்ச் சங்கப் பேரவையின் தமிழ் விழா!

வட அமெரிக்கத் தமிழர்ச் சங்கப் பேரவையின் சார்பில், தமிழ் விழா வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை கலிபோர்னியாவில் நடைபெறுகிறது.

கலிபோர்னியா ஷன் ஜோஸில் உள்ள சிட்டி நேசனல் சிவிவ் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் இரண்டு நாள் விழாவில், பல்வேறு அரங்குகளில் சுமார் 80 மணி நேர தமிழ் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

திரைப்படப் பாடகர்கள் ஹரிசரன், ரோஷினி, மகிழினி, ஆலாப் ராஜு, சூப்பர் சிங்கர் பாடகர்கள் பிரகதி, பூஜா ஆகியோர் விஜய் டிவி புகழ் பென்னட் இசை குழுவினருடன் இணைந்து நடத்தும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற பூமணி, தமிழ்/இந்தியவியல் அறிஞர்கள் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன், முனைவர் வி.எஸ்.இராஜம், வைதேகி ஹெர்பர்ட், பேராசிரியர் மைக்கேல் விட்சல் (ஹாவர்டு பல்கலைக்கழகம்) போன்றோர் கலந்து கொள்ளும் இலக்கிய நிகழ்வும் நடக்கிறது.

மேலும் நடிகை எமி ஜாக்சன் உட்பட பல தமிழ்த்திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.

சிறுவர்கள் கலந்து கொள்ளக் கூடிய சிறப்புத் திருக்குறள் தேனீ வினாடி வினாப் போட்டியும் நடக்கிறது. பெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பணமும் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டிக்குப் பதிவு செய்ய மே 31ஆம் தேதி கடைசி நாளாகும்.

பெட்னா (தமிழ்ச்சங்கப் பேரவையின்) தமிழ் குறும்படப் போட்டிக்காக திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜுடன் இணைந்து செயல்பட உள்ளார். போட்டிக்கான குறும்படங்களை மே 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு க்ளிக் செய்க

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close