Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கனவு நகரம்... கைக்கு கிட்டுமா?

ந்திய சுதந்திரத்துக்கு பிறகு முதல்முறையாக சமூக, பொருளாதார வசதிகளை கொண்ட ஒரு திட்டமிட்ட அழகிய தலைநகரை உருவாக்கிக்கொண்டிருக்கிறது ஆந்திர பிரதேச மாநிலம்.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டவுடன், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத் துக்கு தலைநகராக இருந்த ஹைதராபாத் தெலுங்கானாவுடன் சென்றுவிட்டது. இன்னும் பத்து வருடங்க ளுக்கு ஹைதராபாத் இரண்டு மாநிலங்களுக்கு பொதுவான தலைநகராக இருக்கும்.  அதற்குள் ஆந்திர மாநிலம் புதிய தலைநகரை உருவாக்கிக்கொண்டு ஹைதராபாத்தை காலி செய்யவேண்டும் என்பது மாநில பிரிவு மசோதாவில் உள்ள ஷரத்து.

விஜயவாடா, குண்டூர் நகரங்களுக்கிடையே கிருஷ்ணா நதிக்கரையோரத்தில் உள்ள துள்ளூர் பகுதியில் புதிய தலைநகரை அமைக்க ஆந்திர அரசு முடிவு செய்து அதற்காக 30,000 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப் படுத்தியுள்ளது. புதிய தலைநகரில் அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல் சமூக, பொருளாதார வசதிகளை கொண்ட உலத்தரம் வாய்ந்த நகரமாக உருவாக்க ஆசைப்பட்ட அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தலைநகரை திட்டமிட்டு தருவதற்காக சிங்கப்பூர் அரசின் உதவியை நாடினார்.

சிங்கப்பூர் அரசும், தனியார் நிறுவன உதவியுடன் தலைநகருக்கான வசதிகளை ஆராய்ந்து முதற்கட்ட திட்ட வரைபடத்தை ஆந்திர அரசிடம் ஒப்படைத்துள்ளது. உலக மக்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் ஈர்க்கும் விதமாகவும், பாரம்பரிய புத்த பெருமைகளை கொண்ட இப்பகுதியில் சிறப்பை போற்றி பாதுகாக்கும் விதமாகவும் புதிய தலைநகரருக்கு ' அமராவதி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வரும் ஜூன் மாதம் தலைநகரின் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்க உள்ள நிலையில், இந்தியாவிலே அமராவதிதான் ஒரு திட்டமிட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட தலைநகரமாக விளங்கும் என்று ஆந்திர மக்கள் நம்புகின்றனர். அவர்களில் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் விதமாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைநகர் குறித்து ஏகப்பட்ட கனவுகளை சுமந்துகொண்டு பணிகளை ஆரம்பிக்க உள்ளார்.

அமராவதியில் ஆந்திர மக்கள் மட்டுமல்லாமல் உலக மக்களும் வேலைபார்க்க, குடியிருக்க, விளையாட உகந்ததாக இருக்க வேண்டும் என்பதே ஆந்திர அரசின் விருப்பமாக உள்ளது. சிங்கப்பூர் அரசு அளித்த மாஸ்டர் பிளான்படி, அமராவதி எட்டு நகர பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டடம், மருத்துவம், கல்வி, சுற்றுசூழல் பாதிக்காத தொழிற்சாலைகள், ஐ.டி, விவசாயம், உணவுப்பதப்படுத்தும் மையம், நூற் பாலை என ஒவ்வொரு நகர பகுதியையும் தனித்தனி வளர்ச்சி மையங்களாக மாற்ற முடிவு செய்துள் ளார்கள். அத்துடன் சுற்றுலா, பொழுதுபோக்கு, ஆன்மீகத்துக்கு என தனியாக நகர பகுதிகளை ஒதுக்கியுள் ளார்கள். பெரும்பாலான தொழிற்சாலைகளை அமராவதிக்கு கொண்டுவந்துவிட்டு, அருகில் இருக்கும் நகரமான விஜயவாடாவை வர்த்தக பகுதியாக மாற்ற உள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் இருந்து அமராவதி வழியாக சென்னைக்கும், அமராவதியில் இருந்து பெங்களூரூ வுக்கு அதிவேக ரயில் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கடல்வழி போக்குவரத்து செய்யும் திட்டதையும் அறிமுகம் செய்ய உள்ளனர். சுற்றுசூழலை பாதிக்காத, இயந்திரங்கள் இல்லாத போக்குவரத்துக்காக,  கிருஷ்ணா நதியை மையாக வைத்து 80 கிலோ மீட்டருக்கு நீர்வழிப்பாதையும், நதியோரத்தில் சைக்கிளில் செல்ல தனிப்பாதையும், நடந்து செல்ல தனிபாதையும் அமைக்கப்பட உள்ளது.

கிருஷ்ணா நதியில் உள்ள தீவுகளை மேம்படுத்தி சுற்றுலா பயணிகள் தீவுகளில் தங்குவதற்கான வதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதுடன், நதியோரத்தில் கிரிக்கெட், கோல்ப் மைதானம், தீம் பார்க்குகளையும் அமைக்க உள்ளனர்.

தலைநகருக்கு சாலை வசதிகள் முக்கியம் என்பதால் தேசிய நெடுஞ்சாலை 9, 5, 221 ஆகியவற்றை அமராவதிக்குள் கொண்டு வருவதற்கான  திட்டத்தையும் கையில் வைத்துள்ளனர்.

கிருஷ்ணா நதியின் மேல் நான்கு பாலங்களை கட்டி குண்டூர், விஜயவாடா நகரங்களை இணைக்க உள்ளனர். புகழ்பெற்ற புத்த கோயிலாக அமராவதி கோயில், ஆனந்தவரம் கோயில், கொண்டபள்ளி கோட்டை, உண்டவாளி குகை போன்ற சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு நிதிகளை ஒதுக்கி மேம்படுத்தி வருவதுடன், இந்த பகுதிகள் நீர்பாதை வழியாகவும், மெட்ரோ ரயில் வழியாகவும் இணைக்கப்பட உள்ளது.

அமராவதியில் தொழிற்சாலைகளுக்கும், சுற்றுலாவுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்த முடிவு செய் துள்ள ஆந்திர அரசு, தலைநகரில் 13 மில்லியன் மக்கள் வாழ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள துடன், 5 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

"தலைநகர் குறித்து பகல் கனவு கானும் முதல்வரே, இதற்கெல்லாம் நிதி எங்கிருந்து வரும்?" என்று எதிர்க் கட்சிகள் கேள்வி மேல் கேள்வி கேட்க,  சந்திரபாபு நாயுடுவோ,'' தலைநகரை உருவாக்க நாடே ஒன்றிணைந்து உதவி செய்ய வரும்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளர்.

-ஆ.நந்தகுமார்

 

எடிட்டர் சாய்ஸ்