Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை பிளாட்பாரங்களில் ஒலிக்கிறது கிராமபோன்கள்...

1897 களில் அறிமுகமாகி  1980 கள் இறுதிவரை பயன்பாட்டில் இருந்த கிராமபோன்கள், க்ரான் பாதர் கிராமபோன்கள்,பெரிய பெரிய பாடல் தட்டுகள், எண்களை சுழற்றி சுழற்றி பயன்படுத்தும் மர தொலைப்பேசி கள், மரத்தினால் ஆன பெரிய முட்கள் கொண்ட கடிகாரங்கள், வால்வு வானொலிகள் போன்ற பல கலைநயப்பொருட்களை வயதில் வேண்டுமானால் பழையது எனலாம். ஆனால் விலையில் புதிய பொருட்களை விஞ்சி விற்கிறது. காரணம் அரிதானவை என்பதே.

இன்று மதிப்பும், விலையும் மிக மிக அதிகமான இவற்றை வாங்குவ தற்கென்றே சிலர் இருந்தாலும், அதிக ரசனையும், விருப்பமும் இருந் தாலும் சாமானியர்களால் இவற்றை வாங்க முடியாத நிலையில்தான் அவற்றின் விலைகள் உள்ளது.

பாண்டிச்சேரி, கோவா, மங்களூர், பெங்களூர் போன்ற நகரங்களில் அதிகமாக கிடைக்கும் இந்த பழம்பெரும் பொருட்களின் குறைந்தபட்ச தொடக்க விலையே 15,000 ரூபாயாக உள்ளது. அதிலும் கிராமபோன்கள் என்றாலே தனிவிலையும், தனி மதிப்பும்தான்.

ஆனால்,கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த முகமது அலி இந்த கலைப்பொருட்களை சென்னை நகரின் பல பகுதிகளில் பிளாட் பாரங்களில் வைத்து பெயர் பலகைக் கூட இல்லாமல் எளிமையாக வும், குறைந்த விலையில் பேப்பர் விரித்து தரையில் வைத்தும் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.

சென்னை, ஆந்திரா, மகாராஷ்டிரா, பெங்களூரு என்று பல மாநிலங்கள், பல நாடுகளுக்கு சென்று மிகப் பழமையான கிராமபோன்கள், மர தொலைபேசிகள் என்று பல கலைப் பொருட்களை வாங்கி, அவற்றின் பழைய இயந்திரங்களை பாதுகாத்தும், பயன்பாடும் மாறுபடாமல் வாங்கி வந்து செப்பனிட்டு, இன்றைக்கும் பயன்படுத்துமாறு தயார் செய்து கொடுக்கிறார் முகமது அலி.

ஆரம்பத்தில் கேரளாவில் ரெடிமேட் ஆடைகளை சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த முகமது அலிக்கு கலைப் பொருட்களை வாங்குவதிலும், சேகரிப்பதிலும் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், போதிய பண வசதி இல்லாததால் அவற்றை வாங்க முடியவில்லை. காலப்போக்கில் நண்பர்கள் உதவியோடு கேரளாவில் "கைரளி" என்ற  பெயரில், பெரிய பழைய கலைப் பொருட்கள் விற்பனை நிலையத்தை தொடங்கி,  இன்றுவரை இருபது ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சென்னைக்கு வந்து சில நாட்கள் மட்டுமே கிராமபோன்கள், தொலை பேசிகள், கடிகாரங்கள் போன்றவற்றை விற்பனை செய்துவிட்டு மீண்டும் கேரளாவுக்கே போய்விடுகிறார் முகமது அலி.

சென்னைக்கு வந்திருந்த முகமது அலியிடம் பேச்சு கொடுத்தோம். "இம்மாதிரியான கலைப்பொருட்களை பலர் தங்கள் வீட்டில் அழகுக்கு வைப்பார்கள், சிலர் பரிசாக அளிப்பார்கள். அதிலும் அதிகமானோர் இவற் றின் மீது ஆர்வம் காட்டுவதில்லை. பெரிய பெரிய கடைகளிலும், கண்காட்சிகளிலும் மிகவும் பத்திரப்படுத்தி மிக அதிக விலைகளில்தான் விற்பனைக்கு வைத்திருப்பார்கள்.

எளிய மக்களுக்கு இக்கலைப் பொருட்களை வாங்க ரசனைகளும், விருப்பங்களும் இருந்தாலும் அந்த பெரிய பெரிய ஆடம்பரங்களும், விலைகளும்  அவர்களை வாங்க விடாது. ஒரு மாதம் கடையில் வைத்து விற்பனையாகும் தொகை, இப்படி சாலையோரங்களில் வைத்து விற்கும் பொழுது ஐந்து நாட்களில் கிடைத்து விடும். காரணம், விலையும் குறைவு. ஆடம்பரமும் மிக குறைவு.

சென்னையில்தான் எல்லா ஊர் மக்களும் ஒன்றாக இருப்பார்கள். அதனால்தான்  சென்னைக்கு வருடத் திற்கு ஒருமுறை வந்து அடையாறு, கிழக்கு கடற்கரை சாலை, நுங்கம்பாக்கம் என்று பல பகுதிகளில் விற்பனை செய்து வருகிறேன். மின்சார பயன்பாடு இல்லாமல் இன்றைக்கும் பயன்படுத்தும் கிராமபோன் கள் பல உள்ளன. நாமே அவற்றின் பழுதுகளை நீக்கலாம். அந்தளவிற்கு எளிமையான சாதனம். கிராம போன்களுக்கு போடும் பாடல் தட்டுகளும் என்னிடம் உள்ளன.

தொலைபேசிகளை இன்றும் இணைப்பு கொடுத்து பயன்படுத்தலாம். இந்த தொலைபேசிகள், வால்வு வானொலிகள், கடிகாரங்களின் தொடக்க விலை 2,500 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன. கிராமபோன்கள் அவற்றின் அளவுகளுக்கு ஏற்ப 4,000 ரூபாய்க்கு தொடங்குகின்றன.

மேலும் தமிழ், ஆங்கிலம் ,மலையாளம், இந்தி மொழிகளில் இருக்கும் பாடல் தட்டுகள் இன்றும் சென்னை யில் 50 ரூபாயிலிருந்து 900 ரூபாய் வரையில் கிடைக்கின்றன. ஒரு பெரிய தட்டில் இரண்டு பாடல்கள்தான் இருக்கும். கிராமபோன்கள் வாங்குவோருக்கு இரண்டு பாடல் தட்டுகளை இலவசமாகவும்  கொடுத்து வருகிறேன்.

என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும், பழமைக்கு உண்டான மதிப்பே தனிதான். அதிலும் கிரமாபோன் களுக்கு ரசிகர்கள் அதிகம். கேரளாவில் பெரிய கடைக்கு முதலாளி என்றாலும், சென்னையில் சில நாட் களே இப்படி பிளாட்பாரங்களில் வைத்து விற்பனை செய்து விட்டு செல்வது தனி திருப்தி எனக்கு" என்கி றார், முகமது அலி மலையாளமும், தமிழும் கலந்த மொழியில்.

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் யோக்நாத், இம்மாதிரி கலைப் பொருட் களை சேகரிக்கும் பழக்கம் கொண்டவர். முகமது அலியின் பிளாட்பார கடையினை ஆச்சர்யமாக பார்வை யிட்டுக்கொண்டிருந்த அவரிடம்  பேசினோம்.

"இதே கிராமபோன்கள், தொலைபேசிகள், கடிகாரங்கள் போன்ற பல பொருட்களை வாங்க பல இடங்களுக்கு பயணம் போவேன், போய்க் கொண்டும் இருக்கின்றேன். அங்கெல்லாம் அவற்றை சரிவர பார்க்கவே விட மாட்டார்கள். மேலும் குறைந்தபட்ச  விலையே பத்தாயிரத்துக்கு மேல்தான் தொடங்கும். ஆனால், இவரிடம் அதே தகுதி உள்ள பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பது ஆச்சர்யமாக உள்ளது. அதிலும்  கிராம போன்களின் விலை நிர்ணயமே வேறு" என ஆச்சர்யம் விலகாமல் பேசுகிறார் யோக்நாத்.

இவற்றைத்தவிர பழங்கால ஊஞ்சல்கள், தொட்டில்கள், மரப்பொருள்கள் என்றும் கேரளாவில் விற்பனைக்கு  வைத்துள்ளார் முகமது அலி.

பொருட்கள் தேவைப்படுவோர் போன் செய்தாலே போதும் என்று கூறி, கைப்பேசி எண்ணை வாடிக்கை யாளர்களுக்கு கொடுத்து விட்டு, கிராம போனை ஒலிக்க விட்டபடி வியாபாரத்தை கவனிக்கிறார் முகமது அலி.

- கு. முத்துராஜா
( மாணவ பத்திரிகையாளர்)

     

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close