Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுபான விற்பனை: வருவாயைவிட நோயாளிகளுக்கு அதிகம் செலவிடும் அரசு!

துவிலக்குக்கு ஆதரவாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் வலுவாக குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில், குறைந்தபட்சம் அதன் விற்பனையையாவது மட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும் மத்திய, மாநில அரசுகள், மது விற்பனை மூலம் அரசாங்கத்தின் கஜானாவிற்கு கிடைக்கும் வருவாயை கருத்தில் கொண்டு மதுவிலக்கை கொண்டு வர ஆர்வம் இல்லாமலேயே இருக்கின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆட்டுவிக்கும் ஆர்எஸ்எஸ், இப்பிரச்னையை கையில் எடுத்து, நாடு முழுவதும் மது விற்பனையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்ட்ரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொண்டுவரப்பட்ட மாட்டிறைச்சி மீதான தடை, வெற்றிகரமாக அமலானதாக கருதும் ஆர்.எஸ்.எஸ், இதே பாணியில் மதுவிற்பனையை கட்டுப்படுத்துவதையும் செயல்படுத்தலாம் என மோடி அரசுக்கு அழுத்தம் கொடுத்து உள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து நாட்டின் மது விற்பனையை கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டம் ஒன்றை மத்திய அரசு தயாரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதுபானங்கள் மீதான விற்பனை வரியை மிகக்கடுமையாக உயர்த்துவது, மதுவுக்கு எதிரான பிரசாரத்தை மிகத் தீவிரமாக மேற்கொள்ளுமாறு பெண்களை கேட்டுக்கொள்வது மற்றும் அவர்களையே இப்பிரச்சாரத்திற்கான பணிகளில் களமிறக்குவது என்பதுபோன்ற மதுவிற்பனையின் கழுத்தை நெரிக்கும் விதமான கிடுக்குப்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாட்டில் மது நுகர்வின் அளவை குறைப்பது போன்ற யுக்திகள் அந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க மத்திய அரசின் பல்வேறு துறைகளே, 'மதுபான விற்பனையை குறைக்க'  வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், இதனை மிக வலுவாக வலியுறுத்தி வருகிறது. மது அருந்துவதால் பல்வேறு உடல் நல பிரச்னைகள் வருவதாகவும், இத்தகைய நோயாளிகளுக்காக அரசாங்க மருத்துவமனைகள் மூலம் செலவிடும் தொகை, ஒவ்வொரு மதுபான புட்டியிலிருந்து அரசாங்க கஜானாவுக்கு கிடைக்கும் வருவாயைப்போல நான்கு மடங்குக்கும் அதிகமாக உள்ளது என்றும், அதாவது ஒரு மதுபான புட்டி விற்பனை மூலம் அரசாங்க கஜானாவுக்கு ஒரு ரூபாய் வருவாய் கிடைத்தால், சுகாதாரத்துறைக்கு 4 ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளது.

மத்திய சமூக நலத்துறை அமைச்சகமோ,  தனது பங்கிற்கு பிரதமர் அலுவலகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், வீட்டு வன்முறைகள், தற்கொலைகள் போன்ற சமூக பிரச்னைகளுக்கு மது முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், இது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் கூறியுள்ளதோடு, மதுபான விற்பனையை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தி உள்ளது.

இந்த இரு அமைச்சகங்களுடன் இணைந்து பப்ளிக் பவுண்டேசன் ஆப் இந்தியா மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகிய இரு அமைப்புகளும் சேர்ந்து மதுபான நுகர்வுக்கு எதிரான பிரசாரத்தை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் மேற்கூறிய வலியுறுத்தல்களை தொடர்ந்து, மதுபான விற்பனையை கட்டுப்படுத்தும் கருத்தை பிரதமர் அலுவலக அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதோடு, மதுபானத்தை பொது வரியின் கீழ் கொண்டுவந்து, அதனை கண்காணிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்றும், மதுபானங்களின் விலையை மாநில அரசுகள் தீர்மானிக்கும் கொள்கைகளை அனுமதிக்கக்கூடாது என்றும், இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மதுபானம் கடத்தப்படுவது குறையும் என்றும் யோசனை தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம் மகாராஷ்ட்ரா. இங்கு மதுவிற்பனையை கட்டுப்படுத்துவதற்காக மதுபானங்கள் மீதான வரியை மிக அதிகமாக விதித்துள்ளது அம்மாநில அரசு. அதே சமயம் மகாராஷ்ட்ரா அருகில் உள்ள கோவா மற்றும் டாமன் அண்ட் டையூ போன்ற அண்டை பகுதிகளில் மதுபானங்கள் குறைந்த விலையில் தாராளமாக கிடைப்பதாலும், தளர்வான கொள்கைகள் இருப்பதாலும் அங்கிருந்து மகாராஷ்ட்ராவுக்கு மதுபானங்கள் கடத்தி வரப்படுகின்றன.  எனவே அனைத்து மாநிலங்களிலும் மது மீது ஒரே சீரான வரி விதிக்கப்பட்டால், குறைந்தபட்சம் இத்தகைய கடத்தல்கள் கட்டுப்படுத்தப்பட்டு மதுவிற்பனையும் குறையும் என்கின்றனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள்.

இந்நிலையில் நாட்டில் மது விற்பனையை மட்டுப்படுத்த வேண்டும் என கடந்த ஆண்டே மோடி அரசுக்கு தெரியப்படுத்திவிட்டதாக ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாரிடம் இந்த கருத்து வலியுறுத்தப்பட்டது என்பதை தெரிவிக்க மறுத்துவிட்ட அவர், " நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக  மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என நாங்கள் வலியுறுத்தவில்லை. அதே சமயம் சாமான்ய மக்களால் எளிதில் வாங்க முடியாத அளவுக்கு மதுபானத்தின் விலையை கடுமையாக அதிகரிக்க வேண்டும் என்றுதான் வற்புறுத்துகிறோம். இது மிக மெதுவான பலனளிக்கக் கூடிய நடவடிக்கைதான் என்றபோதிலும், அது நாட்டு மக்களின் நலனை நோக்கி அரசை செயல்பட வைக்கக்கூடியது என நாங்கள் நம்புகிறோம்" எனக் கூறுகிறார்.

ராமர் கோவில், பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பு என இந்துத்வா அமைப்புகளின் தாளத்திற்கு ஏற்ப மோடி அரசு ஆடுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஆர்.எஸ்.எஸ். தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ள தற்போதைய உருப்படியான யோசனையை செயல்படுத்த மோடி அரசு முன்வந்தால், அது நிச்சயம் முந்தைய விவகாரங்களைப்போல சர்ச்சையை ஏற்படுத்தாது; மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெறும்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close