Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எங்க அப்பா எனக்கு ஃப்ரெண்டு மாதிரி!

ஃபேஸ்புக்ல என்னோட ப்ரெண்டா இருக்குற எல்லாருக்குமே எங்கப்பாவ நல்லா தெரியும் வேற ஒன்னும் இல்லங்க. என் பேருக்கு பின்னாடி எங்கப்பாவோட பேர் இருக்கும். ஃபேஸ்புக்ல மட்டுமில்ல, நா செய்யுற எல்லா வேலையிலும் எங்கப்பாவோட இன்ஸ்ப்ரேஷன் இருக்கும். சின்ன வயசுல பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டு போறது ஆரம்பிச்சு தோல் மேல தூக்கிட்டு மாரியம்மன் கோவில் திருவிழாக்கு போறது வரைக்கும் எந்த விஷயத்த நினைச்சாலும் எங்கப்பா தான் எனக்கு நியாபகம் வருவாரு.
 
எங்கம்மா தான் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணுவாங்க. ஏன்னா அப்பானா ரொம்ப பயம். ஸ்கூல் படிக்கும் போது ரேங்க் கார்டுல கையெழுத்து வாங்க நீட்டும் போது  நல்ல மார்க் வாங்கி இருந்தாலும் ஏன்டா இந்த தடவ மார்க் குறைஞ்சிருக்குனு கேட்கும் போது ஒரு வித பயத்தோட பதில் வரும். ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் போகும் போது வீடு, ஸ்கூல்னு இருந்த சூழல்ல இருந்து வெளி உலகத்துக்கு எப்படி என்ன தயார் படுத்திக்கணும்னு சொல்லி கொடுத்தது எங்க அப்பா தான்.
 
 
இதெல்லாம் விட யாராவது என்ன பத்தி தப்பா சொன்னா அவன் என் பையன் அப்படியெல்லாம் பண்ண மாட்டான்னு சொல்வாரு. ஒரு தடவ ஸ்கூல்ல ஒரு சார் என்ன அடிச்சதுக்காக அவர்கிட்டயே சண்டைக்கு போனாரு. காலேஜ் முடிச்சுட்டு நா எனக்கு புடிச்ச படிப்ப தான் படிப்பேன், நா நினைக்குற வேலைக்கு தான் போவேன்னு திமிரா பேசுனப்ப எல்லாம் என்ன வேணும்னாலும் பண்ணு அப்படினு சொல்லிட்டு வெளில போய் என் பையன் அவனுக்கு புடிச்ச வேலை பாக்குறான்னு சொன்னது எல்லாமே அவர் மேல மரியாதைய அதிகப்படுத்தியது.
 
காலேஜ் படிக்கும் போது ஒரு சினிமா நடிகரோட மிகப்பெரிய ஃபேன் நான். கிரிக்கெட்ல எனக்கு கங்குலி தான் இன்ஸ்ப்ரேஷன் இப்படி பல பேர நா சொல்லிட்டு இருந்தாலும் நா செய்யுற ஒவ்வொரு வேலைலயும், என்னோட வாழ்க்கைலயும் நா வெளில சொல்லாத இன்ஸ்ப்ரேஷனா என் அப்பா தான் இருக்காரு.
மீசை எப்படி வைக்கணும், வேஷ்டி எப்படி கட்டணும், நாலு பேர்ட்ட எப்படி பேசணும்ங்கிறது வரைக்கும் எனக்கு கத்து கொடுத்தது அவர் தான். எனக்கு மட்டுமில்ல பல காலேஜ் ஸ்டுடண்டுக்கு ஏடிஎம் மிஷினவிட அதிகமா பணம் கொடுத்தது அவுங்க அப்பாக்களா தான் இருப்பாங்க.
 
என் அப்பாக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனா கடைசில நா தான் ஜெயிப்பேன்...ஸாரி அவர் என்ன ஜெயிக்க வைப்பாரு. இப்ப கூட ஒருத்தர் என்னப்பா அன்னையர் தினத்துக்கு ஃபீல் பண்ணி ஒரு வாரம் ஸ்டேட்டஸ் போட்ட, தந்தையர் தினத்த மறந்துட்டீயேனு சொன்னாரு. அது ஒன்னுமில்ல சின்ன வயசுல எதுக்கெடுத்தாலும் அப்பாட்ட சொல்லுவேன்னு சொல்லி மிரட்டி மிரட்டியே அப்பான்னா பயம் வந்துடுச்சா ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டாக்கூட அங்கயே வந்து கமெண்ட்ல திட்டுவாறோங்குற பயம் தான்னு சொல்லிட்டு வந்தேன். 
 
 
ஒரு பொண்ண லவ் பண்ணேன், அத அப்பாகிட்ட சொல்லலாமானு நினைச்சப்ப. பல தமிழ் சினிமால அப்பாக்கள் தான் காதலுக்கு ஃப்ர்ஸ்ட் வில்லன்னு பாத்தது நியாபகம் வந்து அப்படியே விட்டுட்டேன். ஒரு நாள் எப்படியோ கண்டுபுடிச்சு. இத சொல்லுறதுக்கு ஏன்டா இவ்வளவு பயம் நாளைக்கே போய் பேசுவோம்னு சொல்லும்போது ''அட சும்மா இருப்பா இன்னும் அந்த பொண்னுகிட்டயே சொல்லல''' அப்படினு சொல்லி எஸ்கேப் ஆகும் போது நீயெல்லாம் லவ் பண்றதே வேஸ்ட்டானு கலாய்ச்சுட்டாரு. அப்ப எனக்கே லைட்டா ஒரு டவுட்டு நா யூத்தா..இல்ல அவர் யூத்தானு...அவர்கிட்ட பேசும் போது ஒரு பயம் இருந்தாலும் அவர் எனக்கு ஒரு ப்ரெண்டு மாதிரி. 
 
ஆனா நான் தான் அவர்கிட்ட அவ்வளவா பேச மாட்டேன். வெளியூர்ல வேலை பாக்குறேன். தினமும் ஒரு தடவயாவது அம்மாவுக்கு போன் பண்ணி பேசுவேன். அவர்ட்ட பேச மாட்டேன் இன்னிக்கு மட்டும் அவருக்கு போன் பண்ணி சொன்னேன்னா ஏதோ வெத்து சீன் போட பேசுறான்னு திட்டுவாரு. இருந்தாலும் போன் பண்ணி வாழ்த்து சொல்லுவேன். அதையும் 10 பேர்கிட்ட போய் என் பையன் மெட்ராஸ்ல இருந்து காலைலயே போன் பண்ணி வாழ்த்து சொன்னான்னு சொல்லுவாரு.
 
 
அவர்கிட்ட இருந்து அடியும் வாங்கி இருக்கேன். அன்பா தோள் மேல கைபோட்டு பேசியும் பாத்து இருக்கேன். எனக்கு ரோல் மாடல் எங்க அப்பானு சொல்றதுல பெருமையா இருக்கும். அதே சமயத்துல பயமாவும் இருக்கும். ஏன்னா நாளைக்கு என் பையனுக்கு நா ரோல்மாடலா இருப்பேனாங்குற சந்தேகம் தான். அவர்கிட்ட ஒரே ஒரு கெட்ட பழக்கம் தான். என்ன பத்தின எந்த விஷயத்தையுமே எனக்கிட்ட நேரா பாராட்டி பேச மாட்டாரு. பரவாயில்லை எப்படியோ என்ன பாராட்டுனா சரினு போய்டுவேன். என்னையெல்லாம் 25 வருஷமா சமாளிச்சதுக்கு அவருக்கு தினந்தினம் தந்தையர் தின வாழ்த்துக்கள் சொல்லணும். இன்னிக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலா சொல்லிக்குறேன்.
 
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா!!
 
- ஸ்ரீராம் சத்தியமூர்த்தி

 

MUST READ