Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதாவும்... குருபெயர்ச்சியும்!

ஜெயலலிதாவுக்கும், ஆன்மீகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வருகிற ஜீலை 5-ம் தேதியன்று வருகிற குருபெயர்ச்சி, ஜெயலலிதாவின் ராசியான சிம்ம ராசிக்கு வருவதால், கர்நாடகா அரசு செய்துள்ள மேல்முறையீட்டை கூட கண்டு கொள்ளாமல் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வர் பதவியை இழந்த நிலையில், மீண்டும் முதல்வர் ஆக வேண்டி அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் அனைவரும் தமிழகத்தின் முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜைகள், யாகம் வளர்ப்பது, மொட்டை அடிப்பது, தீச்சட்டி தூக்குவது என  பல விதமான வேண்டுதல்களில் பரபரப்படைந்தனர்.

பின்பு மேல்முறையீட்டில் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா குற்றவாளி இல்லை என விடுதலை செய்தார். அதற்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அ.தி.மு.க.வினர் கோவிகளில் சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்த நிலையில் வருகிற குருபெயர்ச்சி அ.தி.மு.க.வினரை உற்சாகம் அடைய செய்துள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசினோம்.

''எங்க அம்மாவுக்கு எப்பவுமே தெய்வபக்தி அதிகம். ஜீலை 5ம் தேதி வரும் குருபெயர்ச்சி, கடக ராசியிலிருந்து 'சிம்ம ராசிக்கு' வருகிறது. குரு இந்த ராசியில் குடி கொள்வதால் அம்மாவுக்கு நல்ல பலன்களை மட்டுமே தருவார். இப்போதிலிருந்தே நல்ல பலன்களை கொடுக்க ஆரம்பித்து விட்டார். அதனால்தான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டி போட கூட சரியான ஆள் இல்லை. இதுவரை இல்லாத அளவுக்கு அமோக வெற்றி பெறுவார். அதேபோல், கர்நாடக அரசு செய்திருக்கும் மேல் முறையீடு கூட எங்களுக்கு சாதகமாகதான் வரும்'' என உற்சாகம் பொங்கினர்.

குருபெயர்ச்சி குறித்து திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் குருக்களான கல்யாண சுந்தரம் கூறுகையில், ''சிம்ம ராசிக்குதான் குரு வருகிறார். பொதுவாக குரு எந்த ராசியில் இருக்கிறாரோ அந்த ராசிக்கு கஷ்டத்தைதான் கொடுப்பார். இதை ஜென்ம குரு என்பார்கள். குரு ஒரு ராசியில் இருந்து கொண்டு மற்ற ராசிகளை பார்ப்பார். குரு பார்வை படுபவர்களுக்குத்தான் பலன் அதிகம். சிம்ம ராசி கொண்டவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி கஷ்டங்களையேத் தரும். பரிகாரம் செய்தால் பலன் உண்டு'' என்றார்.

இந்நிலையில், ஜெயலலிதா வழக்கு குறித்து பேசிய குருக்கள் சிலபேர், ''ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து அமைதி காத்த கர்நாடகா அரசு, நேற்று மேல் முறையீடு செய்துள்ளது. இது குரு அவர் ராசிக்கு பெயர இருப்பதைதான் காட்டுகிறது. இதற்கு சிறப்பு பரிகார பலன்கள் செய்தால் இந்த பிரச்னையில் இருந்து காத்து கொள்ள முடியும். எனவே அ.தி.மு.க.வினர் இப்போது இருந்தே குரு பெயர்ச்சி அன்று சிறப்பு பரிகாரங்கள் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றனர்.

கே.குணசீலன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close