Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிராமத்து கதாநாயகிகள்!

ள் பாதி, ஆடை பாதி என்பார்கள். ஒருவனுடைய நடை, உடை, பாவனை உள்ளிட்டவைகளை வைத்தே சமூக மதிப்பு கிடைக்கிறது. இதற்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களை இந்த பிரபஞ்சத்தில் விரல் விட்டு எண்ணி விடலாம். சமூகத்தில் லைப் ஸ்டைல் ஒருத்தருக்கு ஒருத்தர் வித்தியாசப்படுகிறது.

நவநாகரீக மோகத்தில் திளைக்கும் ஆண், பெண்களை மையப்படுத்தி நாள்தோறும் புத்தம் புது டிசைன்ஸ்கள் அறிமுகமாகி வருகின்றன. இந்த டிசைன்ஸ்களை கொஞ்சம் உற்றுப்பார்த்தால் அவைகள் நம்முன்னோர்கள் பயன்படுத்தியத்திலிருந்து கொஞ்சம் வித்தியாசப்படுத்தி இன்றைய காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டதாகவே இருக்கும்.

இதனால் தான் லைப் ஸ்டைலை சைக்கிள் என்கிறார்கள். நாகரீக சுழற்றியில் மக்கள் சுழண்டு வருகிறார்கள்.

மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை என்று ஆசைகளை வகைப்படுத்தினாலும், பெண்களுக்கு வைர, தங்க நகைகள் மீதான ஆசைகள் (மோகம்) என்றுமே குறையாது எனலாம். சமூக அந்தஸ்துக்காக முன்பு வைர, தங்க அணிகலன்கள் அணிவிக்கப்பட்டன. ஆனால் இன்றோ அது நவநாகரீக உலக மோகத்தில் அழகை அழகுப்படுத்த அணியப்படுகின்றன. பெண்களைப் பொறுத்தவரைக்கும் எந்த உடை அணிகிறார்களோ அதற்கு மேட்ஜ்ஜாக நகைகளை அணிவது வாடிக்கையாக உள்ளது. இந்த ரகத்தில் ஆண்களில் சிலரும் இருக்கிறார்கள்.

வைரத்தின் விலையை எட்டிப்பிடிக்க முடியாததால் அதை பெரும்பாலான பெண்கள் அணிவதில்லை. இப்போது தங்கத்தின் விலையும் உச்சத்தில் இருப்பதால், உடைகளுக்கு ஏற்ப அணிகலன்களை தங்கத்தில் அணிவது இயலாத காரியம். இதனால் கவரிங் நகைகளை விரும்பி பெண்கள் அணிந்து வருகிறார்கள். இத்தகைய நகை அணியும் பழக்கம் நம்முடையவர்களுக்கு எப்படி வந்தது தெரியுமா என்றால் அது கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கிறது.

மன்னர்களின் அரசாட்சியில் கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. அதில் கோவில் கலையின் தாக்கத்திலிருந்தே உருவாகி இருக்கிறது தென்னிந்திய நகைகளின் டிசைன்கள். கோயிலில் உள்ள ஆண், பெண் தெய்வங்களுக்கு நகைகள் அணிவிக்கப்பட்டன. பிறகு அங்கு இருந்த நடன மாதர்கள் நகைகளை அணிந்தனr. இதன்பிறகு பரத நாட்டிய கலைஞர்கள் நகைகளை அணிந்தார்கள். நவீன காலத்துக்கு ஏற்ப நகைகளின் டிசைன்கள் மாறிக் கொண்டே வருகின்றன.

ஆண்களும், பெண்களும் அணிந்து வந்த அணிகலன்களுக்குள் வேறுபாடுகள் இருக்கின்றன. திருமணமான பெண்கள் தாலி (மாங்கல்யம்) அணிகிறார்கள். இந்த தாலி ஜாதி, மதத்துக்கு ஏற்ப மாறுப்படும். தாலிக்கு அடுத்தப்படியாக சமூகத்தில் செல்வாக்குடைய பெண்களின் கழுத்தில் நெக்லெஸ், காசுமாலை போன்ற அணிகலன்கள் காணப்படும். முல்லைமொட்டு மாலை என்ற அணிகலனையும் பெண்கள் விரும்பி அணிந்துள்ளனர். இது மல்லிகை மொட்டுக்களைப் போல தங்கத்தில் செய்து அணியும் செயின்தான் முல்லைமொட்டு மாலை என்கிறார்கள்.

காதுகளை அழகுப்படுத்த காதணிகள் அணிகிறார்கள் பெண்கள். தென்னிந்தியாவின் காதணிகளில் தண்டட்டி, முடிச்சு, பாம்படம் என பல வகைகள் உள்ளன. முடிச்சு, பாம்படம் போன்ற காதணி வகை நகைகள் தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், நெல்லை, குமரி மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த பெண்கள் அணிகிறார்கள். சதுரம், செவ்வகம், முக்கோணம் என பல வடிவங்களில், டிசைன்களில் இந்த பாம்பட காதணிகள் உள்ளன.

தண்டட்டி என்ற காதணிகள் என்பது தங்க நகைகளுக்குள் மெழுகு அடைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. இது திருமணத்துக்கு முன்பு பெண்கள் அணிந்திருக்கிறார்கள். 'பாம்படம்' என்ற காதணி, பாம்பின் தலையைப் போன்று உள்ள பாம்படம், சதுரம், உருளை, முக்கோணம் போன்ற டிசைன்களில் இருந்துள்ளன. இது ஒரு கனமான காதணி. இந்த கனத்தால் பாம்படம் அணிபவரின் காதுமடலில் உள்ள துளை பெரிதாகி மடல் கீழ் நோக்கி நீண்டுவிடும். பாம்பட காதணிகளை கிராமங்களில் வயதான பெண்கள் (பாட்டிகள்) அணிகிறார்கள். இந்த காதணிகளை அணியும் பழக்க வழக்கம் குறைந்து வருகிறது. பாம்பட பாட்டிகள்தான் இன்றும் கிராமத்து கதாநாயகிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

எத்தனையோ டிசைன்ஸ்கள் கொண்ட அணிகலன்கள் வந்த நிலையிலும் பாரம்பரிய பாம்பட காதணிக்கு நிகர் எதுவுமில்லை என்று அதை அணிந்த பாட்டிகள் சொல்கிறார்கள். இப்போதுள்ள இளைஞர்களிடையே காதில் நகை அணியும் பழக்கம் மீண்டும் தொற்றி இருக்கிறது. அதைப்போல என்றாவது ஒருநாள் பாம்பட காதணிகளின் மவுசு இந்த தலைமுறை பெண்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பாம்படம் போன்ற பெரியளவிலான காதணிகளை இன்றைய இளம் பெண்கள் அணிவது இதற்கு ஒரு முன்னோட்டம்.

-எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ