Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்கே நகர் இடைத்தேர்தல்: லப் டப்பிற்கு பதிலாக திக்... திக்... அதிமுக!

லைவி நிற்பதால் ஆர்.கே.நகர் தொகுதியில் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வேலை பார்க்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

சென்னை மாநகராட்சியின் 38, 39, 40, 41, 42, 43 மற்றும் 47 என மொத்தம் 7 வார்டுகள் ஆர்.கே.நகரில் அடங்கியிருக்கிறது. இந்த 7 வார்டுகளையும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என 59 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவுக்கு பிரித்து கொடுத்திருக்கிறார்கள். தொகுதிக்குள் மொத்தம் 227 வாக்குச் சாவடிகள் வருகின்றன. இந்த வாக்குச் சாவடிகள் 59 பேருக்கு பிரித்து ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி அதிகபட்சமாக 7 பூத்துகளும் குறைந்தபட்சம் ஒரு பூத்தும் திறமைக்கு தக்கப்படி தரப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, பழனியப்பன், காமராஜ், தங்கமணி, செந்தில் பாலாஜி, எம்.சி.சம்பத், வேலுமணி, சின்னையா, ரமணா, தோப்பு வெங்கடாசலம், விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்களுக்கு மட்டும் தலா 7 பூத்துகள் தரப்பட்டிருக்கிறது. அதாவது இவர்கள்தான் திறமையானவர்கள் என கணக்கில் அதிக பூத்துகள் அளித்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மோகன், செல்லூர் ராஜூ, ஜெயபால், முக்கூர் சுப்பிரமணியன், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, வீரமணி ஆகிய 7 அமைச்சர்களுக்கு தலா 6 பூத்துகள் தரப்பட்டிருக்கிறது. முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமாருக்கு 5 பூத்துகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தலா நான்கு பூத்துகள் ஒதுக்கப்பட்டவர்கள் லிஸ்டில் கோகுல இந்திரா, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், நா.பாலகங்கா எம்.பி இடம் பெற்றிருக்கிறார்கள்.

இவர்களுக்கு அடுத்தபடியாக வளர்மதி, எஸ்.பி.சண்முகநாதன், மேயர் சைதை துரைசாமி, கலைராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் விருகை ரவி, சமீபத்தில் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அருண்மொழி தேவன் ஆகியோருக்கு தலா மூன்று பூத்துகள் தரப்பட்டிருக்கிறது. தலா இரண்டு பூத்துகள் ஒதுக்கப்பட்டவர்கள் லிஸ்டில் அமைச்சர்கள் சுந்தர்ராஜ், என்.சுப்பிரமணியன், பூனாட்சி, அப்துல் ரஹீம், ஆர்.சின்னசாமி எம்.எல்.ஏ., எம்.பி.கள் டாக்டர் வேணுகோபால், சசிகலா புஷ்பா, குமார், விஜயகுமார், கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தளவாய் சுந்தரம், நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ.கள் ஜே.சி.டி.பிரபாகர், செந்தமிழன், மேயர் ராஜன் செல்லப்பா, துணை மேயர் பெஞ்சமின், ஆர்.லட்சுமணன், முத்துக்கருப்பன், குப்பன், முருகையா பாண்டியன், உடுமலை ராதாகிருஷ்ணன், அலெக்ஸாண்டர் இடம் பெற்றுள்ளனர்.

 

பொறுப்பாளர்கள் பட்டியலில் ஆக கடைசியாக இருப்பவர்கள் முன்னாள் அமைச்சர் சிவபதியும், தொழிற்சங்கத்தை சேர்ந்த கமலக்கண்ணனுமும்தான். இவர்களுக்கு ஒதுக்கப்பட்டது தலா ஒரு பூத். திறமை மட்டுமல்ல பசை உள்ள பார்ட்டிகளுக்குதான் அதிக பூத்துகள் தந்திருக்கிறார்கள். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அமைச்சர்கள் வளர்மதி, என்.சுப்பிரமணியன் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பூத்துகள் இரண்டில், அ.தி.மு.க.வைவிட தி.மு.க. கூடுதல் ஓட்டுக்கள் வாங்கின. அந்த பயத்தால் என்னவோ வளர்மதிக்கு மூன்று பூத்துகளும், என்.சுப்பிரமணியனுக்கு இரண்டு பூத்துகள் மட்டுமே தரப்பட்டிருக்கிறது. இதிலும் அவர்கள் சொதப்பினால் முன்னாள் மந்திரிகள் ஆக்கப்படலாம்.

சும்மாவாச்சுக்கும் ஏரியாவை பிரித்து தந்துவிடாமல், எந்த ஏரியாவில் எந்த சமூகம் அதிகமாக வசிக்கிறார்களோ, அந்த சமூகத்தை சேர்ந்தவரைதான் பொறுப்பாளராக போட்டிருக்கிறார்கள். உதாரணமாக ஆதி திராவிடர்கள் வசிக்கும் ஏரியாவில் ஆதிதிராவிடர் அமைச்சர், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அமைச்சர் என ஆர்.கே.நகரை பிளாட் போட்டு கச்சிதமாக பிரித்து தந்திருக்கிறார்கள்.

இந்த 59 பொறுப்பாளர்களும், தங்கள் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, பகுதி நிர்வாகிகளுக்கு தங்கள் பொறுப்பில் உள்ள பூத்துகளை பிரித்து கொடுத்து வேலை பார்க்க சொல்லியிருக்கிறார்கள். இந்த நிர்வாகிகள் எல்லோரும் தங்கள் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்மட்ட நிர்வாகிகளை எல்லாம் சென்னைக்கு அழைத்து தங்க வைத்து, வீடுவாரியாக பிரித்து கொடுத்துள்ளார்கள்.

ஆர்.கே.நகரில் ஜெயிப்பது பிரச்னை இல்லை. அ.தி.மு.க.வுக்கு விழும் ஓட்டுகள் குறைந்தால் பொறுப்பாளர் தொடங்கி, கீழ்மட்ட நிர்வாகிகள் வரை இந்த சங்கிலித் தொடர் ஆட்கள் சீட்டு கட்டு போல சரிந்துவிடுவார்கள். அரசியல் எதிர்காலம் கேள்விக் குறி ஆகிவிடும் என்பதால் கரன்ஸிகளை கொட்டி தேர்தல் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை என்ற போதும், 'இதய தெய்வம் நிற்கிறாரே...!' என பயத்தில் நிர்வாகிகள் இதயம் லப் டப்பிற்கு பதிலாக 'திக்... திக்...' என துடித்துக் கொண்டிருக்கிறது.

இவர்கள் எழுதிய பரீட்சைக்கு தேர்தல் ரிசல்ட் பதில் சொல்லும். இதில் பாஸ் ஆனாலும், குறைந்த மார்க் வாங்கியிருந்தாலும் கார்டனை பொறுத்தவரை பெயில்தான்.

வார்டு, அதன் பொறுப்பாளர்கள் மற்றும் எல்லைகள் விபரம்:

வார்டு - 38

பொறுப்பாளர்கள்: ஓ.பன்னீர்செல்வம், செல்லூர் ராஜூ, அப்துல் ரஹீம், குமார், எஸ்.ஆர்.விஜயகுமார், பாலகங்கா, வி.பி.கலைராஜன், மனோகரன், சிவபதி, தளவாய் சுந்தரம், ராஜன் செல்லப்பா, முருகையா பாண்டியன்

எல்லைகள்: ரயில்வே லைன், இந்திரா காந்தி நகர், பெரியார் நகர், வைத்தியநாதன் மேம்பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை, மணலி சாலை, பக்கிங்காம் கால்வாய்.

வார்டு - 39

பொறுப்பாளர்கள்: பழனியப்பன், மோகன், காமராஜ், செந்தில் பாலாஜி, எம்.சி.சம்பத், எஸ்.பி.வேலுமணி

எல்லைகள்: திருவொற்றியூர் நெடுஞ்சாலை, வடக்கு எல்லை சாலை, அண்ணா நகர், நாகூரான் தோட்டம், சூரியநாராயணன் செட்டி சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, இந்திராகாந்தி நகர். 

வார்டு - 40

பொறுப்பாளர்கள்: எடப்பாடி பழனிசாமி, முக்கூர் சுப்பிரமணியன், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, பூனாட்சி, பொள்ளாச்சி ஜெயராமன், சின்னசாமி, ஆர்.கமலக்கண்ணன், சசிகலா புஷ்பா, ஜே.சி.டி.பிரபாகரன், கே.பி.முனுசாமி

எல்லைகள்: குறுக்கு சாலை, அருணாச்சலேஸ்வரர் கோவில் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, செல்வ விநாயகர் கோவில் தெரு, பழைய வைத்தியநாதன் தெரு.
 
வார்டு - 41

பொறுப்பாளர்கள்: நத்தம் விசுவநாதன், எஸ்.பி. சண்முகநாதன், என்.சுப்பிரமணியன், தோப்பு வெங்கடாசலம், அலெக்ஸாண்டர், சைதை துரைசாமி, வி.பி.கலைராஜன், விருகை ரவி

எல்லைகள்: கொடுங்கையூர், பக்கிங்காம், கேப்டன் காட்டன் கால்வாய்கள், மணலி சாலை, எண்ணூர் நெடுஞ்சாலை, வைத்தியநாதன் மேம்பாலம், ரயில்வே லைன், கத்திவாக்கம் நெடுஞ்சாலை, சிகிரிந்த பாளையம், காமராஜர் நகர், ஜெ.ஜெ. நகர்.
 
வார்டு - 42

பொறுப்பாளர்கள்: வளர்மதி, தங்கமணி, சுந்தர்ராஜ், பொள்ளாச்சி ஜெயராமன், பெஞ்சமின், செங்கோட்டைன், சி.வி.சண்முகம், டாக்டர் லட்சுமணன், அருண்மொழி தேவன், உடுமலை ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், செந்தமிழன்

எல்லைகள்: பழைய வைத்தியநாதன் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, செல்லப்பா குடியிருப்பு. 

வார்டு - 43

பொறுப்பாளர்கள்: கோகுல இந்திரா, ஜெயபால், கே.சி.வீரமணி, டாக்டர் வேணுகோபால், ஜெயக்குமார், எம்.எஸ்.எம்.ஆனந்தன், குப்பன்

எல்லைகள்: பாலகிருஷ்ணன் தெரு, சூரிய நாராயணன் செட்டி தெரு, வங்காள விரிகுடா, காசி தோட்டம் அமராவதிபுரம், முத்தமிழ் நகர்.

வார்டு - 47

பொறுப்பாளர்கள்: வைத்தியலிங்கம், சின்னையா, ரமணா, விஜயபாஸ்கர், பாலகங்கா, முத்துக்கருப்பன்

எல்லைகள்: ஜெ.ஜெ. நகர், காமராஜர் நகர், சிகிரிந்த பாளையம், கத்திவாக்கம் நெடுஞ்சாலை, டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர்.

-எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close