Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2ஜி, 3ஜி-யை மிஞ்சும் ஹெல்மெட் கொள்ளை... அமுதா ஐஏஎஸ்ஸின் அறிவிப்பு வெத்துவேட்டா?

ந்த ஹெல்மெட்டை வைத்துக் கொண்டு நடக்கும் கொள்ளை, 2ஜி, 3ஜி எல்லாம் பிச்சை வாங்கும் அளவுக்குப் போய்விடும் போலிருக்கிறது.

‘தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கடுமையாக அமல்படுத்தும் முஸ்தீபுகளில் இறங்கியது தமிழக அரசு. இதையடுத்து, கடந்த சில வாரங்களாக ஹெல்மெட் விற்பனை சூடுபிடித்தது. இதிலும், ஜூலை 1 நெருங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பாக இந்த விற்பனை உச்சத்தைத்தொட, முதல் நாள் வரை 400 ரூபாய்க்கு விற்ற ஹெல்மெட்டுகள் 1000 ரூபாயைத் தாண்டின. 1000 ரூபாய் ஹெல்மெட்டுகள் 2000, 3000 என்று வாயில் வந்த விலைக்கெல்லாம் விற்பனையாக ஆரம்பித்தன. இப்படியெல்லாம் கொள்ளை விலைக்கு விற்கப்பட்டாலும்கூட, 'போலீஸுக்கு கொடுத்து அழறதவிட இவனுங்களுக்கு கொடுத்து அழலாம்' என்று கடைகளை முற்றுகையிட்டனர். அப்படியும்கூட பல கடைகளில் ஸ்டாக் தீர்ந்து போய், கடைகள் மூடப்பட்டன. சென்னையில் பல கடைகளில் போலீஸ் நின்று க்யூவை ஒழுங்குபடுத்தும் கதையெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது, இன்று வரையிலும்.

இந்நிலையில், இந்த ஹெல்மெட் கொள்ளைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் இருந்து குற்றச்சாட்டுகள் எழவே, ‘தமிழகத்தில் ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்த தமிழக தொழிலாளர் நலத்துறை ஆணையர் அமுதா ஐ.ஏ.எஸ்., அதிக விலைக்கு விற்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தொழிலாளர் துறை ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 30 இடங்களில் உள்ள மாவட்ட தொழிலாளர் ஆய்வளார்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சொல்லி அவர்களின் செல்போன் எண்களையும் அமுதா வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு இந்த எண்களுக்கு போன் செய்தால்... 'நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் நபர் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார்’, 'நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது’ என்கிற பதில்களாகவேதான் ஒலிக்கின்றன. ஒருவேளை போனை எடுத்தால், ம் சொல்லுங்க... சரிங்க... பார்ப்போம்ங்க... என்பதாகவே பெரும்பாலும் பதில்கள் வருகின்றன.

இதோ... இதற்கான முயற்சியில் இன்று காலையிலிருந்து இறங்கிய சென்னை வாசகர் உமாபதியின் அனுபவம். இது, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

''நான் சென்னை, ரங்கநாதன் தெரு, சரவணா ஸ்டோரில் 29-ம் தேதி இரண்டு ஹெல்மெட் வாங்கினேன். வீட்டுக்குப் போய் பார்த்தபோதுதான் தெரிந்தது, 390 ரூபாய் ஹெல்மெட், 690 ரூபாய் என்று என் தலையில் கட்டப்பட்ட விஷயம். ஹெல்மெட்டின் பாக்ஸில் அதன் எம்.ஆர்.பி. விலை கிட்டத்தட்ட 415 ரூபாய் என்றுதான் போட்டுள்ளது. அதை அவர்கள் அழித்துள்ளதால் சரியாக தெரியவில்லை. அதற்கு மேலாக சரவணா ஸ்டோரின் ஸ்டிக்கரில் 390 ரூபாய் என்று போட்டுள்ளனர். இதை அழிக்க மறந்துவிட்டனர். அதற்கு கீழே ஒரு மஞ்சள் தாளில் 690 ரூபாய் என்று ஒட்டி விற்கிறார்கள்.

இப்படி ஏமாற்றி விற்பனை செய்யப்பட்ட ஹெல்மெட் குறித்த ஆதாரத்தோடு.. புகார் அளிப்பதற்காக கொடுக்கப்பட்ட தொழிலாளர் ஆய்வாளரிடம் (சென்னை 2 வட்டம்) புகார் அளிக்க (94453 98739) இன்று காலை 7 மணிக்கு தொடர்பு கொண்டேன். சுவிட்ச்டு ஆஃப் என்றே வந்தது. அலுவலக நேரமான 10 மணிக்கு தொடர்பு கொண்டேன். அப்போதும் ஸ்விட்டு ஆஃப் என்றே வந்தது. மீண்டும் மீண்டும் இப்படியே வரவே, 11.30 மணிக்குப் பிறகு, தொழிலாளர் துறை ஆணையர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இதைப் பற்றி சொன்னேன். அதன் பிறகுதான் அந்த செல்போன் எண் ஆன் செய்யப்பட்டது. ஆனால், போன் கால்கள் எடுக்கப்படவில்லை. விடாமல் முயற்சித்துக் கொண்டே இருந்தேன்.

ஒரு கட்டத்தில் 12 மணி வாக்கில் போன் எடுக்கப்பட்டது. அதை எடுத்தவர் தன் பேரையும் சொல்லவில்லை. என் பெயரையும் கேட்கவில்லை. என்ன புகார் என்று மட்டும் கேட்டவர், அதற்கான நடவடிக்கை குறித்து நான் எப்படி தெரிந்து கொள்வது என்பதற்கான வழிமுறைகளையோ, நான் புகார் செய்ததற்கான ஆதாரம் மற்றும் தீர்வு குறித்தோ எதுவும் சொல்லவில்லை. இதைப் பற்றி கேட்டபோது, ‘இதுபோல தமிழ்நாடு முழுக்க இருந்த எங்களுக்கு எக்கச்சக்கமான புகார் வருது. எல்லாத்தையும் சரி செய்வோம். நீங்க ஒரு வாரம் கழிச்சு போன் பண்ணுங்க’ என்று கடமைக்கு சொன்னார். இப்படி சொன்னால் எப்படி சார் என்று கேட்டதற்கு, அலுவலக விலாசத்தைக் கொடுத்துவிட்டு, அழைப்பை துண்டித்துவிட்டார்.

ம்.. ரிஜிஸ்டர் போஸ்டில் புகார் கடிதங்களை அனுப்பினாலே வரவில்லை என்று சொல்லி விரட்டி அடிக்கும் அரசு அலுவலர்கள்தான் இங்கே அதிகம். அப்படியிருக்க ஒரே ஒரு போனை வைத்துக் கொண்டு நான் இவர்களிடம் போய் போராட முடியுமா? எனக்கென்னவோ, எத்தனை கடைகள் இப்படி கொள்ளையடித்தன என்று தெரிந்து கொண்டு, அங்கெல்லாம் போய் வசூல் வேட்டை நடத்துவதற்காக இப்படி அறிவித்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது’’ என்ற உமாபதி,

''நான், அந்தக் கடையிலயே ஹெல்மெட்டை திருப்பிக் கொடுத்து, பணத்தை வாங்கிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், ‘கொள்ளையடிச்சது அடிச்சுட்டானுங்க, இவனுங்க கூடவெல்லாம் போராட முடியுமா. அப்படியே நீங்க ஹெல்மெட்ட திருப்பிக் கொடுத்தாலும் இன்னொரு கடையிலயும் இதே கொள்ளை விலைக்குத்தான் வாங்கணும். இல்லாட்டி போலீஸுக்கு தெண்டம் அழணும். பேசாம விட்டுத் தொலைங்க’னு வீட்டுல சொன்னாங்க.

அதனால, இந்த விஷயத்தை நுகர்வோர் நீதிமன்றத்துக்கு கொண்டு போக இருந்தேன். காரணம்... அன்றைய தினம் கடைக்கு போனபோது, வாயிலில் நின்ற காவல்காரர், ‘என்ன ஹெல்மெட்டா... காலையில 2000 ஹெல்மெட் வந்துச்சு. 12 மணிக்கெல்லாம் தீர்ந்து போச்சு. அதுக்குப் பிறகு லோடு வந்திருக்கு... சீக்கிரம் போங்க தீர்ந்துட போகுது‘ என்று சொன்னார். இதை வைத்து கணக்குப் போட்டபோது, கிட்டத்தட்ட சுளையாக 6 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதை சும்மா விடக்கூடாது என்றுதான் நுகர்வோர் நீதிமன்றம் போக திட்டமிட்டேன்.

இதற்கிடையில இப்படி அரசாங்கமே அறிவிக்கவும்... ஆகா, வந்துவிட்டது தீர்வு. தமிழக அரசாங்கமே நமக்கு கைகொடுக்கிறதே என்றுதான் புகார் செய்யும் வேலையில் இறங்கினேன். இதனால், காலையில் இருந்து என்னுடைய அரை நாள் பிழைப்பு போனதுதான் மிச்சம். ஏதோ கடமைக்காகத்தான் இப்படியெல்லாம் அறிவிப்பை வெளியிடுகிறார்கள். மக்களை முட்டாளாக்க செய்யப்பட்ட இன்னொரு நடவடிக்கைதான் இது” என்று நொந்துகொண்டார் வாசகர்.

ஒரு கடையிலேயே அதுவும் இரண்டு மணி நேரத்தில் இப்படி 6 லட்சம் கொள்ளை என்றால், அதே கடையில் காலையிலிருந்து எத்தனை லட்சங்கள்? சென்னை முழுக்க இருக்கும் கடைகளில் எத்தனை கோடிகள்? தமிழகம் முழுக்க இருக்கும் கடைகளில் எத்தனை எத்தனை கோடி கோடிகள்? 2ஜி, 3ஜி அதிமுகஜி, திமுகஜி எல்லாம் பிச்சை வாங்கணும் போலிருக்கே!

இது தொடர்பாக சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திடம் பேசியபோது, ''ஹெல்மெட் நாங்க விக்கிறது இல்லையே'' என்ற பதில் கிடைத்தது. செம காமெடி!

இதைப்பற்றி தொழிலாளர் நலத்துறை ஆணையர் அமுதாவிடம் நாம் கேட்டபோது, ''இப்போதுதான் நாங்கள் தொலைபேசி வாயிலாக புகார்களை கேட்டு வருகிறோம். அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இருக்கிறோம். இப்போதைக்கு கடைக்காரர்களை பயமுறுத்தவேண்டும் என்பதுதான் நோக்கம். அது நடந்துகொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல்.. மக்களே அதிக விலை வைத்து ஹெல்மெட் விற்கும் கடைக்காரர்களை இப்போது மிரட்ட ஆரம்பித்துள்ளார்கள். தொலைபேசி வாயிலாக புகார்களை எடுத்து அந்தந்த கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகம் முழுவதும் ஏராளமான புகார்கள் வந்துகொண்டுள்ளன.

தொலைபேசி புகார்களை வைத்து தீர்வு அளிக்கமுடியாது என்பதால்தான் அவர் கூடுதல் தகவல் எதுவும் விசாரிக்காமல்.. கடையின் பெயரை மட்டும் கேட்டுள்ளார் (பிறகு எதற்காக தொலைபேசி வாயிலாக புகார் தரச் சொல்லி பத்திரிகைகளில் பரபரப்புக் கிளப்பினார்களோ?!) கூடிய விரைவில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து ஹெல்மெட் விலை விஷயத்தில் நடக்கும் கொள்ளைகளை தடுப்போம்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தீர்வு வேண்டும் என்றால் மாவட்டம்தோறும் உள்ள தொழிலாளர் ஆய்வாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவேண்டும். அதில், ஹெல்மெட்டில் ஒட்டியுள்ள விலைக்கான ஆதாரமும், கூடுதல் பணம் கொடுத்து வாங்கிய பில்லும் கட்டாயம் இணைக்கவேண்டும்” என்றார்.

மக்களே... இதையெல்லாம் கேட்டதும், ஹெல்மெட் போடாமலே தலையில உள்ள முடியெல்லாம் கொட்ட ஆரம்பிக்குதா? சரி, நடக்கிறது நடக்கட்டும். முடிஞ்சளவுக்கு உங்க புகார்களை எழுத்துப்பூர்வமா, ரிஜிஸ்டர் தபால்ல அனுப்புங்க. இங்கே புகார் சொன்ன உமாபதிக்கும் இந்த விஷயத்தைத் தெரியப்படுத்திவிட்டோம்.

ம்... ஹெல்மெட்ட மாட்டிக்கிட்டு (ஊழல்) மலையில முட்டுவோம். உடைஞ்சா மலை, இல்லாட்டி மண்டை!

இதைவிட வேற என்னத்தை சொல்றது?!

- சா.வடிவரசு

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close