Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-2)

தூக்கில் தொங்கும் இரு வீரர்கள்!

கால்கள் பிணைக்கப்பட்டு, இரண்டு கைகளும் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் தலைப்பாகையுடன் இருவர் கயிற்றில் தொங்கவிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பின் இருக்கும் வரலாறு, முழுக்க முழுக்க சோகத்தால் நிரம்பியது. இவர்களைச் சுற்றி இருக்கும் பத்து வீரர்களும் பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பெனி ராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்களே. 1858-ல் சிப்பாய் கலகம் முடிவுக்கு வந்த பிறகு பிரிட்டிஷுக்கு எதிராகப் போராடிய இந்திய வீரர்களைத் தூக்கில் போடும்போது போட்டோகிராபர் பெலிஸ் பியட்டோவால் (Felice Beato) எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படமே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீரியத்தை உலகறியச் செய்தது.

1857 மே மாதம் 10-ம் தேதி டெல்லிக்கு அருகே, மீரட்டில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் உருவான இந்தக் கலகம் கங்கை சமவெளி, மத்திய இந்தியா, உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் டெல்லி ஆகிய இடங்களுக்குக் காட்டுத்தீயாகப் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய பிறகு, 1858 ஜூன் 20-ம் தேதிதான் முடிவுக்கு வந்தது. கலகமாகத் தொடங்கி புரட்சியாக உருவெடுத்த இந்தப் போராட்டம் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது மட்டுமல்லாமல், கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி பார்வையில் இந்தியா வரக் காரணமாக அமைந்தது.

1820-ல் இந்தியாவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலை கலாசாரத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் மூலமாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிரிட்டிஷ், பிரிந்திருந்த பல்வேறு சமஸ்தான நிலப்பரப்புக்களையும் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டது. மேலும், ‘லார்டு டெலோசி’யின் மறுப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் வாரிசு இல்லாத இந்திய அரசர்களின் நிலப்பரப்புக்களை, தன்னுடன் இணைத்துக்கொள்ள ஆரம்பித்தது. இதனால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக குறுநில மன்னர்களின் அதிருப்தி வலுக்கத் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் பிராமணர்களுக்கு சமஸ்தானத்தில் கிடைத்துக்கொண்டிருந்த அந்தஸ்துகளும் வருவாயும் இச்செயல்களால் அதிகமாக பாதிக்கப்பட்டது.

பெண் விடுதலை, பெண்களுக்கு மறுமணம் போன்றவற்றை ஆங்கிலேயர்கள் சட்டரீதியாக அங்கீகரித்து இந்துக்களின் நம்பிக்கைகளை உடைத்தெறிய முயற்சி செய்தனர். சாதி கட்டமைப்புகளை ஒதுக்கி கிறிஸ்தவ மதத்தை பரப்பியதோடு, பாரம்பரிய இந்து, இஸ்லாமிய கல்வி முறைகளை மேற்கத்திய மயமாக்கியது, பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில், வங்காள ராணுவத்தில் ’என்ஃபீல்ட் ரைஃபில்’ (Enfield Rifle) என்ற துப்பாக்கியை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ். நீண்ட நாட்களாக குமுறிக் கொண்டிருந்த மக்கள் துள்ளியெழ உடனடிக் காரணமாக இது அமைந்தது. ஏனெனில், இந்தத் துப்பாக்கியின் தோட்டா முனையில் மாடு மற்றும் பன்றிகளின் இறைச்சியால் ஆன குப்பிகளை கடித்துத் துப்ப வேண்டியிருந்தது. அதனால், இந்து மற்றும் இஸ்லாமிய சிப்பாய்கள் கடுமையான கோபம் அடைந்தனர். இவற்றின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகத்தான் 1857-ல் மங்கள் பாண்டே என்கிற 29 வயது சிப்பாய், மேற்குவங்கப் பகுதியின் ராணுவத் தளத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரியைத் துப்பாக்கியால் சுட்டார். இதனைத் தொடர்ந்து மங்கள் பாண்டே உடனே கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். சிப்பாய்க் கலகம் உருவாக இந்தச் சம்பவமே தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

இந்தப் புகைப்படத்தை எடுத்த பெலிஸ் பியட்டோ, பிரிட்டிஷ் இத்தாலியனைச் சேர்ந்தவர். இவர் 1857-ல் இந்தியாவில் நடந்த கலவரத்தைப் படம் பிடிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தால் லண்டனில் இருந்து அனுப்பப்பட்டவர். இந்தக் காலகட்டத்தில் இவர் எடுத்த அறுபது புகைப்படங்கள்தான் இன்றளவும் சிப்பாய் கலவரத்தின் நேரடி சாட்சியாக இருக்கிறது. இந்தப் புகைப்படம் எடுப்பதற்கு நீண்ட நேரம் ஒளி ஊடுறுவும் முறையை (Long Exposure time) பயன்படுத்தினார் பியட்டோ. கல்கத்தா வந்து இறங்கியவர் பல இந்தியர்களை வேலைக்கு அமர்த்தி இழுவண்டியின் மூலம் வட இந்தியாவை நோக்கி பயணித்தார். செல்லும் வழி நெடுகிலும் சிப்பாய் கலகத்தால் ஏற்பட்ட சிதைவுகளையும் அழிவுகளையும் பதிவு செய்துகொண்டே சென்றார்.

சிப்பாய் கலகத்துக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பிரிட்டிஷாரை கூறுபோட்டவர்கள் தமிழர்கள். இருந்தபோதிலும், 1857-ல் நடந்த சிப்பாய் புரட்சியே முதல் சுதந்திரப் போராக இன்றளவும் பேசப்படுவதற்குக் காரணம் உலகத்தின் முதல் போர் புகைப்படக்காரரான பெலிசி பியட்டோ எடுத்த இந்தப் புகைப்படம்தான்.

- புகைப்படம் பேசும்

- ஜெ.முருகன்

முந்தைய தொடர்களைப் படிக்க...

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close