Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

#StandWithSagayam - தடயங்களைக் காக்க தூங்காமல் விழித்திருந்த சகாயம் டீம்!

நேர்மை தவறா ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் சில மாதங்களுக்கு முன்பு தைரியமாக வெளிக் கொண்டு வந்த கிரனைட் பூதம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. 

பணிமாற்றம், அலைக்கழிப்பு, ஏளனம், அவமரியாதை என சகாயம் சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இன்னும் இரண்டு நாட்களில் கிரணைட் முறைக்கேட்டின் அறிக்கையை உயர்நீதிமன்றத்திடம் சமர்பிக்க வேண்டும் சகாயம். 

 
Sagayam IAS at PRP Case location
 

இந்நிலையில் சகாயத்தின் விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். 

 

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்த விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் குழுவினரிடம், மேலுார் அடுத்த இ.மலம்பட்டி கிராமம், மணிமுத்தாறு பகுதியில் இருவர் நரபலி கொடுத்து புதைக்கப்பட்டதாக சேவற்கொடியோன் என்பவர் புகார் செய்தார். அதன்பேரில், மணிமுத்தாறு சுடுகாட்டில் புதைக்கப்பட்ட இருவரின் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய சகாயம் குழுவினர் இன்று காலை 10:00 மணிக்கு சுடுகாட்டிற்கு வந்தனர். ஆனால், சம்பவ இடத்தை தோண்டி, பிரேதத்தை வெளியே எடுக்க போலீசார் ஒத்துழைக்கவில்லை. மாலை 6:00 மணி ஆனபோதிலும், போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

 
Sagayam at PRP case location
 

இதுகுறித்து சகாயம் குழுவினர் கூறுகையில், இன்று இரவு எத்தனை மணி நேரமானலும், புகாரில் குறிப்பிட்ட இடத்தை தோண்டி எடுத்து உடலை ஆய்வு செய்த பிறகே இங்கிருந்து செல்வோம் எனக் கூறி சுடுகாட்டிலேயே முகாமிட்டனர். உடலை எடுக்காமல் சென்றுவிட்டால், தடயங்கள் அழிக்கப்படும் அபாயமும் உள்ளதாகக் கூறுகிறார்கள். இந்த சம்பவத்தினால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகி்றது. 

 

Sagayam IAS at PRP case location - Food

 

நன்றி: Tamil Flash News

 

படங்கள்: விஜயகுமார்

இந்நிலையில், சகாயத்தின் போராட்டத்துக்கு தமிழ்மக்கள் ட்விட்டரில் தங்கள் ஆதரவைத் தெரிவித்துவருகிறார்கள். #StandWithSagayam ஹேஷ்டேக்கில் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டுவருகிறார்கள். அதன் லைவ் ட்வீட்ஸ் இங்கே!

எடிட்டர் சாய்ஸ்

MUST READ