Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி: ஜாலி,கேலி மீம்ஸ் & செல்ஃபி

ட்சிக்கு வந்து ஓராண்டை தாண்டிவிட்டது மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு. இந்நிலையில் நாடெங்கும் களைகட்டியுள்ளது மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள். மோடியை தங்களின் சாதனை நாயகனாக பா.ஜனதாவினர் ஒருபுறம் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடினாலும், மோடி மீதான சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை.

அதே சமயம் கடந்த ஆகஸ்ட் மாதம் முடிய அவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள், அப்போது கையெழுத்தான ஒப்பந்தங்கள், மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவான தொகை எவ்வளவு என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல், மோடி மற்றும் அவரது அரசின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான ஜாலி, கேலி மீம்ஸ்  & செல்ஃபிக்கள் என  மினி அலசல் இங்கே....

மோடியும்... சர்ச்சைகளும்!


மோடி பிரதமராக பொறுப்பேற்ற இதுநாள் வரை அவரது சாதனைகளை அவரது ஆதரவுப் பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக பட்டியலிட்டாலும், மோடியை சுற்றிச் சுழன்றடிக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. குஜராத் முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட கலவரம் முதல் லலித் மோடிக்கு பா.ஜ.க. அரசு உதவியது வரையில் மோடி மீதான சர்ச்சைகள் அடுத்தடுத்து கிளம்பியபடியே உள்ளன. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரதமர் வேட்பாளராக உற்சாகமாக தயாரான மோடி, வேட்புமனுவில் நிரப்பிய ஒரு தகவலால் பரபரப்பான மனிதராகிவிட்டார் பல மாதங்களுக்கு. அதுவரை தனது மனைவி பெயரை எங்கும் குறிப்பிடாத நரேந்திர மோடி, வேட்புமனுத் தாக்கலின்போது பிரமாணப் பத்திரம் தாக்கலின்போது மனைவி பெயர் யசோதா பென் என்று குறிப்பிட்டதுதான் சர்ச்சைக்கு வித்திட்டது.

மோடி, மனைவியை பிரிந்து வாழ்வதை குறிப்பிட்ட எதிர்கட்சிகள், மனைவியை வைத்து காப்பாற்ற முடியாதவரா, நாட்டைக் காப்பாற்றப் போகிறார் என்று மேடைதோறும் முழங்கின. தனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யசோதா பென் கேள்வி எழுப்பி இருந்ததை தூர்தர்ஷனின் குஜராத் மொழி சேனல் ஒளிபரப்பியது வெற்றிபெற்று அதிகாரத்திற்கு வந்த மோடிக்கு இன்னும் சிக்கலை நீட்டித்துவிட்டது. செய்தியை ஒளிபரப்பு செய்த உதவி இயக்குநர் வனோலின் பணியிலிருந்து ஓய்வு பெற 2 ஆண்டுகளே உள்ள நிலையில், அந்த அதிகாரி அந்தமானில் உள்ள போர்ட்பிளேருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதுவும் சர்ச்சைகளை அதிகப்படுத்தியது.


மேலும் சர்ச்சைகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

27 வெளிநாட்டு பயணம்... நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள்!

கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 27 முறை வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் நரேந்திர மோடி. இந்த பயணத்தின்போது முக்கிய நாடுகளுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் விவரங்கள் குறித்த ஒரு மினி ஸ்கேன் ரிப்போர்ட் இங்கே...

பூட்டான் (ஜூன் 15 - 16, 2014) : 

பூட்டான் மன்னர்  ஜிக்மே கேசர் நம்ஜியேல் வாங்சங்கின் அழைப்பின்பேரில் அந்நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி. இரு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்துகொள்ளப்பட்ட ஒப்ப்பந்தங்கள் கூட்டறிக்கையாக வெளியிடப்பட்டன.

அவற்றின் முக்கிய அம்சங்கள்: 

 *   இந்தியாவிலிருந்து பூடானுக்கு பால் பவுடர், கோதுமை, சமையல் எண்ணெய், தானியங்கள், அரிசி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கான விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்.

 *  தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் ஒத்துழைப்புடனும், கூட்டுறவுடனும் தொடர்ந்து பணியாற்றுவதற்கு இரண்டு நாடுகளும் உடன்பாடு.

 *  இருநாடுகளும் தமது பிரதேசங்களை, எதிரி நாடுகள் தமது தேசிய நலனுக்காக பயன்படுத்துவதை அனுமதிப்பதில்லை

மற்ற நாடுகளுக்கு மோடி மேற்கொண்ட பயணங்கள் ஒப்பந்தங்கள் குறித்து படிக்க இங்கே க்ளிக் செய்க...

மோடி வெளிநாட்டு பயணம்...எவ்வளவுதான் செலவாச்சு?


லோகேஷ் பத்ரா என்பவர்தான், மோடியின் வெளிநாட்டு செலவு விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒரு ஆண்டில் (ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை) 20 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்காக ரூ.37.22 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது. அதிகமாக செலவு செய்த நாடு ஆஸ்திரேலியா. செலவிடப்பட்ட தொகை ரூ. 8.91 கோடி. குறைவாக செலவு செய்த நாடு பூடான்.  செலவிடப்பட்ட தொகை ரூ. 41.33 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்செல்ஃபி with மோடி...

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

மோடியின் செல்ஃபிகள் என்றே தனி புத்தகம் போடும் அளவுக்கு அவருடைய செல்ஃபி-க்கள் உலகப் புகழ் பெற்றவை.  நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும்போதுகூட பி.ஜே.பி சின்னமான தாமரையுடன் செல்ஃபி எடுத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர். இருந்தும் சளைக்காமல் உள்நாடு, வெளீநாடு என்று தான் போகும் இடமெல்லாம் செல்ஃபி எடுத்து 'செஃல்பி பிரதமர்' என்று பெயர் பெற்றிருக்கிறார் மோடி. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் எத்தனை செல்ஃபிக்கள் எடுப்பாரோ?

ஹலோ... ஒபாமாவா...:?' மோடி மீம்ஸ்

மேலும் மீம்ஸுக்கு  க்ளிக் செய்க..

சாதாரணமாகவே ஒருவர் சிக்கிக்கொண்டால் நம்மூர் இணைய பார்ட்டிகள், 'மச்சான் இன்னிக்கு ஒருத்தன் சிக்கிட்டாண்டா... இன்னைக்கு பூரா வெச்சு செய்வோம்' என்று ரவுண்டு கட்டி செமத்தியாக கலாய்ப்பார்கள். அதுவும் அடிக்கடி வெளிநாட்டு பயணம், போகும் இடமெல்லாம் செல்ஃபிக்கள், தொட்ட இடமெல்லாம் சர்ச்சைகள் என்று வான்ட்டடாக வம்பில் சிக்கும் பிரதமர் கிடைத்தால் சும்மா விடுவார்களா? இணையமெங்கும் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் மோடி மீம்ஸ்தான். நமக்கு மொழியா முக்கியம்? நீங்கள் ஏற்கெனவே ரசித்திருந்தாலும், மோடியின் பிறந்த நாளில் அந்த மீம்ஸ்களை மீண்டும் ஒருமுறை ரசியுங்கள்.  

 - விகடன் நியூஸ் டீம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close