Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை மழைவெள்ளம்... 1943 ம் ஆண்டு ப்ளாஷ்பேக்!

ந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சென்னையை மட்டுமில்லாமல், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைப் புரட்டிப்போட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது. 19 நாட்களாக தினமும் விட்டு விட்டும், தொடர்ந்தும் கொட்டிய வான அமுதம் அளவுக்கு மீறி நஞ்சானது. இடி,மின்னல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 204 பேர் உயிரிழந்துள்ளதாக வந்த செய்திகள் அச்சமூட்டுகின்றன. 

'இப்போது மட்டும்தான் மழைவெள்ளம் மக்களைப் பாடாய்ப்படுத்துகிறதா... இல்லை இதற்கு முன்பு இது போல நடந்துள்ளதா?' என்ற கேள்வி மனதில் அலையடித்தது. அதற்கான பதிலை தேடியதில் கிடைத்ததே இந்த ப்ளாஷ்பேக்...

சரியாக 1943 -ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கொட்டிய வடகிழக்குப் பருவமழை, சென்னையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. அப்போதைய சென்னை, தற்காலத்து கிரேட்டர் சென்னை அல்ல. அப்போது மெட்ரோ ரயில் ஓடவில்லை. சாலைகளில் நெருக்கியடிக்கும் போக்குவரத்து நெரிசல் இல்லை. நீரோட்டப் பாதைகளை, ஆறு மற்றும்  ஏரிகளின் மாறுகால் பாயும் வழிகளை ஆக்கிரமித்து ஐ.டி.பார்க், நட்சத்திர விடுதிகள், பள்ளிகள், கல்லூரிகள், அதிநவீன அடுக்குமாடி குடியிருப்புகள், கார் உற்பத்தி தொழிற்சாலைகள் போன்றவை கட்டப்படவில்லை.

அதிலும் மக்களின் வாழ்விடங்களைச் சுருக்கியும், நத்தம் புறம்போக்கு இடங்களை வளைத்தும்  சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து " சிறப்பு சேவை" எதையும் அப்போதைய அரசு செய்யவில்லை. இருந்த போதிலும் வடகிழக்குப் பருவமழை வெள்ளப் பெருக்கில் 1943- ம் ஆண்டில் சென்னை தத்தளித்துள்ளது.

இது தொடர்பாக  அப்போதைய ஆனந்தவிகடனில் வெளியான செய்திக் கட்டுரையும், படங்களும் அந்தக் காட்சிகளை நமக்கு படம்பிடித்து காட்டுகின்றன.  1943 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ம் தேதி வெளிவந்த ஆனந்த விகடன் இதழில், சென்னையின் மழைவெள்ளம் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. 

அதன் 19 -ம் பக்கத்தில்," சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பற்றி, 'நமக்குத் தெரிந்து  இதுவரையில் இப்படி ஏற்பட்டதேயில்லை" என்றுதான் எல்லாரும் சொல்லிக்கொள்கிறார்கள். ஆகையினால் சென்னைக்கு வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதமும் கடுமையாகத்தான் இருக்கும். ஆயிரக்கணக்கான ஜனங்கள் குடிசைகளை இழந்து திக்கற்றுப் பரிதவிக்கிறார்கள்.சேகரித்து வைத்திருந்த சொற்ப உணவுப் பொருள்களையும் வெள்ளம்  கொண்டுபோய் விட்டபடியால், பலருக்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. நிலைமையைச் சீர்படுத்த பல முயற்சிகள்  நடக்கின்றன. அனேக பெரிய மனிதர்கள் முன்வந்து உதவி புரிந்து வருகிறார்கள். ஆனால் வெள்ளத்தின் கொடுமையைப் பார்க்கும்போது இந்த உதவி போதாது என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.

இதையொட்டி,சென்னை மேயர் ஸ்ரீ தாதுலிங்க முதலியார் பொது ஜனங்களுக்கு வேண்டுகோள் விட்டு, அதில் 'மேயர் வெள்ள நிவாரண நிதிக்குத் தங்களாலான உதவியைச் செய்ய வேண்டும்'  என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நிவாரண முயற்சிக்கு நேயர்கள் உதவி பரிபூரணமாக இருக்குமென்று எதிர்பார்க்கிறோம்" என்று  பதிவிடப்பட்டுள்ளது.

இதிலிருந்தே அந்த வெள்ளம் எந்த அளவிற்கு மக்களைப் பாதித்துள்ளது என்று உணரலாம்.

இன்னொரு  ப்ளாஷ்பேக்.

அது பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் மழைவெள்ளத்தில் நிரம்பியது பற்றியது.1960 -ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 4 மற்றும் 11 ம்  தேதிகளில் வெளிவந்த ஆனந்த விகடன் இதழ்களில் சென்னைக்குக் குடிநீர் ஆதரமாக இன்றும் திகழும் பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம், புழலேரி ஆகியவை குறித்த அப்போதைய தகவல்கள், படங்கள்  இடம்பெற்றுள்ளன.
                                                                                                      

 

 


                    
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close