Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'குஷ்புவும் நக்மாவும் இருந்தால் காங்கிரஸுக்கு நல்லதுதானே!' - 'பலே பலே' வசந்தகுமார்

17 ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் இருந்த ஹெச்.வசந்தகுமார், அந்த பொறுப்பிலிருந்து நீக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்திருக்கிறார்.

அதே சமயம் தமிழ்நாடு காங்.கமிட்டியில் துணைத் தலைவர் பொறுப்பில் வசந்தகுமார் தொடர்ந்து நீடிப்பார் என்கிறார்.

இளங்கோவனின் இந்த அறிவிப்பால், வசந்தகுமாரின் ஆதரவாளர்கள்  பல்வேறு இடங்களில் முற்றுகைப் போராட்டம், மறியல் என்பதோடு பலர் கட்சிப் பொறுப்புகளை விட்டும் விலக தொடங்கினர். 

பரபரப்பான இந்த சூழ்நிலையில் வசந்தகுமாரை அவரது தி.நகர் அலுவலகத்தில் சந்தித்தோம்.

’’ வர்த்தக காங்கிரசை உருவாக்கியது நீங்கள்தானே ? உங்களையே வலுக் கட்டாயமாக அங்கிருந்து  வெளியேற்றி விட்டார்களே..?!”

’’என்னை வர்த்தக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து  நீக்கிய இளங்கோவன், 'துணைத் தலைவராக நான் நீடிப்பேன்' என்று சொல்லியிருக்கிறார். இதை நான் பழி வாங்கும் நடவடிக்கையாகத்தான் பார்க்கிறேன். ஆனால், இது எதற்கும் இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை.  தம்மை சிலுவையில் அறையும் போது, 'அவர்கள்  ஏதும் அறியாமல் பிழை செய்கிறார்கள்... அவர்களை விட்டு விடுங்கள்’ என்று இயேசுநாதர் சொல்வாரே, அது போன்ற மனநிலையில்தான் நான் இருக்கிறேன்!”

 

’’நீங்கள் சிதம்பரம் அணி என்பதால்தான் இத்தணை சோதனைகளை இளங்கோவன் உங்களுக்கு கொடுக்கிறாரா?’’

’’டெல்லிக்கு  11 பேர் கொண்ட ஒரு குழுவாகப் போய்,  ஒரு விமோசனம் கிடைக்க  அன்னை  சோனியாவிடம் மனு கொடுத்து விட்டு வந்தோம். 11 பேர் மொத்தமாக போனது, கோஷ்டி போலவா தெரிகிறது!’’

’’இளங்கோவனுடன்  அப்படி என்னதான்  பகை ?’’

’’சகஜமான சூழ்நிலையே எப்போதும் நிலவ வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். அதை ஏற்படுத்த இளங்கோவன் விரும்பவில்லை. அதுதான் பிரச்னை!”

’’வெள்ள நிவாரணப் பணிகளில் கூட நீங்கள் தனி ஆவர்த்தனம் செய்வதாக குற்றச்சாட்டு சொல்லப் படுகிறதே?"

வெள்ள நிவாரணங்களின்போது, ’தலைவர் இப்போது  வருவார், வந்தே விட்டார்' என்று சொல்லிக் கொண்டே,  காலையில் செய்த உணவை மாலைவரை பாதிக்கப்பட்டோருக்கு  வழங்காமல் கையில் வைத்திருப்பதில் எனக்கு உடன்பாடில்லை.  உதவி வேறு, விளம்பரம் வேறு. இந்த வெள்ள நிவாரணப் பணிக்காக தமிழ்நாடு முழுக்க 25 லட்ச ரூபாய்  செலவு செய்திருக்கிறேன். காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ்காரனாகத்தானே செய்கிறேன். இதில் என்ன தவறு?’’

’’காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி சண்டை, சட்டை கிழிவது, அடிதடி என்றாகிவிட்டதே..!”

’’காங்கிரஸில் சட்டை மட்டும்தான் கிழியும். அதிகபட்சம் இங்கே பட்டனை மட்டும்தான் கழட்டுவோம். மற்ற கட்சிகளில் சண்டையின் போது கொலையே விழுகிறதே. குடலையே உருவி விட்டுத்தானே மறு வேலை பார்க்கிறார்கள். அதற்கு காங்கிரஸ் எவ்வளவோ பரவாயில்லை!”

’’திடீரென குஷ்பு, நக்மா என காங்கிரசே சினிமா நட்சத்திர அணிவகுப்பால் மின்னுகிறதே!”

’’காங்கிரஸ் கட்சி புதிய அரசியலை நோக்கி பயணம் செய்கிறது. குஷ்பு, நக்மா என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் அவர்களுக்கான வேலைகளைச் செய்யும்போது கட்சிக்கு நல்லதுதானே நடக்கும். கட்சி வளரத்தானே செய்யும். இரண்டும் நல்லதுதானே!’’

’’எப்போதும் இளமையாகவே காட்சியளிக்கிறீர்களே, என்ன ரகசியம் ?’’

’’நான் சம்பாதித்த பணத்தை  என்னால் முழுமையாக அனுபவிக்க முடிகிறது. நினைத்ததை வாங்குகிறேன்.. கல்விக் கூடங்களுக்கான உதவிகள், கிராமங்களில் சாலை போடுதல் போன்ற எண்ணற்ற பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன். அரசின் மூலமாக உதவி பெறவேண்டி, தாமிரபரணி- கருமேனி ஆறு இணைப்புக்காக ரூ.369 கோடிநிதி ஒதுக்கக் கேட்டு சட்ட சபையில் தொடர்ந்து பேசி, தமிழ்நாடு அரசிடம் இருந்து 300 கோடி ரூபாய் வரை பெறப்பட்டுள்ளது. அந்த சந்தோஷமும் நிறைவும் என்னை அப்படி வைத்திருக்கிறது போல!”

- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ