Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

VikatanNow-ல் இணைந்திருப்போம்!

னந்த விகடன்... இந்தியப் பத்திரிகை உலகில் விகடனுக்கு இது 90-வது ஆண்டு. அந்த 90 வருடங்களை ஒரு நிமிடத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாமா?

1. 1926-ல் ஆண்டு பூதூர் வைத்தியநாதய்யர் எனும் புலவரால் ‘ஆனந்த விகடன்’ துவங்கப்பட்டது.

2. 1928 ஜனவரி மாதம் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் ஆனந்த விகடன் பத்திரிகையை வாங்கி நடத்தத் துவங்கினார்.

3. 1983 ஜூனியர் விகடன் பிறந்தது. சமூக, அரசியல் அவலங்களை தோலுரித்துக் காட்டும் இதழாக ஜூவி பயணத்தைத் துவக்கியது.

7. 1984 விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் துவங்கப்பட்டது.

8. 1987-ல் விகடன் அட்டைப்படத்தில் வெளியான ஒரு ஜோக், தமிழக சட்டசபையில் சூறாவளி கிளப்பியது. அந்த நகைச்சுவைத் துணுக்கை வெளியிட்டமைக்காக விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் எந்த விசாரணையும் இன்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் கைதுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் ஒலிக்க, மூன்று நாட்களில் விடுதலை செய்யப்பட்டார் ஆசிரியர். நீதிமன்ற வழக்காடலுக்குப் பிறகு தமிழக அரசாங்கம் ஆனந்த விகடனுக்கு அடையாள நஷ்டஈடாக ஆயிரம் ரூபாய் அளித்தது.

9. 1997-ல் விகடன் இணையதளம் துவங்கப்பட்டது. தமிழில் முதல்முதலாக துவங்கப்பட்ட முழுமையான இணையதளம் இதுவே.

10. 1998-ல் அவள் விகடன், 1999-ல் சுட்டி விகடன் என விகடன் குழுமத்தில் இருந்து வரிசையாக பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. தற்போது விகடன் குழுமத்திலிருந்து 10 பத்திரிகைகள் வெளிவருகின்றன.

11. சாட்டிலைட் சேனலுக்கென ‘மெகா சீரியல்’ தயாரிப்பில் களமிறங்கிய விகடன், அங்கும் அழுத்த முத்திரை பதித்தது. இன்றும் டிரெண்டிங் சீரியல்கள் பட்டியலில் விகடன் டெலிவிஸ்டாஸின் சீரியல்களுக்கு பிரதான இடமுண்டு.

10. 2011 முதல் சமூக வலைதளங்களில் ஆரோக்யமான விவாதங்களுடன் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது விகடன்.

11. இன்று விகடன் இணையதளத்துக்கு 1,00,000-க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள், தினமும் மில்லியன்களைத் தாண்டும் பேஜ்வியூ, விகடனின் ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் சேனல்களுக்கு 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் என இணையத்திலும் அழுத்தமாக முத்திரை பதித்திருக்கிறது விகடன் குழுமம்.

இந்நிலையில்தான், கடந்த வாரம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளைப் பற்றிய ஒரு விமர்சன கட்டுரையை, ‘என்ன செய்தார் ஜெயலலிதா?’ என்ற தலைப்பின் கீழ் நவம்பர் 25-ம் தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியிட்டோம்.

அது முதல், ஆனந்த விகடன் மீது கடுமையான விமர்சனங்களை அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது எம்.ஜி.ஆர்’ வெளியிட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆனந்த விகடன் ஆசிரியர்-பதிப்பாளர் மற்றும் அச்சிடுபவர் மீது அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விகடனுக்கு வழக்குகள் புதிது அல்ல. இந்த வழக்கையும் சட்டரீதியாகச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

தவிர, ஆனந்த விகடனின் ஃபேஸ்புக் பக்கம் கடந்த 23-ம் தேதி மாலை முதல் திடீரென முடக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப்களில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் விகடனைத் தொடர்ந்து வருகிறார்கள். இதில் ஆனந்த விகடன் ஃபேஸ்புக் பக்கம் மட்டும் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விகடன் தரப்பிலிருந்து மேற்கொண்ட விசாரணைக்கு, இதுவரை ஃபேஸ்புக் நிர்வாகத்திடமிருந்து முறையான, முழுமையான பதில் இல்லை. ஆனந்த விகடன் ஃபேஸ்புக் பக்கத்தை திரும்பப் பெறும் முயற்சியைத் தொடர்கிறோம். ஃபேஸ்புக் பக்கம் முடக்கத்துக்கும், இந்த அரசியல் நிகழ்வுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அந்தப் பக்கம் மீண்டும் கிடைக்கும் வரை, ஆனந்த விகடன் தொடர்பான செய்திகள் ஃபேஸ்புக்கில் www.facebook.com/VikatanNow/  என்ற பக்கம் மூலம் பதியப்படும்.

ஆனந்த விகடனின் வரமும் உரமும் வாசகர்களாகிய நீங்கள்தான், உங்களின் ஆதரவுடன் எங்களை வழிநடத்த வேண்டும்!

#StandWithVikatan ‪        #‎LiftBanOnVikatanFBpage‬

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ