Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்றாண்டுகளில் முடிந்த வாழ்வு! ( தமிழ் சினிமா முன்னோடிகள்: தொடர்-17)

கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் இணைந்த திருமண வாழ்வு, சுமார் இரண்டரை ஆண்டுகள் இனிதாய் இருந்தது. பின்னர் இருவருக்குமிடையே மனக்கசப்பு உருவாகி அவர்கள் தாம்பத்ய உறவில் விரிசல் விடத் தொடங்கியது.

சுந்தராம்பாளுக்கு கிட்டப்பாவிடமும், அவரது குடும்பத்தினரிடமும் அளவற்ற அன்பும், அதிக அக்கறையும் ஏற்பட்டிருந்தது. கிட்டப்பாவின் மீது ஒரு சிறு துரும்பு விழுந்தாலும் கண்ணீர் சிந்தும் சுபாவமுடையவர் சுந்தராம்பாள். இவர்களின் மணவாழ்க்கை சிலரின் கண்களில் எரிச்சலாக இருந்தது. நண்பர்கள் மற்றும் உறவினர்களில் சிலர் அவ்வப்பொழுது பொய்யான வதந்திகளை இருவரிடமும் சொல்லி, அவர்களின் இன்ப வாழ்வை சிதைக்கத் தொடங்கினர்.

சென்னையில் இவர்கள் தங்கியிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் இவர்களின் பிரிவுக்கு அச்சாரமாக அமைந்து விட்டது. சென்னையில் அவர்கள் தங்கியிருந்தபோது, வேறொரு நாடகக் கம்பெனி,  கிருஷ்ணலீலா என்ற நாடகத்தை நடத்தி வந்தது.

அந்த நாடகத்தை பார்க்க விரும்பினார் சுந்தராம்பாள். 'நாடகத்திற்கு போக வேண்டாம்' என்றார் கிட்டப்பா. நாடகம் பார்க்கப் போனார் சுந்தராம்பாள். அன்று இரவே செங்கோட்டைக்கு புறப்பட்டுப் போய் விட்டார் கிட்டப்பா.

இருவருக்குமிடையே எழுந்த சில கருத்து மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இல்லற வாழ்க்கை,,  நிரந்தர சோகமாக உருமாறியது. அந்த நேரத்தில் கிட்டப்பா -  சுந்தராம்பாள் இல்லறத்தின் அடையாளமாக ஒரு ஆண் குழந்தை சுந்தராம்பாளுக்கு பிறந்திருந்தது.

பிறந்த ஒரே மாதத்திற்குள்ளேயே அக்குழந்தை மரணமடைந்தது. குழந்தை இறந்துபோன செய்தியை கிட்டப்பாவுக்கு கே.பி.சுந்தராம்பாள் தெரிவித்தார். கிட்டப்பா மனம் இளக வில்லை. அவர் கரூர் வந்து,  தனது மனைவி கே.பி.சுந்தராம்பாளை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. பிரிவு நீண்டது. இருவரும் தனித்தனியாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர். 1929-ம் ஆண்டு பிரிந்த அந்த ஜோடி, 1933 ஜனவரி மாதம் மீண்டும் சந்தித்தது. அது ஒரு துயரமான சந்திப்பு.

ஆம்... 1933-ம் ஆண்டு கிட்டப்பாவின் உடல்நிலை மோசமடைந்ததை கேள்வியுற்ற கே.பி.சுந்தராம்பாள்,  கரூரிலிருந்து செங்கோட்டைக்கு நேரில் சென்று சந்தித்தார். உடல்நிலை மோசமாய் இருந்ததால்,  அவரை சென்னைக்கு அழைத்து வந்து, மயிலாப்பூரில் உள்ள டாக்டர் பி.ராமராவின் கிளினிக்கில் சேர்த்து அவருக்கு வைத்தியம் செய்தார்.

கிட்டப்பாவின் வைத்திய செலவை அவரே ஏற்றார். கணவன் மீது கொண்ட அன்பினால், அவரின் கோபதாபங்களை ஒதுக்கிவிட்டு அவருக்கு பணிவிடைகள் செய்தார். ஆனால் குணமடைந்து வந்த கிட்டப்பா யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், சென்னையிலிருந்து புறப்பட்டு செங்கோட்டை வந்து சேர்ந்தார். கணவன் சொல்லாமல் புறப்பட்டு போய் விட்டது கே.பி.சுந்தராம்பாளை மனம் கலங்க வைத்தது. கே.பி.சுந்தராம்பாள் எவ்வளவுதான் தன் கணவன் மீது உண்மையான அன்பு செலுத்தினாலும், அதை ஏற்கும் நிலையில் கிட்டப்பா இல்லை. கிட்டப்பா மனம் போன போக்கில் பயணித்தார்.

இதனால் சில பலவீனங்களுக்கு ஆட்பட்டார். இதனால் கிட்டப்பாவின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. குடல் அழுகல், மற்றும் கல்லீரல் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டார். மரண வாயிலில் தானே வந்து சிக்கிக் கொண்டார் கிட்டப்பா. பாவம், இயற்கை தயவு தாட்சண்யம் காட்டவில்லை.

சிகிச்சை பலனின்றி 1933-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் செங்கோட்டையில் கிட்டப்பா மரணமடைந்தார்.

கிட்டப்பா சாவு செய்தி கேட்டு கே.பி.சுந்தராம்பாள் செங்கோட்டை வந்தார். சாகும்போது கிட்டப்பாவிற்கு இருந்த சில கடன்களை தானே அடைத்தார். சடங்கு முடிந்தபின் அவரது அஸ்தி கலசத்தை காசிக்கு எடுத்துச் சென்றார். பின் மனம் வாடி, கரூரில் வசித்தார்.

'எங்க ஆத்துக்காரர்...'  என்று பொதுவெளியில் பெருமையுடனும்,  உரிமையுடன் விளித்து பெருமைக்கொண்டாடிய கே.பி.சுந்தராம்பாள், கணவர் மரணத்திற்குப்பின் விரக்தியான மனநிலைக்கு வந்தார். கரூரிலுள்ள தன் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இந்த நிலையில் ஒரு மாற்றம் நேர்ந்தது....

- வா.பாலகிருஷ்ணன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்... 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close