Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆண் வேடத்தில் நடித்த கே.பி. சுந்தராம்பாளுக்கு எழுந்த எதிர்ப்பு! (தமிழ் சினிமா முன்னோடிகள்: தொடர்-18

ணவர் கிட்டப்பாவின் மறைவிற்குப்பின் சுந்தராம்பாள் கரூரில் தங்கியிருந்தார். எந்த கம்பெனி நாடகங்களிலும் நடிக்கவில்லை. துறவி போல் கரூரில் காலம் கழித்தார்.  நாடக மேடைகளில் சிங்கார இசை பாடிய சின்ன குயிலொன்று சிறகொடிந்து தனிமையில் வாடுவதையறிந்து அவரது ரசிகர்கள் மனம் வருந்தினர்.

பின்னர் மனமாற்றத்திற்காக தேனாம்பேட்டையில் கொஞ்ச காலம் தங்கியிருந்தபோது சுந்தராம்பாள்,   Indian Review என்ற பத்திரிகையை நடத்திவந்த ஜி.என்.நடேசனின் மாம்பலம் வீட்டிற்கு அவ்வப்பொழுது சென்றுவருவது வழக்கம் .

ஒருநாள் அப்படி சென்றபோது அங்கு வந்திருந்த எஸ்.சத்தியமூர்த்தி மற்றும் படத்தயாரிப்பாளர் அஸன்தாஸ் ஆகியோர், அங்கிருந்த சுந்தராம்பாளின் தாய்மாமாவிடம்,  'சுந்தராம்பாளை நந்தனார் படத்தில்,  நந்தனாராக நடிக்க ஏற்பாடு செய்யமுடியுமா?' என்று கேட்டனராம். கிட்டப்பாவின் மறைவிற்கு பின் எந்த ஆண் நடிகருடனும் கதாநாயகியாக நடிக்க விருப்பமில்லாமல் இருந்த சுந்தராம்பாள்,  தன் கொள்கைக்கு ஏற்ற வேடமாக இருந்ததால் 1935-ல் நந்தனாரில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதே இடத்தில் முன்பணமாக ரூபாய் 25,000த்திற்கு செக் கொடுக்கப்பட்டது. 

நந்தனார் படத்தில் கே.பி.எஸ் நடிக்கவிருந்த செய்தியை முதன்முதலில் வெளியிட்ட ஆனந்தவிகடன், அதன் சினிமா அனுபந்தம் என்ற பகுதியில் கே.பி.எஸ் ஆண் வேடத்தில் மயிலின் மீது முருகனாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு "நந்தனார் படத்தில் நடிக்கப்போகும் ஶ்ரீமதி கே.பி.சுந்தராம்பாள் (ஆண் வேடத்தில் இருந்த புகைப்படம்) " என்ற செய்தியை வெளியிட்டது.  இதில் சங்கீத பூபதி மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் வேதியராக நடித்தார். 

இப்படத்தில் "வழிமறைத்திருக்குதே மலைபோல் ஒரு மாடு படுத்திருக்குதே" என்று ரூபக தாளத்தில் அமைந்த பாடல், அதன்பின் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது.

ஆனால் கே.பி சுந்தராம்பாள் ஆண் வேடத்தில் நடிப்பதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. "ஒரு பெண்மணி  ஆண் வேடத்தில் நடிப்பதா? " என்று கல்கி கடுமையாக விமர்சனம் செய்தார்.

நந்தனார் படம் 3 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம். 1935-36 ல் ஒரு படம் தயாரிக்க ஆன செலவு சுமார் 40 ஆயிரம்தான். அந்நாட்களில் தமிழ் படவுலகில் பிரபலமாக இருந்த கதாநாயகி டி.பி.ராஜலட்சுமி வாங்கிய சம்பளம் ஒரு வருடத்திற்கு சுமார் 12 ஆயிரம் மட்டுமே. இதனால்தான் நந்தனார் படத்தில் ஒரு நடிகைக்கு ரூ. ஒரு லட்சம் அளிக்கப்பட்ட விஷயமும் பரபரப்பாக பேசப்பட்டது.

"கே.பி.எஸ். நந்தனாராக நடிப்பது கேலி கூத்தாகும். பெண்கள் ஆண் வேஷத்திலும், ஆண்கள் பெண் வேஷத்திலும் நடிக்கும் அந்தச் செயல் நாடகவுலகுடன் நிற்கட்டும்; சினிமாவுக்கு வேண்டாம்" என்று ந.ராமரத்னம் என்பவர் வன்மையாக கண்டித்து தினமணியில் நீண்ட கட்டுரை வெளியிட்டார். பல மாதங்கள் பத்திரிகைகளில் கண்டன குரல் பலமாக வீசியது. பாட்டுக்கள் நன்றாக இருந்ததால் படம் தோல்வியுறவில்லை. சுமாராக ஓடியது.

ஆனால் எதிர்ப்பு எடுபடவில்லை. சுந்தராம்பாளை தொடர்ந்து பெண்கள்,  ஆண் வேடத்தில் நடிக்கும் வழக்கம் அமலுக்கு வந்தது. '

பக்த குசேலா' படத்தில் எஸ்.டி.சுப்புலக்ஷ்மி கிருஷ்ணராக நடித்தார். எஸ்.டி.சுப்புலட்சுமியை தொடர்ந்து டி.பி.ராஜலக்ஷ்மி, எம்.எஸ்.விஜயாள், எம்.ஆர்.சந்தானலட்சுமி போன்ற நடிகைகள் படத்தில் கிருஷ்ணன் வேடத்தில் நடிக்கத் தொடங்கினார்கள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி, யு.ஆர்.ஜீவரத்தினம், வசந்தகோகிலம் போன்ற பிரபல நடிகைகள் நாரதர் வேஷத்தில் தோன்றினர். பெண்கள் ஆண் வேஷத்தில் நடிக்க வழி அமைத்தவர் கே.பி.சுந்தராம்பாள் என்பதுதான் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

அடுத்தவாரம்:  திரையுலகில் தன் நடிப்பு பயணத்தை துவக்கினார் கே.பி.எஸ்...

- பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்... 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close