Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2015-ல் ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்தின் தர்மசங்கட தருணங்கள்!

மக்கள்  நலனுக்காகத்தான் அரசியல் தலைவர்கள் சேவை செய்கிறார்கள். ஆனாலும், அதில் சமயங்களில் விவகாரப் பஞ்சாயத்து கிளம்பிவிடுகிறது. அப்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா 2015-ல் விமர்சனங்களை எதிர்கொண்ட தருணங்கள் இது...! 

சட்டமன்ற வளாகத்தில் ஜெயலலிதா இருக்கும் படங்கள் ’போட்டோ ஷாப்’ மூலம் ஒப்பனை செய்யப்பட்டதாகக் கிளம்பிய விமர்சனங்கள்!
 
 
சென்னை மழையில் ஆர்.கே நகர் பகுதி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்க, வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்த ஜெயலலிதா, ‘அன்பார்ந்த ஆர்.கே.நகர் தொகுதிவாழ் வாக்காளப் பெருமக்களே...’ என்று  கூறி பேச்சைத் துவக்கினார். ’வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட வந்தபோதும் மக்களை ‘வாக்காளப் பெருமக்களாகத்தான்’ பார்க்க வேண்டுமா’ என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது! 

 
 
சென்னை பெருமழை வெள்ள நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டியது 
 
 
ஒட்டுமொத்த சென்னையே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்க, பிரதமர் மோடி சென்னையைப் பார்வையிடவிருக்கிறார் என்று தெரிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் உள்ளூர் சென்னை பாதிப்பைப் பார்வையிட்டது! 
 
 
 
மெட்ரோ ரயில் இயக்கம் முதல் பலப்பல அரசு நிகழ்ச்சிகளையும் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் திறந்து வைத்தது. அதற்கென கோடிகளில் அரசுப் பணம் செலவானது..!
 

 
எதிர்கட்சிகளில் ஆலோசனை, விமர்சனம், விவாதம் எதற்கும் பதில் சொல்லாமல் சட்டமன்றத்தில் பல திட்டங்களை 110 விதியின் கீழ் தன்னிச்சையாக அறிவித்தது.
 
 
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் 3டி பறக்கும் குதிரை ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கியது!

 

வாசகர்களே, 

தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்பான இது போன்ற தர்மசங்கடத் தருணம் ஏதேனும் உங்களுக்குத் தோன்றினால் அதை கமெண்ட் பாக்சில் பதியலாம்!

 

ஸ்டாலினின் தர்மசங்கட தருணங்களை காண: http://bit.ly/MKStalin

விஜயகாந்தின்  தர்மசங்கட தருணங்களை காண: http://bit.ly/Vijayakandh

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close