Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓய்வு பெறும் தாவூத்... அடுத்த வாரிசு யார்?

பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தனது பொறுப்புகளிலிருந்து விலக இருப்பதாகவும், அந்த இடத்தில் இருந்து அவரின் வலது மற்றும் இடது கரங்களான அனீஸ் இப்ராஹிம் அல்லது சோட்டா ஷகீல் ஆகிய இருவரில் யாரவது ஒருவர் நிழல் உலகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன.  

1993-ம் ஆண்டு நிகழ்ந்த மும்பைத் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக,  இந்தியாவால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம், இன்று தனது 60 -ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதாகவும், இன்றுடன் நிழல் உலக பொறுப்புகளில் இருந்து விலகி, ஓய்வு பெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பல்வேறு கடத்தல்கள், கட்டப் பஞ்சாயத்து நிகழ்வுகள், ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் என்று நிழல் உலகில் நடக்கும் அத்தனை க்ரைம் எபிசோடுகளின்  நாயகனாகத் திகழும் தாவூத் இப்ராஹிம், தனக்கு வயது ஆகிவிட்டதாக  நினைக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதனால் அந்த இடத்தில் இருந்து உலகம் முழுக்க பரவிக்கிடக்கும்  நிழல் உலகத்தைப் பொறுப்பாக யார் கவனித்துக் கொள்வார் என்ற கவலையும் தாவூத்தை சூழ்ந்துள்ளதாகவும், அதனையடுத்து தனது அடுத்த வாரிசாக சோட்டா ஷகீல் அல்லது அனீஸ் இப்ராஹிம் ஆகிய இருவரில் யாரை நியமிக்கலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் தடதடக்கின்றன.

தாவூத்தின் மனம் அறிந்து கடத்தல், கொலை, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு பல்வேறு சம்பவங்கள் மூலம்  அவரின்  மனதில் இடம்பிடித்தவர் சோட்டா ஷகீல். அதே நேரத்தில் அவரின் தம்பியான அனீஸ் இப்ராஹிமும் தாவூத்தின் மனதில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்து தாதாவின் தம்பி என்பதை நிரூபித்து உள்ளதாகவும்  வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்று (சனிக்கிழமை) பாகிஸ்தானின்  லாகூரில் தாதா தாவூத்தின் 60 வது பிறந்தநாள் விழாவுக்கு மிகப் பெரிய அளவில் அவரின்  ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இதனையொட்டி துபாயிலிருந்து தாவூத் இப்ராஹிம்  உறவினர்களும், கென்யாவிலிருந்து வியாபாரக் கூட்டாளிகளும் லாகூரில் குவிந்துள்ளனர். தாவூத் தற்போது பாகிஸ்தான் கராச்சியில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் பாகிஸ்தானில் வசிக்கவில்லை  என்றும்,  அவ்வப்போது பாகிஸ்தான் வந்து செல்வார் என்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் பிரபல பத்திரிக்கை ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரி ஹமீத் ஹாரூன் கூறுகையில், "தாவூத் பாகிஸ்தானில் இல்லை. அவர் துபாய் அல்லது தென் ஆப்பிரிக்காவில் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவுடன் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்தான்  பதுங்கியுள்ளார் என்று கூறியிருப்பது நினைவுகூறத்தக்கது. ஆனால் பாகிஸ்தானின் இந்தியாவுக்கான துணைத் தூதர் அப்துல் பாஸித்,  தாவூத் இப்ராஹிமை பாகிஸ்தானில் மறைத்து வைக்க வேண்டியதில்லை என்று அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close