Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2015 சேலஞ்ச்..! வாசகர்களே நீங்கள் தயாரா?

வாசகர்களுக்கு 2016 புத்தாண்டு வாழ்த்துகள்!

  ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தீர்மானம் எடுப்பது வழக்கமாக இருக்கிறது. பின்னர் அதைக் கைவிடுவதும் பழக்கமாக இருக்கிறது. ஆனால், எப்போதும் என்ன செய்தோம் என்று திரும்பிப் பார்த்தால்தான், என்ன செய்யவிருக்கிறோம் என்பதை தீர்மானிக்க முடியும். அதனால், கடந்து கொண்டிருக்கும் 2015-ல் நீங்கள் சாதித்தது என்ன என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்கள் 2016 இலக்கை நிர்ணயிக்க உதவியாக இருக்கும்.

             உங்கள் வாழ்க்கையில் இந்த வருடம் நிகழ்ந்த எந்த சிறப்புச் சம்பவத்தையும் எங்களுடன் பகிரலாம். குழந்தை நடக்கத் தொடங்கியது, கல்லூரி பட்டம் பெற்றது, வேலையில் சாதித்தது, காதல்/திருமணம்/குழந்தை பிறப்பு போன்ற சந்தோஷத் தருணங்கள், பிறருக்கு உதவியது, சாகசப் பயணம் மேற்கொண்டது,  உலக சாதனையோ உள்ளூர் சாதனையோ படைத்தது, கடினமான ஒரு சவாலை அடைந்தது...என எதுவாகவும் இருக்கலாம். அது தொடர்பான ஒரு புகைப்படம் அவசியம். அத்துடன் 400 வார்த்தைகளுக்குள் அந்த அனுபவத்தையும் சுருக்கமாக எழுதி அனுப்புங்கள். பிழையில்லா தமிழ் அல்லது ஆங்கிலம்...இரு மொழிகளிலும் அனுப்பலாம். வழிகாட்டுதலுக்காக சில சாம்பிள் ‘2015 சேலஞ்ச்’ அனுபவங்கள் கீழே....


சென்னை எக்மோரில் என் கைவண்ணம்!
அன்பு வர்கீ 
 
 
எவ்வளவோ நகரங்களில் நான் கிராஃபிட்டி பண்ணிருக்கேன். ஆனால், இந்த வருடம் சென்னை எக்மோர் ஸ்டேஷனில் வரைஞ்சேன்.வரையக் கிடைச்ச வாய்ப்பு சந்தோஷம்தான். ஆனா, வரையிறதுக்காக நான் இடத்தை சுத்தம் பண்ணிட்டு இருந்தப்ப, எனக்கு ஒரு சின்னப் பையன் உதவினான். அப்போ அவனோட குடும்பம், நண்பர்கள், அவனோட பூனை பத்திலாம் சொன்னான். அவன் பேசப் பேச அவனை அவ்ளோ பிடிச்சிருச்சு. நான் வரையலாம்னு நினைச்சிருந்ததை விட்டுட்டு அவனுக்குப் பிடிச்ச  பூனையையே வரைஞ்சுட்டேன். அந்த அனுபவம்தான் 2015-ன் ஸ்பெஷல் தருணம்!

 

 
குட்டிச் சுட்டிப் பாப்பா!
- ஜியா
 
 
 எங்கள் வீட்டுக்குக் குட்டித் தேவதை வந்த வருடம் இது. எங்கள் முதல் குழந்தைக்கு இப்போது வயது இரண்டு மாதம்.  குறும்புப் பார்வை, சேட்டை சீண்டல்கள், குவா குவா கொஞ்சல் என வீட்டில் அனைவரையும் ஒவ்வொரு நிமிடமும் உற்சாகத்தில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கிறாள் என் செல்லக் குட்டி ஹானியா!
 
 
பாலி தீவில் ஒரு த்ரில் சவாரி!

- சரண்யா சந்தர் 

 
 
நான் ஒரு புரொஃபஷனல் போட்டோகிராஃபர்.  நிறைய பயணிக்கப் பிடிக்கும். அப்படி சமீபத்தில்   இந்தோனேஷியாவில் பாலி தீவுக்குப் போனேன். அங்கே வாட்டர் ராஃப்டிங் சவாரி ரொம்ப தில், திகிலா இருக்கும்னு சொன்னாங்க. கொஞ்சம் உதறல் இருந்தாலும், துணிச்சலா ஏறிட்டேன். வாவ்... செம த்ரில்லிங்கா இருந்தது. ஒன்ஸ் மோர் போவேன்! 
 
 
நெகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய கடலூர் குழந்தைகள்!
- ந.வசந்தகுமார்
 
 

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூரின் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன். அப்போது அங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக், மாஸ்க், ஸ்மைலி பால் முதலியவற்றை வாங்கிச் சென்றிருந்தோம். மற்ற பொருட்களைவிட மாஸ்க்கும், பந்தும் அந்தக் குழந்தைகளுக்கு அன்லிமிடட் மகிழ்ச்சி அளித்தது. அந்த துயரமான சமயம் அந்த சின்ன விளையாட்டுப் பொருள் அவர்களை பெருமளவு குதூகலப்படுத்தியது. அவர்களோடு இருந்த ஒவ்வொரு நிமிஷமும்... சொர்க்கம்! 
 
 
எனது குறும்படத்துக்குக் கிடைத்த அங்கீகாரம்!
- மகாகீர்த்தி
 
 
நான் ஒரு ஃபிலிம் மேக்கர். பல குறும்படங்களை இயக்கியுள்ளேன். இந்த வருடம் நான் இயக்கிய ''சின்சியர் தேங்க்ஸ் டு  ஏஞ்சலீனா'' குறும்படத்தை சினிமா விகடன் இணையதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்கள். அதனால் பரவலான கவனம் பெற்றது அந்தப் படம். அந்த அங்கீகாரம் பெரிய தன்னம்பிக்கையை தந்தது!
 
மழை வெள்ளத்தில் உதவிய நண்பர்கள்!

ஐஸ்வர்யா முரளி 

 
நாங்கள் ஹைதராபாத்தில் இருக்கிறோம், சென்னையில் கனமழை வெள்ளம் வந்த போது சென்னையில் உள்ள எங்களது உறவினர்களை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை, ஆனால் எங்கள் நண்பர்கள் தான் அவர்களை பார்த்து அவர்களுக்கு உதவினர். அவர்களுக்கு நன்றி கூறினாலும் போதாது. அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் நண்பர்கள் உதவியது வாழ்வில் மறக்க முடியாத தருணம்.
 
 

யூ டியூப் டு சினிமா!

- விஜய் வரதராஜ் 

டெம்பிள் மங்கீஸ் எனும் எங்கள் யூ-டியூப் சேனல் மூலம் ஜாலி, கலாய்  வீடியோக்களை உருவாக்கி வந்தோம். அதன்  ஹிட் ரீச் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களைக் குவித்தது. அந்த கவன ஈர்ப்பு மூலம் ஜி.வி.பிரகாஷின்  அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வருட ஆரம்பத்தில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று ’கோவில் குரங்கு’ மீது சத்தியம் பண்ணிச் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டேன். ஆனால், இப்போது விஜய் ஹாப்பி அண்ணாச்சி!  
 
 
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close