Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நேற்று சென்னை...இன்று இங்கிலாந்து! - வெள்ளக் காட்சிகள்

னமழை, சென்னையை மட்டுமல்ல இங்கிலாந்தையும் மிரட்டி வருகிறது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்துவரும் அடை மழையால் வட இங்கிலாந்தின் சாலைகள், குடியிருப்புகள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டிய தொடர் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு,  தமிழ்நாட்டு மக்கள் அனுபவித்த இன்னலைப் போல தற்போது இங்கிலாந்து மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

மழை வெள்ளம் காரணமாக வட இங்கிலாந்தின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் யார்க் ஷையர் நகரின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் வெள்ளத்தின் காரணமாக பல வீடுகள், கட்டடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள்  நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அங்கு அனைத்து வர்த்தக நிலையங்கள் ,முக்கிய அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
 
ஒரு சில இடங்களில் மட்டும் வெள்ள நீர் வற்றி வருவதால், மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை, வெள்ளம் வற்றும் பகுதிகளில் திரும்பி வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரூன் நேரில் சென்று, சாலைகளில் நடந்து சென்று பார்வையிட்டார்.
 

 குறிப்பு: ஒவ்வொரு படத்தின் நடுவிலும் இருக்கும் கர்சரை முழுக்க வலதுபுறம் நகர்த்தினால், ’சென்னை’ படங்களை பார்க்கலாம். அப்படியே முழுக்க இடதுபுறம் நகர்த்தினால் 'இங்கிலாந்து’ படங்களை பார்க்கலாம்

மழை வெள்ளம் எல்லாம் அங்கும் இங்கும் ஒரே  மாதிரி தான். ஆனால் ஆட்சியாளர்கள் வெள்ள பாதிப்பை பார்வையிட்டது தான் வித்தியாசம்!

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ