Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ் அப்பில் ப்ளூ-டிக் காமிச்சும் பதில் வரலைன்னா.... GIFs கலாட்டா!

இப்போதெல்லாம் வாட்ஸ்அப் ''ப்ளூடிக்''தான் பிரேக்-அப், டைவர்ஸ், மெமோ, டிஸ்மிஸ்...ஏன் சமயங்களில் கொலை வரைகூட செல்கிறது. வாட்ஸ்அப்பில்  மெசேஜ் அனுப்பிய சில நொடிகளில் பதில் வராவிட்டால், யாராக இருந்தாலும் பொங்கலோ பொங்கல்தான். ’என்ன திமிரு...ப்ளூடிக் காட்டுது. ஆனா, ரிப்ளை பண்ணலை’ என கொலைவெறியுடன் நம்மை ‘வைச்சு செய்யக் காத்திருப்பார்கள்’. ஆனால், ப்ளூடிக்கே வந்தாலும், ‘நான் உங்க மெசேஜை படிக்கலை’ எனக் கதறும் சூழ்நிலைகளை நிறையவே நாம் எதிர்கொள்வோம். அதெல்லாம் என்ன தெரியுமா? 

 

1. தீபாவளிக்கு ஊருக்குச் செல்ல ரயில் டிக்கெட் ரிசர்வ் செய்யவோ, அஜித் பட ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவின்போதோ, திமிறும் கூட்டத்தில் அடித்துப் பிடித்துக் காத்திருப்போம். அப்போது வாட்ஸப் டோன் கேட்டு மொபைல் எடுத்துப் பார்த்த நொடி, கவுன்டர் படாரென திறக்கும். நீங்களே சொல்லுங்க... அப்போ எப்படிங்க பதில் அனுப்ப முடியும்?  

View post on imgur.com

 

2 சின்ன பிரேக்-அப்புக்கு பின் காதலியை ஷாப்பிங் அழைத்துச் செல்லலாம் எனக் கிளம்பி, செல்லும் வழியில் தாமதமாகி, சொன்ன இடத்தில் காதலி இல்லாமல் , அவருக்கு அழைத்தால் ’நாட் ரீச்சபிள்’ வந்து, டென்ஷனில் மண்டை காய்ந்து நிற்கும்போது வாட்ஸப் டோன் கேட்டு அவள்தான் மெசேஜ் அனுப்பியிருக்கிறாளா என்று பார்த்தால் உங்கள் மெசேஜ். நீங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் பதில் அனுப்பியிருப்பீங்களா பாஸ்? 

View post on imgur.com

 

3. ரோமியோ ஜூலியட் படத்தில் ஹன்சிகாவிற்கு ஒரு குடும்பம் மாட்டுமே, அப்படி ஒரு ’ஸ்ட்ரிக்ட் ஆபிஸர்’ குடும்பத்தில் சிக்கிக் கொண்டால், ரிப்ளை அனுப்ப சான்ஸே இல்லை!

 

View post on imgur.com

4. மாட்டுப் பொங்கல் அன்று ஊருக்குக் கூட போகாமல், ஏ.ஆர்.ரஹ்மானின் ''நெஞ்சே எழு'' நிகழ்ச்சிக்கு அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்கி, ரஹ்மான் உள்ளே வரும்போது ட்விட்டரிலும், இன்ஸ்டாவிலும் லைவ் அப்டேட் கொடுப்போமா இல்லை... உங்களுக்கு ரிப்ளை கொடுப்போமா? 

View post on imgur.com

 

5. வீட்டில் அம்மா ''வரவர உன் போக்கே சரியில்ல; நேத்து ஒரு பொண்ணோட பைக்ல போனியாமே?'' என திடீர் என்கொயரி போட்டுக் கொண்டுருக்கும்போது, அந்த பில்லியன் பொண்ணே மெசேஜ் செய்தாலும்... எப்படிங்க பதில் சொல்ல முடியும்? 

View post on imgur.com

6. ’நந்தா’ சூர்யா போல பேருக்கு கல்லூரி சென்று வந்தாலும், மலர் டீச்சர் போல ஒரு லெக்சரர் கிளாஸ் எடுக்கும்போது, என்ன கருமாந்திரத்துக்கு உங்க மெஸேஜுக்கு ரிப்ளை அனுப்பணும்? 

 

View post on imgur.com

7. பல வருசம் கழிச்சு மாமா பொண்ணோ, அண்ணியோட தங்கச்சியோ வீட்டுக்கு வந்திருக்கும்போது, சீன் போட மொபைல் நோண்டுவோமே தவிர, ’உசுருக்கு போராடிட்டு இருக்கேன். வந்து காப்பாத்துடா’னு நீங்க மெசேஜ் அனுப்பிச்சாகூட ரிப்ளை பண்ணுவோம்னு நினைக்கிறீங்க?  

View post on imgur.com

8.  எதுக்கு மீட்டிங்குன்னே தெரியாமல் தினமும் பத்து  மீட்டிங்கில் தலையைக் கொடுத்திருக்கும்போது, திடீரென்று நோட்டிஃபிகேஷன் வந்ததும் அடுத்த மீட்டிங்கிற்கான அழைப்போ என ஜெர்க் ஆகும் நாங்க பாவம்தானே..! 

View post on imgur.com

 

9. இப்படி பலப்பல காரணங்கள் இருந்தாலும், சும்மா இருந்தாலும் மெசேஜ் பார்த்துவிட்டு பதிலளிக்காமல் இருக்க மூன்று காரணங்கள் இருக்கிறதாம். சோம்பேறித்தனம், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பதில் அனுப்பாமல் இருப்பது. கடைசியாக, ’இவனுக்கெல்லாம் ரிப்ளை அனுப்பனுமா?’ என்ற எகத்தாளம்.

இந்த மூணும் நிச்சயம் நம்மாளுகளுக்கு நிறையவே இருக்குதானே! 

View post on imgur.com

 

 

  - இ. ராஜவிபீஷிகா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ