Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆந்திராவில் விற்பனையாகும் தமிழக 'இலவசங்கள்'!

ன்றாட வயிற்றுப் பாட்டிற்கே அல்லாடும் ஏழை மக்களுக்கு துவக்கத்தில்  'இலவசங்கள்' என்ற பெயரிலும், பின்னர் அதுவே பெயர் மாறி 'விலையில்லா பொருட்கள்' என்ற பேரிலும், பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.

இதற்கெல்லாம் முன்னோடியாக, முதன் முதலில் பொங்கலுக்குத்தான் வேட்டி, சேலைகளை உள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் வைத்து கொடுத்து வந்தனர். பின்னர் அதுவே பண்டிகைகள், தலைவர்கள் பிறந்த நாட்கள், இயற்கைப் பேரழிவு காலங்கள் என்று ஆண்டு முழுவதும் இலவசங்கள் அணி வகுக்கக்த் தொடங்கின.

அய்யா கொடுத்தால் கலர் டி.வி, அம்மா கொடுத்தால் மடிக்கணினி (மிக்ஸி, கிரைண்டர்) என்று  சொல்லும் அளவுக்கு இலவசங்கள் அடையாளம் காணப்பட்டன. இதுவெல்லாம் போக, ரொக்கத் தொகையாகவும் பல சந்தர்ப்பங்களில்  பொதுமக்களுக்கு  கொடுக்கப்பட்டு வருகின்றன.

அரசால் வழங்கப்பட்ட இலவசங்கள், அதை வாங்கிச் சென்ற பொதுமக்களின் வீடுகளில் பயன் படுத்தப்பட்டு வருகிறதா, என்றால் பெரும்பாலான வீடுகளில் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

ஒன்று, பழுதாகி வீட்டில் 'ஸ்கிராப்' ஆகவோ, சர்வீஸ் கடையிலோ அல்லது சாலையோர கடைகளிலோ இருக்கும். இரண்டாவது, ஆந்திரா போன்ற 'வெளி மாநில சந்தைகளில்' இந்த இலவசங்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கும்.

"... தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட இலவசங்கள் ஆந்திரா போன்ற இடங்களுக்கு எப்படி போனது? இங்கே இலவசங்களை வாங்கிய பொதுமக்கள், அவர்களாகவே ஆந்திராவுக்கு கொண்டுபோய் விற்று விட்டு வந்தார்களா..? - இந்த கேள்வியுடன் அரசு மாநகராட்சி ஏரியாவிலும், மாமன்ற  உறுப்பினர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ர.ர.க்களிடமே பேசினேன்.

" அம்மாவைப் பொறுத்தவரை சைக்கிள், மடிக்கணினி, மிக்ஸி, கிரைண்டர் என்று நிறைய பொருட்களை கட்சி பாகுபாடு இல்லாமல் மக்களுக்காக கொடுத்துள்ளார். அதை நிறைய இடங்களில் விநியோகம் செய்யாமல் அப்படியே நிறுத்தி வைத்து விட்டனர்.

இதைக் கொடுப்பதற்காக மந்திரிகளை வரவழைத்து பந்தல்களை போட்டு ஆர்ப்பாட்டம் செய்தது கூட பரவாயில்லை, அந்த ஸ்பாட்டில் மொத்தம் பத்து பேருக்கு மட்டுமே இலவசங்களை கொடுத்து விட்டு,  மீதத்தை 'கவுன்சிலர்களின் ஆபீஸ்களுக்கு வந்து வாங்கிட்டுப் போங்க' என்று சொல்லி அவர்களை திருப்பி அனுப்பி விட்டனர் கவுன்சிலர்கள்.

அதை வாங்க மூன்று வரிசைகளில் பொதுமக்கள் காலை முதல் மாலை வரை காத்து நின்றனர். அதன் பின்னர் பெரும்பாலான பொதுமக்களும் பொறுமையிழந்து இலவசங்களே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.

அப்படி முடிவுக்கு வந்தவர்களின் 'இலவசங்கள்'தான் இப்படி குட்டியானைகளில் லோடுகளாக போய் 'ஆந்திரா பார்டர்' களில் இறங்கியவைகள். ஸ்க்ராப் 1, ஸ்க்ராப் 2, ஸ்க்ராப் 3 என்று (பரவாயில்லை,மோசம், படுமோசம் : இதன் குறியீடு) இவைகளை பிரித்து, அங்கே விற்று விடுகின்றனர்.

சென்னையில் இருந்து மூலக்கடை வழியாகவும், கும்மிடிப்பூண்டி வழியாகவும் ஆந்திராவை எளிதில் தொட்டு விடலாம் என்பதோடு, அங்கேதான் சந்தைக்கு போனதுமே இதை பொதுமக்கள் வாங்கிச் செல்கிறார்கள் என்பதும்  பயணங்கள் ஆந்திராவை நோக்கிச் செல்லும் காரணங்கள்... " என்கின்றனர் அவர்களே.

"இதெல்லாம், கட்சித் தலைமைக்கும், அரசாங்கத்துக்கும் தெரியாதா, என்ன மாதிரியான மேல் நடவடிக்கைக்கு கட்சி போயிருக்கிறது ?" என்ற கேள்வியை முன் வைத்த போது கிடைத்த பதில்...

"இலவசங்களை எப்படி, யார் மூலமாக விற்பனை செய்கிறார்கள்  என்ற விசாரணையை ரகசியமாக நடத்தி, அதன் ரிப்போர்ட்டை  கொடுக்கும்படி  உத்தரவு.  ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு உரிய பதிலை அந்த டீம் திரட்டி வந்து கொடுக்கவில்லை என்பதால் புதிதாக ஒரு 'ஸ்பெஷல் டீம்' ஃபார்ம் செய்திருக்கிறார்கள். அந்த டீம் கொடுக்கும் ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை இருக்கும். கார்டனின் இந்த மூவ்,  'சீட்' ஆசையில் இருக்கும் உள்ளாட்சி மன்ற பிரதி நிதிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. மாஜி. மந்திரிகள், மா.செ.க்களை அவர்கள் 'பெட்டி'யுடன் தேடிக்கொண்டு போக  ஆரம்பித்துள்ளனர்.

- ந.பா.சேதுராமன்  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close