Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எழுத்து மட்டுமா... என்னென்ன செய்யலாம்?! இணையம் வா... இணைவோம் வா! #vikatanblog

ப்போதுமே, விகடன் முன்னெடுக்கும் எந்த ஒரு புதுமுயற்சிக்கும் கைகொடுக்கும் நீங்கள்,  விகடன் ப்ளாக்கிற்கு அளித்திருக்கும் வரவேற்புக்கு நன்றியும் கைகுலுக்கல்களும்...

உங்களிடமிருந்து வந்த வண்ணம் இருக்கும் படைப்புகளையும் பரிசீலனைக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறோம்.

உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் விதமாக, ஏற்கனவே கொடுக்கப்பட்ட கேள்வி பதில்களோடு, மேலும் நீங்கள் கேட்ட சில சந்தேகங்களுக்கும் பதில்...

எதையெதை அனுப்பலாம்?

கதைகள், கட்டுரைகள், கவிதைகள், புகைப்படங்கள், எவரையும் காயப்படுத்தாத, சுவாரஸ்யமான மீம்ஸ்கள், ஃபோட்டூன்கள், ஓவியங்கள், நகைச்சுவைகள், லைஃப் ஸ்டைல் விஷயங்கள், மினிமலிஸ படைப்புகள், பயண சுவாரஸ்யங்கள், துறைசார் பதிவுகள், உலக, இந்திய மற்றும் தமிழ் சினிமா பார்வைகள், சமையல் குறிப்புகள், குறைந்த நிமிடத்தில் நிறைவான சேதி சொல்லும் வீடியோக்கள், இன்னும் இன்னும்! 

யார் பெயரில் வெளிவரும்?

உங்கள் பெயரில்... உங்களுக்கென்று ஒரு பக்கம் உருவாக்கப்பட்டு அதில் வெளிவரும்.

என் புகைப்படம் இடம்பெறுமா?

நிச்சயமாக.



என்னைப் பற்றிய விபரங்கள் அனுப்ப வேண்டுமா?

ஆம். பெயர், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட உங்கள் விபரங்கள்.

என் படைப்பு திருத்தப்படுமா?

தேவைப்பட்டால்! சமயங்களில் திருத்திய copy உங்கள் பார்வைக்கும் அனுப்பப்படும்!

படைப்பின் உரிமை யாருக்கு?

படைப்பாளிக்குத்தான். அதன் கருத்துகளும், பார்வைகளும் படைப்பாளிக்குச் சொந்தமானவை.

வேறு தளத்தில் வெளியிட்டவற்றை அனுப்பலாமா?

வேண்டாம்! விகடனுக்கு என்று பிரத்யேகமாக எழுதி அனுப்புபவை மட்டுமே பரிசீலிக்கப்படும்.

படைப்பாளி குறித்த விபரங்கள் இருக்குமா?

நீங்கள் தொடர்ந்து படைப்புகள் அனுப்பும் பட்சத்தில், உங்களுக்கான தனிபக்கம் தொடங்கப்பட்டு, அதில் நீங்கள் தரும், உங்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறும். மின்னஞ்சல் முகவரி வெளியிட விரும்பினால் அதுவும் வாசகர்களின் பார்வைக்கு இருக்கும்.

ப்ளாக் என்றால் கதை, கவிதை, கட்டுரைகள், சினிமா விமர்சனம், நகைச்சுவைக் கட்டுரை இவைகள் மட்டுமன்றி,  இன்னும் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து ஓவியரும் எழுத்தாளருமான சந்தோஷ் நாராயணன் சொல்வதைக் கேட்போம்...




எனக்கென தனிப்பக்கம் ஆரம்பிக்க, நான் என்ன பங்களிப்பு செய்ய வேண்டும்?

தொடர்ந்து, விகடன் ப்ளாகில் உங்கள் படைப்புகள் வந்து அவை நல்ல கவன ஈர்ப்பைப் பெறும் பட்சத்தில் உங்களுக்கென தனிப்பக்கம் ஆரம்பிக்கப்படும். உதாரணமாக, முதல் பக்கத்தில் வெளியாகும் உங்கள் படைப்பில், உங்கள் பெயரைக் க்ளிக்கினால், மொத்தமாக விகடன் ப்ளாகில் நீங்கள் எழுதியவை எல்லாம் ஓரிடத்தில், உங்கள் தனிப்பக்கமாக இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அவற்றை ஒரே இடத்தில் பார்த்துக் கொள்ளலாம். சேமித்துக் கொள்ளலாம். இவையெல்லாம், நீங்கள் அனுப்பும் படைப்புகளின் எண்ணிக்கையையும், தரத்தையும் பொறுத்தே அமையும்.

வெளியான என் படைப்புகளை, வேறு சமூக வலைத்தளங்களில் வெளியிடலாமா?

விகடன் ப்ளாகிற்கு என்று நீங்கள் எழுதியதை குறிப்பிட்டு,  அந்த URLஐ ஷேர் செய்து கொள்ளலாம். அப்படியே வேறு தளங்களிலும் வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும்.

தமிழில் மட்டும்தான் எழுத வேண்டுமா?

அப்படி எந்தக் கட்டுப்பாடுமில்லை. ஆங்கிலத்தில்கூட இருக்கலாம். மொழியே தேவையில்லாமல், ஒரு சின்ன கார்ட்டூனில், மைம் வீடியோவில், ஃபோட்டோவில் எல்லையற்று உங்கள் சிறகை விரிக்கலாம்.

படைப்புச் சுதந்திரத்தின் எல்லை என்ன?
 
கற்பனைச் சிறகு விரிந்தால், வானம்கூட எல்லை இல்லைதான். உங்கள் படைப்பு ஒரு நல்ல விவாதத்துக்கு வழிவகுக்கலாம். ‘அட.. இப்படி ஒரு பார்வை இருக்கா?!’ என்று விழி விரிய வைக்கலாம். ஆனால், அது யாரையும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம். 

என்னவெல்லாம் செய்யக் கூடாது?

வெற்று கவன ஈர்ப்புக்காக, யாரையேனும் புண்படுத்தக்கூடிய, சிலரது சென்டிமென்டைக் காயப்படுத்தக் கூடிய எதுவும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. உரிய அனுமதியின்றி புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டாம். ஏற்கனவே எழுதிய படைப்புகளையோ, வேறு இதழ்களுக்கு எழுதிய படைப்புகளையோ அனுப்ப வேண்டாம்

.
என்ன.. ரெடியா?

அனுப்ப ஆரம்பிச்சாச்சா? இதோ மின்னஞ்சல் முகவரி:- blog@vikatan.com

 

விகடன் ப்ளாக்கிற்கு எழுத எஸ்.ரா உங்களுக்கு விடுத்த அழைப்பு மற்றும் ப்ளாக்குறித்த முதல் பதிவிற்கு க்ளிக் செய்க...

இணையம் வா... இணைவோம் வா..! - விகடன் அழைக்கிறான் #VikatanBlog

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ