Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்டாலின் - அன்புமணி: இளைஞர்களுக்காக இறங்கி வரும் இணைய தலைவர்கள்!

‘கடவுள் இல்லைனு சொல்றீங்களே உங்க எதிரே கடவுள் வந்தா என்ன சொல்வீங்க’ என்று ஒருவர் கேட்டபோது ‘கடவுள் இருக்கிறார்னு சொல்வேன்’ என யோசிக்காமல் பதில் சொன்னார் பெரியார். ஆம், தான் சொன்ன ஒரு கருத்து பிறகு தவறென தெரிந்தால் அதை மாற்றிக்கொள்ள, திருத்திக்கொள்ள தயங்காதவர் பெரியார்.

ஆனால் அவரின் பெயரைச் சொல்லி கட்சி நடத்தும், முற்போக்கு முகமூடி அணிந்து தங்களை பகுத்தறிவாளர்களாக காட்டிக்கொள்ளும் தலைவர்கள்,  அவரிடம் இருந்து இப்படியான எந்த நல்ல விஷயங்களையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே உணர்த்துகிறது தற்போதைய தமிழக அரசியல் சூழல். தாங்கள் விரும்பாத கேள்விகள் கேட்கப்பட்டாலோ, சிக்கலான கேள்விகள் வந்தாலோ இன்றைய தலைவர்கள் அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்?

சிக்கலில் சிக்கவைக்கும்படியான கேள்விகள் கேட்கப்படும்போது, அந்த கேள்வியில் இருந்து தப்பிக்க கருணாநிதிக்கு இருக்கவே இருக்கிறது, ‘நோ கமெண்ட்ஸ்’ என்ற ஒற்றை வரி சமாளிஃபிகேஷன். சமயத்தில் காதில் விழாததுபோல் காமெடி செய்துவிட்டு கடந்து போய்விடுவது அவரின் ஸ்டைல்.

இதுமாதிரியான தருணங்களில் அம்பியாகவும் அந்நியனாகவும் மல்ட்டி பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் ஆட்கொண்டுவிடும் வைகோவுக்கு. ‘நீங்க இல்லாம நான் இல்லை’ என பத்திரிகையாளர்களை பார்த்து உருகுபவர் திடீரென்று, ‘என் பையன் சிகரெட் வியாபாரம் பண்றதை நீ பாத்தியா’ என பொங்குவார்.

ராமதாஸோ, ‘நீங்க எந்தப் பத்திரிகை. நான் உங்களுக்கு ஒரு கேள்வி கேக்குறேன், அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க’ என்று எதிர் கேள்வி கேட்பார். இல்லையென்றால் ‘நான் முக்கியமான நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கேன். முதல்ல அதைப்போடுங்க...’ என்று நாம் சொன்ன கேள்வியை எதிர்கொள்ளாமலேயே கிளம்பிப்போய்விடுவார்.

இப்படியான விரும்பத்தகாத கேள்விகளுக்கு விஜயகாந்தின் ஒரே பதில் கோபம் மட்டுமே. பாரபட்சம் பார்க்காமல் திட்டுவதுதான் அவரின் ஸ்பெஷல். ‘த்தூ... நீயா எனக்கு சம்பளம் கொடுக்குற, தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்க’ என்ற பதில்கள் எல்லாம் அந்த கோபத்தின் வெளிப்பாடுதான்.

இப்படி ஒவ்வொருவரும் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு இடங்களில் சொன்ன கருத்துக்களை ‘அன்று நீங்க அப்புடி சொன்னீங்க, இன்னைக்கு இப்படி சொல்றீங்க’ என்று கேட்டால் போச்சு, சிலர் சமாளிப்பார்கள், வேறு சிலர் பேட்டிகளை முடித்துக்கொள்வார்கள், இன்னும் சிலர் அடித்து ஆடிவிடுகிறார்கள்.

‘ஆமாம் சொன்னேன், அந்த விஷயத்தில் அன்று என் புரிதல் அப்படியாக இருந்தது, இன்று அது மாறி இருக்கிறது’ என்று உண்மையை, நான் அப்டேட்டாகி வருகிறேன் என்பதை சொல்ல இங்கு எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தில்லும் இல்லை திராணியும் இல்லை.

இன்றைய இளைய இணைய இளைஞன் தலைவர்களிடம் எதிர்பார்ப்பது இதைத்தான். ‘சமாளிக்காதீர்கள், ஆமாம் இல்லை என்று சொல்லுங்கள். இந்த விஷயத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாகச் சொல்லுங்கள். அந்த கேள்வியை மழுங்கடிப்பதுபோல் வேறொறு கேள்வி கேட்டுவிட்டு எழுந்து போகாதீர்கள்... இதைத்தான் இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதை புரிந்துகொண்ட அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது. ஸ்டாலின் நமக்கு நாமேவில் ஊர் ஊராகச் சென்று ‘நாங்கள் தவறுகள் செய்து இருக்கலாம். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதைசெய்லாம் சரி செய்து கொள்வோம்’ என்பதும், உடுமலை கொலை குறித்து ராமதாஸ் கருத்து தெரிவிக்க மறுத்தபோது அன்புமணி, ‘கொலைகள் கண்டிக்கத்தக்கது. கொலைகளே கூடாது’ என்று சொல்வதும் இந்த இளைஞர்களை புரிந்துகொண்டதன் வெளிப்பாடு என்று எடுத்துக்கொள்ளலாம்.

தலைவர்களே... நீங்கள் இளைஞர்களிடம் இருந்துகூட பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல. எந்தக் காலத்துக்கும் பொருந்தும் பெரியாரிடம் இருந்தாவது கற்றுக்கொள்ளுங்கள்.

ஏனென்றால் பெரியார் பெரியார்தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close