Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அந்த ஐபிஎஸ் வீட்டில் அனைவரும்... (இன்டலிஜென்ஸ் அரசியல்: மினி தொடர்- 2)

சின்னதாய் ஒரு முன் கதை

...அந்த ஊசிக்குத்துக் காரரை  கட்டுப்படுத்தும் அதிகாரிக்கே அவர் கட்டுப் படாமல் போகவே, மாற்று டீம் இறங்கி, வேலை பார்த்து அவரை வழிக்குக் கொண்டு வந்ததைப் பார்த்தோம்... எந்த நேரமும் இது சரி வருமா? இருக்கவே இருக்கிறதே கணினி வழி. அதன் துணையோடு அரசியலாட்டத்தில் பங்கேற்ற இன்னொரு நிஜம் இன்றைய பதிவு.

செல்போன் வலை!

லீடர்கள், கூட்டணி குறித்த டீலிங்கில் தலையிடுகிறவர்கள் இந்த ட்ராக் பொறியில் சிக்கியது போக, எக்குத்தப்பாக காவல்துறையின்  உச்ச அதிகாரிகளே சிக்கிக் கொண்ட கதையெல்லாம் கடந்த காலங்களில் நடந்திருக்கிறது... அதிகாரத்தில் மாறி, மாறி இருந்து வந்த காரணத்தால் இப்படி மாற்றி, மாற்றி  ட்ராக் போடுவது  ஆட்சியாளர்களுக்கு ஒன்றும் பெரிதான காரியமல்ல, என்கிறார்கள்.

 

சைலண்ட் "கொக்கி" ஏரியா

புதிது புதிதாக எத்தனை போன்களை, சிம் கார்டுகளை மாற்றி வைத்து பேசினாலும் ட்ராக் செய்வது என்று முடிவெடுத்து விட்டால், அதுதான் இருப்பதிலேயே எளிதான காரியமாம். ஆனால், அது இருபுறமும் கூர்மையான கைப்பிடியில்லாத கத்திக்கு சமம் என்பதை  கடந்த கால அனுபவங்கள்  வலியாகக் கொடுக்கவே அதை 'அந்த' ஏரியாவில்  முன்புபோல் கையாள்வதில்லையாம்.

ஸ்மெல்லு- க்கே பயனில்லை

வெளியில் தெரியாமல் இருந்த வரையில் (அதாவது நாட்டின் பாதுகாப்புக்கு மட்டும் இதைப் பயன்படுத்தியவரை) இது பாதுகாப்புத் துறையின் வேலைப்பளுவை குறைத்துக் கொடுத்தது. கடைசியில் அவர்களுக்கே இது பயன்படாத ஒரு சூழலை ஸ்மெல் தரப்பும், ஆட்சியாளர்களும் கைகோர்த்ததால் உருவாக்கிக் கொடுத்து விட்டது.

குழப்பம், கலகத்தின் வளர்ச்சி

ஆட்சி மாற்றங்களின் போது, இது ஓப்பன் மார்க்கெட் லெவலுக்கு வெளியுலகத்தில் பரவியது. ஒன்றும் தெரியாதது போல்  செல்லில் திசை திருப்பி விடும் விதமாக மாற்றிப் பேசி குழப்பத்தை விளைவிக்க, அதே ட்ராக் ரூட்டையே சில  செகன்ட் லைன் லீடர்கள் கையாண்டு இருக்கின்றனர்.

இதனால் ஒன் டைம் யூசேஜ் வாக்கி- டாக்கிகளை கையாள்கிற சூழலும் உருவாகியிருக்கிறது. வாட்ஸ் அப், முகநூல் போன்றவைகளில் இருவேறு கருத்துகளை விதைத்து குழப்பத்தை ஏற்படுத்தியவர்களையே குழப்பத்தில் ஆழ்த்தும் டெக்னாலஜி "பேக் -ஐ.டி" யின் மூலமாக இன்று அனைத்துத் தரப்புக்கும் சாத்தியமாகி இருக்கிறது.

அரசியலை சற்றுத் தள்ளி வைத்து விட்டு இந்த விஷயத்தை உள்வாங்கி நிறுத்தினால், இதனை  தெளிவாக கற்றுக் கொண்டதின் விளைவுதான் சாதாரணமாக தப்பித்துக் கொள்ளும் தீவிரவாதக் குழுமத்தின் பலமாக அடுத்தடுத்த கால கட்டங்களில் அமைந்தது என்பதை உணரலாம்.

இதன் அடிப்படையாக, சைபர் க்ரைம் என்பதெல்லாம்  சைபர் போடுவது போல எளிதான விஷயமானதும் இப்படித்தான். வினையாக விதை விதைத்தவர்களுக்கு அதுபற்றிய கவலை ஒன்றுமில்லை.

தூதுவின் நாயகன்

சென்னையில் அடிசனல் லெவலில் ஃப்வர் போஸ்ட்டில் இருந்து, வெற்றி நாதம் இசைத்தவர் அந்த அதிகாரி. நேரடி ஐ.பி.எஸ்.சில் அடிப்படையிலேயே பெரும் செல்வந்தரும் கூட. இவரிடம்தான் இப்போது கொங்குதமிழ் ஏரியா கொடுக்கப்பட்டிருக்கிறது.

லா அன்ட் ஆர்டரில் இருந்து கொண்டு யாரிடமும் போய் பேச முடியாது என்பதால், அதற்கேற்றார் போல் ஒரு ஏரியாவை இவருக்கு கொடுத்திருக்கிறார்கள். வெளியிலிருந்து பார்ப்பவர்களும் கூட, "அட போப்பா, அவரே டம்மி போஸ்ட்டிங்கில் பாவமா இருக்காரு" என்று உச்சுக் கொட்டிவிட்டு அவருடைய எந்த மூவ் மென்ட்டையும் பொருட்படுத்தாமல் கிடப்பார்கள்...

 தெரிந்தாலும் தடுக்க முடியாது

அவருக்கும், அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தவர்களுக்கும் அதுதான் தேவை... அது சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. பாம்பின்கால் பாம்பறியும் என்பார்களே அது போல  இதே மண்டலத்தின் முந்தைய ஆபரேசனை செய்து முடித்தவருக்கு இது எல்லாமே தெரியும்...

ஆனால், அதை தடுக்கவும் முடியாது, அதுபற்றி எங்கேயும் ஷேர் -இட் என்ற கதையையும் பண்ண முடியாது.  எப்போதும் ஸ்டேண்டிங்கில் இருக்கும் ஆட்கள் மூலம் அதை  ஓரளவு ஸ்மெல் செய்து அதற்கேற்றபடி எதிர்வினை ஆற்றிட  முயற்சிக்கலாம், அவ்வளவுதான், ஆனால் செயல்பாடுகளை தடுக்க முடியாது...

அவரை மிஞ்ச முடியாது!

கடந்த காலங்களில் நேரடி ஐ.பி.எஸ்.சை தவிர பிற அதிகாரிகளை தனக்கு முன்னே இருக்கையில் அமர வைத்து பேசாதவர் என்ற 'குற்றச் சாட்டை' கறை போல் தன்னுடைய காக்கியில் இன்றளவும் வைத்துக் கொண்டிருப்பவர் அந்த அதிகாரி.

ஒட்டுக் கேட்பில்  'தல ' குடும்பத்தையே சேப்டி (?) என்ற பேரில் "கொக்கி" போட்டு வைத்திருந்தவரான அவர் 'இன்ட்' டின் அத்தனை வில்லங்க மூவ் மெண்ட்டையும் அறிந்தவர்.

மீடியா, சமூக ஆர்வலர்கள் (?), வியாபார நிபுணர்கள், ரிசார்ட் சைடு, ரியல் எஸ்டேட் சைடு என்று ஒரு பெரிய வட்டாரமே இவர்  துணையுடன்  "அதிகார " மையமாகத்தான் இருந்து வந்தது.

இவர்  வகித்து வந்த பதவியை விட உச்ச பதவி காக்கிகளின் போஸ்டிங்கை கூட  இவர்தான் தீர்மானித்து வந்தார்.

இப்போது காக்கி பதவியில் இவர்  "இருக்கிறாரா- இல்லையா ?" என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் இன்றைய அரசியல் நிலவரம், கூட்டணி பேச்சு வார்த்தை போன்ற வைகளை "பகுப்பாய்வு" செய்ய  இவர் தேவை என்று சொல்லி விட்டிருக்கிறார், 'மறப்போம், மன்னிப்போம்' தலைவர்.

அவரும் வழக்கம் போல " தலைவரே நாம வந்ததும் நான் சொல்ற ஆளுங்களுக்கு சொல்ற இடத்துல போஸ்டிங் போட்டுடணும் ... அப்போதுதான் எல்லாம் சரியாக வரும்.. அதை மட்டும் செய்து கொடுத்துட்டால் போதும் " என்று ஒற்றை கோரிக்கை வைத்துள்ளார். "வாய்யா, பாத்துக்கலாம்" என்று பதில் சொல்லப்பட்டு விட்டதாம்.

தலைவரின் பதிலால்  இப்போது பழைய "வானளாவிய" ஒற்று அதிகாரியின் அலுவலகத்திலும் நம்பிக்கையுடன் ஒரு கும்பல் கைகளில் பைல்களுடன் சுற்ற ஆரம்பித்து விட்டது.

-ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ