Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூட்டணி முறியடிப்பும், 'தூது' டெக்னிக்குகளும்! ( இன்டலிஜென்ஸ் அரசியல்: மினி தொடர்-3)

முதல் அத்தியாயத்தில், ஊசிக்குத்து தலைவர் மடங்கிய விதம்...இரண்டாவது அத்தியாத்தில், தேர்தல் நேரத்துப் போஸ்டிங்கின் பின்னணி குறித்து சொல்லியிருந்தோம்.

தலைநகரின் அதிகாரம் - இருவர்

சென்னை தலைநகராக இருப்பதால்,  இங்கிருந்துதான் முக்கிய ஆபரேஷன்களுக்கு கத்திகளும், கத்தியைப் பயன்படுத்தும் மீடியேட்டர்களும் அசைன்மென்ட்டை பெறுகிறார்கள். சென்னையில் கடந்த ஐந்தாண்டு காலமாக கீ போஸ்டிங்கில் தொடர்கிறவர்களில் பிரதானமானவர்கள் இருவர். ஒருவர் புன்னகை மாறாமல் ரிப்போர்ட்டைப் போட்டுவிட்டு படகை தள்ளிக் கொண்டு போகிறவர்.

ஆட்சிகள் மாறினாலும் இவருக்கான காட்சிகள் மாறுவதில்லை. நான் எப்போதுமே அரசு ஊழியன். ஆட்சியில் இருப்பவர்கள் சொல்வதையும், என்ன செய்தால் ஆட்சிக்கு நல்ல பெயர் வரும் என்பதையும் மட்டுமே எடுத்துச் சொல்லி உறுதியைக் கடைப்பிடிக்கிற கேரக்டர் என்று சொல்வதைப் போல இவருடைய அன்றாட செயல்பாடுகள் இருக்கும்.

இவருடைய அடிசனல் ரோல் என்னவென்றால், அரசுக்கு எதிராக எந்த தரப்பு கிளம்புகிறது என்பதை முன்னரே ஸ்மெல் செய்து அதை தொடக்கத்திலேயே தட்டி வைக்கும் வேலையை சிறப்பாக செய்வது இவருடைய பெஸ்ட் என்பார்கள். அந்த வகையில் தலைநகரின் 'ஆல் பார்ட்டி மூவ்'களை தனக்குக் கீழ் உள்ளவர்கள் மூலம் வாங்கி அதை 'கிராஸ் செக்' செய்வதோடு, அதை மேலதிகாரப் பார்வைக்கும் அனுப்பி விடுவார்.

இந்த விஷயத்தில் என்ன மாதிரியான ஸ்டெப் எடுக்கலாம், எதை செய்தால் சரியாக வரும் என்பதையும்  கூடவே, அடிசனல் நோட் ஆக போட்டு விடுவார்.

இன்னொருவர், ரோல் இதில் வராதது... இவருக்கான வொர்க் நேச்சரே வேறு. அதிகார மையத்துக்கு ஏற்றபடி 'கடமையாற்றக் கூடிய' நபர்கள் யார், யார் என்பதை மட்டும் சரியாக லிஸ்ட் எடுத்து தலைமைக்கு அதை அனுப்பி வைக்கும் வேலை மட்டுமே இவருடையது. ஆனால், இது சொல்லவும், கேட்கவும் எளிதானது போல் தோன்றும். ஆனால், இருப்பதிலேயே இந்த வேலையானது, கரணம் தப்பினால் மரணம் என்ற கதை போன்றது.

சிட்டியின் மூவ் மெண்ட்டை தீர்மானிக்கிற 'அந்த' ஒருவர் பிரதான தலையாக வெளியே தெரிந்தாலும், அந்த 'தலை'யே இவருடைய கண்ட்ரோலில் தான் இருந்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதிகார மையத்துக்கும், ஆட்சி அதிகாரத்துக்கும் இணைப்புப் பாலமாக இருக்கின்ற சென்சிடிவ் 'அடிசனல்' போஸ்டிங் இதுதான். எல்லா ஆட்சி காலத்திலும் இந்த வகையிலான 'சீட்' ரொம்பவும் டிமாண்ட் ஆன சீட் என்பதால் தலைமையுடன் உற்ற நம்பிக்கை கொண்டவர்களுக்கே  இந்த சீட்  தேடிப்போய் வழங்கப்படுகிறது.

சிட்டியும், ஸ்டேட்டும்

சிட்டி லெவலில் ஒருவர் 'நோட்' போட... இன்னொருவர் நிர்வாகத்தை கவனிக்க.... அதே வேலையை ஸ்டேட் லெவலில் இருக்கிற (மூலவர் ) மூவர் தனித்தனி கோப்புகளாக போட்டு  மேலிடத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். இதில் எல்லாமும் இருக்கும். (இது தவிர 'கொக்கி ஏரியா' என்றும் ஒன்று இருக்கிறது).

இந்த கோப்புகள் அன்றாட செயல்பாடுகள் பற்றிய நடைமுறை  பதிவுகளாக மட்டுமே இருப்பவை. அதைத் தாண்டி கோப்பு - குறிப்புகளில் வராத பணிகள் நிறைய இருக்கும். அதில்தான் சுமைகள் அதிகம். அதில் கூட்டணி, சீட், வெற்றி வாய்ப்பு, சாதிய பலம், திடீர் குழப்பத்தை ஏற்படுத்துவது, சரியான மதிப்பீட்டை கணிப்பது,   எம்.எல்.ஏ.க்கள், இரண்டாம் நிலை லீடர்களை மடக்குவது என்று பல வெரைட்டிகள் அடங்கும்...

சாதி மாநாடுகளின் மறுமுகம்!

பலமான அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகள் தவிர, சில சிறு கட்சிகள் தேர்தலை முன்னிறுத்தி எப்போதுமே அக்டோபரிலிருந்து பிப்ரவரி இறுதி வரை திடீர் மாநாடுகள் நடத்துவதை பார்க்கலாம். அந்த மாநாட்டின் நோக்கமும் பட்டவர்த்தனமாக வெளியில் தெரியும். ஆனால், சத்தமே இல்லாமல் இதே காலக்கட்டத்தில் அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்ட சாதிக்கட்சி மாநாடுகள் நடந்து விடுவதும் சற்று கூர்ந்து கவனித்தால் தெரியவரும்.

இதிலும் 'ஸ்மெல் ஏரியா' பணிதான் மேலோங்கி இருக்கிறது. குறிப்பிட்ட கட்சியின் தலைவரை அழைத்து, 'என்ன சார், உங்க சாதிக்காரர் கூட்டிய கூட்டத்தை பார்த்தீர்களா, ரெண்டு சீட்டு கொடுத்தா போதும்கறாரு... யோசிங்க' என்று 'அதிகமாய்' தொகுதிகள் கேட்டவரை அடக்கி அனுப்பி வைத்து விடுவார்கள். இது சரியாக க்ளிக் ஆனதும், சாதிக்கூட்டத்தை (போட்டியாக) கூட்டியவருக்கு வருங்கால 'வாரியம்' நீங்களே என்ற உறுதிமொழி கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டு விடும். ஒவ்வொரு ஐந்தாண்டின் இறுதியிலும் ஏதோ டைம் பாஸிங் போல இவைகள் நடப்பதைப் பார்க்க முடியும்.

தூது ட்ரிக்:

மலையேறினாலும்... மச்சான் தயவு இருக்கணும்பா... அதுதான்பா என் வழி என்பதில் உறுதியாய் நிற்கும் தலைவர் அவர். அவருடைய ஏரியா ஸ்மெல் டீமுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் இதுதான். 'நான்கு பேரோடு ஐவராக அவர் போனால் போகட்டும், பிரச்னை ஏதுமில்லை. தேசிய கட்சியில் ஐக்கியமானாலும் ஆகட்டும். ஆனால், 'கிழக்கு வாசல்' பக்கம் மட்டும் அவரை தலை வைத்துப் படுக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்' என்பதே அது. அது மிக முக்கிய அசைன்மெண்ட்டாகவே ஸ்மெல் ஏரியாவினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஸ்மெல் ஏரியாவினர், மாதக் கணக்கில் ரூட் போட்டு ஆட்களை சுழற்றி, சுழற்றி வேலை வாங்கியதில் அது முடிந்தவரை சக்சஸ். ஆனது. முரசு சத்தமும் தளர்ச்சியாகி விட்டது. இருப்பினும்  திசைமாறி அந்த சத்தம் 'கிழக்குவாசல்' பக்கம் மட்டும் வந்து விடக்கூடாது' என்று எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள், ஸ்மெல் ஏரியாவில்..

  ஸ்மெல் ஏரியாவினருக்கான அடுத்த அசைன்மென்ட்  :  கோபக்கார மருத்துவர் எப்படியாவது போகட்டும். மனம் மாறி அவரும் "கிழக்குவாசல்"   பக்கம்      மட்டும் போய் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..  அதில் எச்சரிக்கையாக இருங்கள்' என்பதுதான்.

முடிவு மக்கள் கைகளில்...

மாறி, மாறி ஆண்டு வந்தவர்களுக்கும் ஆட்கள் இருக்கத்தானே செய்யும். அவர்கள் தரப்பும் இதற்கான 'தடுப்பாட்டம்' குறித்தும்  'அதிரடி மிரட்டல்' ஆட்டம் குறித்தும் ரூம் போட்டு யோசிக்கும் அளவுக்கு களத்தை தயாராக வைத்துள்ளனர். யாரிடம் இருக்கும் ஸ்மெல் மனிதர்கள் ஸ்ட்ராங் என்பதிலும், யாரிடம் இருக்கும் டீல் பேசும் வி.ஐ.பி.கள் ஸ்ட்ராங் என்பதிலும்தான் கடைசி சுற்று ஆட்டத்தின் முடிவு இருக்கிறது. மக்கள் வாக்களிப்பது என்பது கடைசி கட்ட எதிர்பார்ப்பே.

-ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close