Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கையுடைப்பும், உள்ளாடை புகைப்பட வன்மமும், நம் பாரபட்சமான பார்வையும்!

ய்வாக இருக்கிறீர்களா...? உங்கள் செவி மட்டும் வேண்டாம், உங்கள் முழு கவனத்தையும் கொஞ்சம் தாருங்கள். உங்கள் மனசாட்சியுடன் உரையாட வேண்டும்.  இதை நான் மூன்று நாட்கள் முன்னால் எழுதி இருக்க வேண்டும். அப்படி எழுதி இருந்தால்,  பொது சமூகம் இதை உணச்சிப்பூர்வமாக அணுகி, அதன் கூட்டு மனசாட்சி என்னை கழுவேற்றி இருக்க கூடும்.

நம்முடைய கவலைகள், ஆறுதல்கள், போராட்டங்களெல்லாம் ஒரு தலைப்பட்சமாக இருக்கின்றன. ஒரு சம்பவம் நடந்தால், நாம் நியாயத்தின் பக்கம்தான் நிற்க முடியும். அதனால், அதில் ஒரு சார்பு இருக்கும். நான் அதைக் கூறவில்லை. ஆனால், ஒரே அநீதி வெவ்வேறு நபர்களுக்கு நடக்கும் போது, நாம் அதற்கு எதிராக ஒரே மாதிரி எதிர்வினையாற்றுகிறோமா...? கொஞ்சம் நிதானமாக யோசித்து பாருங்கள். நாம் சிலவற்றை அநீதி என நாம் பட்டியலிடுவதே இல்லை. என்ன... ஒரு கட்டுரையின் மூன்றாம் பத்தி, முன்னுரையாக இருப்பது போல் உள்ளதா...? சரி விஷயத்திற்கு வருகிறேன்...


கையுடைப்பும், புகைப்பட வன்மமும்:

ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, திலீபன் மகேந்திரன், இந்திய தேசியக் கொடியை கொளுத்தியதற்காக காவல் துறையால் கைது செய்யப்பட்டார். பின்பு, அவரின் கை உடைக்கப்பட்டது.  இந்திய சட்டத்திற்கு எதிராக, யார் செயல்பட்டாலும், அவர்கள் கைது செய்யப்பட வேண்டியவர்கள்தான், மறுப்பதற்கில்லை. ஆனால், கையை உடைக்கும் அதிகாரத்தை, காவல் துறைக்கு யார் தந்தது...?
இந்த கை உடைப்பிறகு எதிராக, ஒரு சாரார் கருத்து தெரிவித்தனர்... ஏன் ஆர்ப்பாட்டம் கூட நடத்தினர். ஆனால், அப்போது மற்றொரு சாரார், இந்த கை உடைப்பை ஆதரித்து முகநூல் ஸ்டேடஸை அப்டேட் செய்து கொண்டிருந்தனர். “கொடியை எரித்தால் கையை உடைக்க வேண்டியதுதான்... இதுல என்ன தப்பு...? I Support Police..."

நாட்கள் நகர்ந்தது, பிறகொரு நாள், சாதி மறுப்பு திருமணம் செய்த ஒரு காதல் தம்பதியை, உடுமலைபேட்டையில் நடு வீதியில் வைத்து வெட்டும் காட்சியை பார்த்தோம். அதற்கெதிராக கருத்து தெரிவித்தோம். பலர் முகநூலில் சாதி பெயரை பின்னோட்டாக வைத்திருப்பவர்களை பிளாக் செய்தார்கள். வரவேற்க வேண்டிய விஷயம்தான். பின் இரண்டு நாட்கள் கழித்து, அந்த கொடுஞ் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டதாக, நால்வர் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டது.

இம்முறை, திலீபன் கையை உடைத்த போது கண்டனம் தெரிவித்தவர்கள், அகம் மகிழ்ந்து இந்த புகைப்படத்தை பகிர்ந்தார்கள்.

அதேப்போன்று இந்த மாதத்திலேயே, கண்ணகி நகரை சேர்ந்த ஒரு சிறுவனை, ஒரு வழக்கில் தவறாக கைது செய்து, கண்மூடிதனமாக தாக்கி, அவன் செவிகளை பழுதாக்கியது காவல்துறை. இப்போது, மீண்டும் ஒரு தரப்பு கண்டனம் தெரிவித்தது, ஒரு தரப்பு மெளனம் காத்தது.

இது எத்தகைய அறம்...?

காவல் துறை தொடர்ந்து, அனைவரிடமும் அதற்கு தெரிந்த வன்முறை மொழியில் மட்டுமே பேசி வருகிறது.  அனைவரும் என்றால் ஏழைகள், விளிம்பு நிலை மக்கள். அல்லது, அது ஒரு கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த வன்முறையில் இறங்குகிறது. ஆனால், நமது கவலைகள், வருத்தங்கள் மட்டும் ஆளுக்கேற்றார் போல் மாறி வருகிறது.

'என்ன,  நடுரோட்டில் கொன்ற கொலை குற்றவாளிகளையும், எந்த தவறுமே செய்யாமல் கேட்கும் திறனை இழந்த ஒருவரையும், ஒப்பிடுவதா...? இது உச்சபட்ச வன்மம்.' - இப்படியாக உங்கள் பார்வை இருந்தால், அது நிச்சயம் மாற்றிக் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், இது போன்ற நம் பார்வைதான் காவல்துறைக்கு சாதகமான ஒன்றாக அமைகிறது.

அவர்கள் தவறு செய்தவர்கள், கைது செய்யப்பட வேண்டியவர்கள், தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றால், அதற்கான சட்ட நடவடிக்கைகளைதான் ஒரு பொறுப்பான காவல் துறை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக ஒருவரை உள்ளாடையுடன் நிற்க வைத்து படம் எடுப்பது என்ன சட்டம்...? அந்த புகைப்படத்தை சந்தோஷமாக பகிர்வது எத்தகைய அறம்...?

நாளை அவர்கள் துப்பாக்கி நமக்கு எதிராகவும் திரும்பும்:

இங்கு தனியான ஒரு சம்பவமென்று எதுவும் இல்லை. எல்லாம், ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.  கண்ணகி நகரில் வாழ்ந்த ஒரே காரணத்திற்காகவே, எந்த குற்றமும் செய்யாமல் ஒருவன் கைது செய்யப்பட்டு தாக்கப்படுகிறான். இன்னொரு கும்பல், ஆதிக்க சாதி வெறியில் காலம் காலமாக ஊறி, சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை வெட்டுகிறது. இவையெல்லாம் எப்படி தனி சம்பவங்கள் ஆகும். துர்நாற்றம் அடிக்கும் சமூகத்தின் வார்ப்புகள் அவர்கள்.  அவர்களை நாம் கவுதம் படம் நாயகர்கள், குற்றவாளிகளை அணுகும் பாணியில் அணுக முடியாது, அது கூடவும் கூடாது.

தவறு செய்தவர்களுக்கு ஆதரவாக நான் பேசவில்லை. தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கபட வேண்டியவர்கள். ஆனால், அது சட்டத்தின்படி இருக்க வேண்டும் என்கிறேன்.

சட்டத்தை கணக்கில் கொள்ளாமல், பெரும்பான்மை கூட்டத்தை மட்டும் திருப்திபடுத்த காவல் துறை எடுக்கும் சில முயற்சிகளை, பாரபட்சத்தோடு நாம் ஆதரிப்போம் என்றால், நாளை அவர்களின் தோட்டாக்கள் நம்மை நோக்கியும் பாயும்.

காவல் துறை யாருக்கு எதிராக அறம் பிறழ்ந்து நடந்தாலும், அழுத்தமான எதிர்ப்பு குரலை கொடுப்போம்... எத்தகைய கொடுங் குற்றங்கள் செய்தவராக இருந்தாலும், சட்டத்தின்படி மட்டுமே நடவடிக்கை எடுக்க நிர்பந்திப்போம். 

அதுதான் அறமாக இருக்கும்!

- மு. நியாஸ் அகமது

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ