Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காங்கிரஸ் மாவட்ட தலைவர் மாற்றப்படுவாரா?...குமரி கதர் சட்டைகள் கதறல்!

காங்கிரஸ் என்றாலே புகைச்சலும் கோஷ்டி பூசலும் உச்சத்தில் இருப்பது வாடிக்கை தான்.ஆனால் மாவட்ட  தலைவரால் கட்சி அழியுது என காங்கிரஸ் காரர்களின் ஓலங்கள் பலமாக  எழுகின்றன. அது வேறு எங்கும் இல்லை காங்கிரஸ் கோட்டை என்று சொல்லிக் கொள்ளும் குமரியில் தான் .இது குறித்து நாம் விசாரித்தோம்.

தலையில் கை வைத்தவாறு பேசத் தொடங்கினர்.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயபால் எம்.எல்.ஏ.. அவர் இறந்ததும் தலைவர் பதவி காலியாகவே வைக்கப்பட்டிருந்தது.அப்போது ஞானதேசிகன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தார்.அதன் பின் ராபர்ட் புரூஸ் குமரிமாவட்ட பொறுப்பாளராக வந்தார்.பின்னர் இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வந்ததும் புதிய நிர்வாகிகள் நியமிக்கபடுவார்கள் என எதிர்பார்க்கப் பட்டது. அப்போது மாணவ பருவம் முதல் காங்கிரஸில் இருந்து வரும் கண்ணாட்டுவிளை பாலையா வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்தகுமார் மூலம் லாபி செய்து இளங்கோவனால் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப் பட்டார் .

அதன்பிறகு தான் காங்கிரஸிற்கு கஷ்ட காலம்தொடங்கியது. படிப்படியாக  குமரிமாவட்டத்தில்  காங்கிரஸ் கட்சியும் கரையத் தொடங்கியது.வாசன் பிரிவு த.மா.கா. உதயம் என காங்கிரஸ் பரபரப்பாக இருந்த போதும் எந்த கவலையும் இல்லாமல் வலம் வந்தார் பாலையா ."எனக்கு வயசாகி விட்டது எம்.எல்.ஏ.,எம்.பி, சீட் என எதும் வேண்டாம் ,மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவி வாங்கி தாங்க" என தனக்கு தெரிந்தவர்களிடம் புலம்பிக் கொண்டு  இருந்தவருக்கு வசந்தகுமார் மூலம் பொறுப்பு கிடைத்தது.தனக்கு வசந்தகுமாரால் தான் பொறுப்பு கிடைத்தது என மேடைக்கு மேடை வசந்தகுமாரின் புகழ் பாடி  வந்தார்.இளங்கோவன் - வசந்தகுமார் மோதலுக்கும் பின் ஆப் ஆகி இளங்கோவன் விசுவாசி ஆனார்.

நாகர்கோவிலில் வர்த்தக காங்கிரஸ் ஆபிஸ் தனியாக உண்டு .அங்கு செல்பவர்கள் மாவட்ட காங்கிரஸ் ஆபிஸிற்கு வரக்கூடாது என உத்தரவிட்டார் பாலையா.வசந்தகுமார் படம் போட்டு பேனர் வைத்தால் முதலில் கட்சிகாரர்களை திட்டுவது கண்ணாட்டுவிளை பாலையா தான்.கட்சிக் கூட்ட பேனர்களில் வசந்தகுமார் படத்தை போட்டால் உடனே அந்த கூட்டத்தை ரத்து செய்வதும் பாலையாவின் வேலை.அதுதவிர கட்சியில் ஆக்டிவ்வாக செயல்படுபவர்களின் பொறுப்புகளை பிடிங்கி விடுவார்.வேறு யாராவது பணம் கொடுத்தால் உடனே அந்த பொறுப்பை  கொடுத்துருவார்.

இதனால் விரக்தியடைந்த காங்கிரஸார்  திமுகவிலும்,த.மா.கா.விலும் தஞ்சமடைந்துள்ளனர் .வாசனோடு த.மா.கா.வுக்கு போனவர்களை விட ,பாலையாவால் விரட்டப் பட்டு த.மா.கா.வுக்கு போனவர்கள் தான் அதிகம் என்கிறது ஒரு தரப்பு .

மாவட்ட ஆபிஸிற்கு போகவே முடியாது .தலைவர் பாலையா எப்போதுமே ஆபாசமாக,கொச்சையாய் தான் பேசுவார் அதிலும் பெண் நிர்வாகிகள் இருந்த அச்சில் கோர்க்க முடியாத வார்த்தைகள்தான் அவர் வாயில் புழங்கும் . டபுள் மீனிங்கில் பேசுவது பாலையாவுக்கு ரொம்ப பிடிக்கும்."என்னையே உனக்கு தந்துருக்கேன் பதவி தர மாட்டேனா!,, உன்னை மனசுல வெச்சிருக்கேன் !,என மெதுவாக தொடங்கி ஆபாசமாக வார்த்தைகளை நீட்டிக் கொண்டு  போவார் .ஆம்பளங்க எங்களுக்கே உடம்பு கூசும்.அதனால் தான் பெண் நிர்வாகிகள்  கட்சி ஆபீசுக்கு பெரும்பாலும் வருவதே இல்லை.அவரோடு சிரிச்சி பேசினாலும் கட்சி போஸ்டிங் கிடைக்காது.கட்சிக்கு உழைக்கிறவனுக்கும் பதவி கிடைக்காது.அவருக்கு தேவை பணம் தான் .பணம் கொடுத்தால்  பதவி  என்று முகத்தை சுளித்தவாறு சொல்லும் கதர் சட்டைகள் இன்னொருபுறம் நிற்கிறது.

காங்கிரஸ் சார்பில் நடந்த சட்டமன்ற நேர்காணலில் மேலிட பார்வையாளராக வந்த ராஜலிங்க ராஜா தொகுதிக்கு மூனு பெயரை எழுதி தாங்க என்று பாலையாவிடம் கேட்க ,குளச்சல் தொகுதிக்கு தன் பெயரையும்,தன் மகன் பெயரையும் எழுதி கொடுத்தார்.

உடனே ,ராஜலிங்க ராஜா " உங்க மனைவி பெயரையும் எழுதுவோமா "என கேட்டார்.அதற்கு "என் பொண்டாட்டி பெயருல பணம் கட்ட வில்லை.அப்படியென்றாலும் சீட்டுக்கு  பெயர் எழுதலாமா "எனக் பாலையா கேட்டாராம்.குமரிஅனந்தன் ,வசந்தகுமார் உதவியோடு பல ஆண்டுகளாக கேஸ் ஏஜென்சி எடுத்து நடத்திட்டு இருக்காரு.பிஜேபி காரங்க கல்லெடுத்து ஏறிஞ்சிருவாங்க என்று  பாலையா தனது காரில் காங்கிரஸ் கொடியை கட்டமாட்டார்.இதை விட அவரது சொந்த பூத்திலேயே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 75 ஓட்டுக்கூட வாங்க வில்லை.சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில வசந்தகுமார் படத்தோடு பாலையாவின் விளம்பரம் வந்து விட்டது.

உடனே சென்னையில் இருந்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.இது தவிர வசந்தகுமாரின் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில், நான் இந்தளவு நன்றா இருப்பதற்கு காரணம் வசந்தகுமார் தான் என்று ஐஸ் வைச்சி பேசினாராம் பாலையா.ஒருவேளை தனக்கு சீட் கிடைத்தால் வசந்தகுமார் நிதிஉதவி செய்வார் என்று தான் உருகி உருகி பேசினாராம். பாலையா இல்லாமல் நடக்கும் கூட்டத்திற்கு போகிறவர்களை போக கூடாது என்று தடுப்பார்.கட்சி காரங்க யாருக்கும் எந்த உதவியுமே செய்ய மாட்டார்.அவருக்கு கட்சி வளருதோ இல்லையோ ,தான் எம்.எல்.ஏ.ஆகனும் என்பது தான் கனவு.இவரை மாற்றுவதற்கு நாங்களும் புகார் மனுக்களை அனுப்பிட்டு தான் இருக்கிறோம்.

வசந்தகுமாரின்புகழ்  பாடினது அவருக்கு சிக்கலை உருவாக்கி விட்டது.காங்கிரஸ் தலைமை கண்ணாட்டுவிளை பாலையா மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் குமரியில் காங்கிரஸ் கட்சி அழிஞ்சி தான் போகும் என ஆவேசமாக பொங்குகின்றனர் குமரி காங்கிரஸ் காரர்கள்.

இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனோடு நெருங்கிய தொடர்புடைய  காங்கிரஸ் வட்டாரத்தில் கேட்டோம்.கண்ணாட்டுவிளை பாலையா மீது புகார்கள் வந்துக் கொண்டு தான் இருக்கிறது .விரைவில் அவருக்கு கல்தா கொடுக்கப் படும்.வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அல்லது நகரத் தலைவர் மாகின் காங்கிரஸ் மாவட்ட தலைவராக வரக் கூடும் என்கின்றனர்.

கட்சியை வளர்க்க தானே தலைவர் பதவியே தவிர கட்சியை அழிக்க அல்ல என கண்ணாட்டுவிளை பாலையா புரிந்து கொண்டால் சரிதான்.

த.ராம்
படங்கள்.ரா.ராம்குமார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ