Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எஞ்ஜினியரிடம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.:அதிர்ச்சி ஏற்படுத்திய வாட்ஸ்-அப் வீடியோ!

ழக்கு ஒன்றை முடித்து வைப்பதற்காக பொறியாளர் ஒருவரிடம் காவல்துறை எஸ்.ஐ ஒருவர் ரூபாய் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சி வாட்ஸ்-அப் மூலம் வெளியானது புதுச்சேரி காவல்துறையினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி நெல்லித்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் செந்தில். இவருக்கும் இவரிடம் வேலை பார்க்கும் குமார் என்பவருக்கும் சம்பள பாக்கி தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் குமார் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இதுகுறித்து விசாரிக்க எஸ்.ஐ ஆறுமுகம் பொறியாளர் செந்திலை காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளார். அப்போது குமாருக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து பிரச்னையை முடித்துவிடுமாறு செந்திலிடம் கூறியதோடு அதனுடன் சேர்த்து இருபதாயிரம் காவல் நிலையத்திற்கும் தருமாறும் கூறியிருக்கிறார் எஸ்.ஐ.ஆறுமுகம்.

இறுதியில் பத்தாயிரத்திரத்திற்கு இறங்கி வந்திருக்கிறார் எஸ்.ஐ. அதன்படி பணத்தை எடுத்துக் கொண்டதோடு ரகசியக் கேமராவையும் பொருத்திக் கொண்டு காவல்நிலையம் சென்றார் எஞ்சினியர் செந்தில்.

அப்போது பதிவான வீடியோ காட்சியில்,

" எஸ்.ஐ.ஆறுமுகத்தின் எதிரில் அமர்ந்திருக்கும் செந்திலிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணத்தைத் தருமாரு கேட்கிறார் எஸ்.ஐ. உடனே 30,000 ரூபாயை எண்ணிக் கொடுக்கிறார் செந்தில். அதை வாங்கிக் கொண்டவுடன் இன்னும் பத்தாயிரம் ரூபாய் கொடுங்கள் என்கிறார் எஸ்.ஐ, உடனே இது யார் யாருக்கு சார், உங்களுக்கு மட்டுமா அல்லது இன்ஸ்பெக்டர், ஏட்டு, ரைட்டர் எல்லோருக்கும் சேர்த்தா என்கிறார் எஞ்சினியர், அதற்கு நாங்கள் மொத்தமாக ஸ்டேஷனில் அனைவருக்கும் கொடுத்து விடுவேன். இதன்பிறகு நீங்கள் உங்கள் வேலையை பார்க்கலாம் என்கிறார் எஸ்.ஐ.

அதன்பிறகு ஆயிரம் ரூபாய் தாள்களாக பத்தாயிரம் ரூபாயை எண்ணி எஸ்.ஐயிடம் கொடுக்கிறார் அந்த எஞ்சினியர். அதையும் வாங்கி தனது டேபிள் டிராயரில் போட்டுக் கொண்டு, குமார்…. என்று கூப்பிட்டு அவரை அறைக்குள் அழைத்து உட்கார சொல்கிறார். அதோடு அந்த வீடியோ முடிவடைகிறது.

நேற்று வாட்ஸ்-அப் மூலம் வெளியான இந்த வீடியோ புதுச்சேரி தமிழகம் முழுவதும் வைரலாகப் பரவியது. அனைத்து வாட்ஸ்-அப் குழுவிலும் இது பகிரப்பட்டதுடன், இந்த எஸ்.ஐ மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது காவல்துறை என்று கேள்வி எழுப்பினார்கள். இதனால் வேறு வழியின்றி எஸ்.ஐ.ஆறுமுகத்தை இன்று உடனே பணியிடை நீக்கம் செய்திருக்கிறது காவல்துறை தலைமை.

ஏட்டாகப் பணி புரிந்து எஸ்.ஐயாக பதவி உயர்வு பெற்ற ஆறுமுகம் இன்னும் சில மாதங்களில் பணி ஓய்பு பெற இருந்தவர். பாதிக்கப்பட்டவர் தரப்பில் இருந்து இதுகுறித்து எந்தப் புகாரும் அளிக்காத நிலையிலும் வாட்ஸ்-அப்பில் வீடியோ பரவியதால் அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல துணிச்சலாக இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்தவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வளர்ச்சி ஊடகங்களுக்கு தற்போது பெரும் சவாலாக தற்போது அமைந்திருக்கிறது.  மொபைல் போன் வைத்திருக்கும் அனைவரும் பத்திரிக்கையாளர்கள்தான் என்ற நிலைதான் தற்போது உருவாகியுள்ளது. எந்த அளவுக்கு அது மக்கள் மத்தியில் பரவியிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் உதாரணம்.

-ஜெ.முருகன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close