Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சைகையில் வாக்கு சேகரித்த பிரேமலதா: விழிபிதுங்கிய காவல்துறை!

கன்னியாகுமரி: இரவு பத்து மணியை தாண்டிய பிறகும், மைக் இல்லாமல் சைகையில் வாக்கு சேகரித்தார் பிரேமலதா விஜயகாந்த். இதனால், செய்வதறியாது திகைத்தனர் காவல்துறையினர்.

தே.மு.தி.க - மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு கேட்டு  இரண்டாம் கட்ட பிரசாரத்தை நேற்று (13-ம் தேதி) குமரியில் தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக  திருவனந்தபுரம் வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் வந்து சேர்ந்தார். திங்கள் சந்தை, கருங்கல், மார்த்தாண்டம், குலசேகரம், வேர்கிளம்பி, தக்கலை, வடசேரி, ஈத்தாமொழி, மயிலாடி போன்ற பகுதிகளிலில் தே.மு.தி.க-மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு கேட்டும், பத்பநாபபுரம், கன்னியாகுமரி தே.மு.தி.க வேட்பாளர்கள் ஜெகநாதன், ஆதிலிங்க பெருமாளுக்கு முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

பிரேமலதா பேசும் போது, ''கொள்ளைக்கார கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வை தமிழ்நாட்டு மக்கள் அகற்றிட வேண்டும். 60 ஆண்டு கால ஊழல் ஆட்சிகளை விரட்டி விட்டு வெளிப்படையான ஆட்சிக்கு வாய்ப்பு தாருங்கள். தி.மு.க இல்லையென்றால் அ.தி.மு.க.வுக்கு வாய்ப்பு கொடுத்த நீங்கள் கேப்டனுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள்.

கேப்டன் தலைமையில் மகத்தான கூட்டணி அமைந்துள்ளது. பாண்டவர் அணியாக இருந்த அணி இப்போது ஆறுபடையாக மாறியுள்ளது. ஆறுபடையில் ஆறுமுகம் குடியிருப்பார். இந்த ஆறுமுகம் தற்போது தமிழகத்தின் ஏறுமுகம். வர்த்தக துறைமுகம், கடலில் காணமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிபேட், 60 வயதை தாண்டிய மீனவர்களுக்கு ஓய்வுதியம், ரப்பர் தொழிற்சாலை, மார்த்தாண்டம் தேன் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை, முந்திரி தொழிற்சாலைகள் மேம்பாடு, கடலரிப்பை தடுக்க சுவர்கள், கல் தொழிலாளர் பயிற்சி பட்டறைகள், போக்குவரத்து நெரிசலை தடுக்க மேம்பாலங்கள், புதிய பஸ்களை இயக்குவது, நெய்யாறு இடது கரை சானலில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது என குமரி மாவட்ட வளர்ச்சிக்கான திட்டங்களை தேர்தல் அறிக்கையாக கொண்டு வத்திருக்கிறோம். கேப்டன் தலைமையில் ஆட்சி அமைந்த உடன் படித்த, படிக்காத இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பை முதல் மூன்று மாதத்திற்குள் ஏற்படுத்துவோம்.

தமிழ்நாட்டில் விவசாயம், தொழிற்சாலைகள், குடிநீர் இல்லை இவைகளை பூர்த்தி செய்வோம். ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த எந்த திட்டங்களும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. 12 நாள் ஜெயயலலிதா பிரசாரம் செய்ய ஆகும் செலவு ரூ.50 கோடி. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஒரு ஊழல் கூட்டணி 2ஜி, காமன்வெல்த், நிலக்கரி போன்ற பெரிய ஊழல்களையும், ஈழப்படுகொலைகளையும் சேர்ந்தே செய்தது. டாஸ்மாக்கை திறந்து வைத்து மக்களை குடிக்க வைத்த கட்சிகளை மக்கள் புறந்தள்ள வேண்டும். டாஸ்மாக் மூலம் கோடி கோடியாக பணம் சம்பாதித்தவர்கள் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான்.

நடிக்கும் போதே தனது வருமானம் மூலம் மக்களுக்கு நலப்பணிகள் செய்தவர் கேப்டன். சென்னை மழை வெள்ளத்தில் நேரடியாக சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தவர் கேப்டன். காவல் துறையின் அடக்குமுறை அதிகமாகி விட்டது. மீண்டும் சுதந்திர போராட்டம் தொடங்கி விட்டது. இது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையில் நடக்கம் போர். மக்கள் கேப்டன் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்கள் கரைபடியாத கரங்களுக்கு சொந்த காரர்கள். கேப்டன் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கே வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்'' என்றார்.

அப்போது இரவு பத்து மணி தாண்டி விட்டது. இருப்பினும், மக்கள் கூட்டம் குறையவில்லை. இதனால், பிரேமலதா மைக் இல்லாமல் சைகையில், கன்னியாகுமரி தே.மு.தி.க வேட்பாளர் ஆதிலிங்க பெருமாளுக்கு முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இதனால் தேர்தல் அலுவலர்களும், காவல்துறையினரும் செய்வதறியாது நின்றனர்.

பிரேமலதா வழக்கமாக தேர்தல் பிரசாரத்தில் பேசும் "ஐயாவுக்கு வாய்ப்பு கொடுத்தீங்க, அம்மாவுக்கு வாய்ப்பு கொடுத்தீங்க, உங்க அண்ணனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்று அடிக்கடி சொல்லுவார். ஆனால், அது தற்போது மிஸ்ஸாகி விட்டது. புதிய டயலாக்காக 'சுதந்திர போர் நம் மண்ணில் நடந்தது. தற்போதும் ஒரு போர் நடக்கிறது அது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போர்' என்றே அடிக்கடி உச்சரித்தார். அடுத்த தேர்தல் பிரசாரத்தில் என்ன டயலாக்கோ!

-த.ராம்

படங்கள்: ரா.ராம்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close