Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கண்ணகியால் முடிந்தது... நம்மால் ஏன் முடியவில்லை?

 

மிழகத்தில் ஒரு காலத்தில் எவ்வாறு ஆட்சி நடைபெற்றது, தமிழ் மன்னர்கள் எப்படி நீதி பிறழாமல் ஆட்சி செய்தார்கள் என்பதற்கு சான்றாக இன்றும் இருப்பது சிலப்பதிகாரமும், கண்ணகி கோவிலும். அதற்காக அப்போதைய ஆட்சி மிக சுபிக்‌ஷமாக இருந்தது, மக்கள் செழிப்பாக இருந்தார்கள் என்று சொல்லவரவில்லை. ஆனால் அப்போது அறம் கோட்பாட்டளவிலாவது இருந்தது. 'ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்ற கோட்பாடுகளை மன்னர்கள் மதித்தார்கள். அதற்கு தகுந்தாற்போல் வாழ்ந்தார்கள்.  நீதி தவறியதற்காக தன்னைத் தானே மாய்த்து கொண்டவன் பாண்டியன் நெடுஞ்செழியன் என்று வரலாறு கூறுகிறது. ஆனால், கெடுவாய்ப்பாக நீதி, சத்தியம் போன்ற சொற்கள் நிகழ்காலத்தில் கண்ணகி கோவில் போல் சிதலமடைந்து இருக்கிறது.

கண்ணகி கோவில்:

பாண்டிய நெடுஞ்செழிய மன்னன், கோவலன் வழக்கை விசாரிக்காமல் நீதி தவறினான். கோவலனை கொண்டு வருவதற்கு பதில், அரச சேவகர்கள் கொன்று வந்தார்கள். இதனால் கோபமுற்ற கண்ணகி,  மன்னின் தவறை இவ்வுலகிற்கு உணர்த்தி, மதுரையை சாம்பலாக்கி, கொற்றவையை வணங்கிவிட்டு மதுரையிலிருந்து வெளியேறி, மேற்கு நோக்கி பதினான்கு நாட்கள் நடந்து, சேரநாட்டு திருச்செங்குன்றம் என்ற மலையை அடைந்து, அங்கிருந்து புஷ்பக விமானத்தில் தேவலோகம் சென்றாள் என்றும், முதல் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த சேர மன்னன், அவள் புஷ்பக விமானம் ஏறிய இடத்தில் கோவில் கட்டினான் என்றும் சிலப்பதிகாரம் சொல்கிறது. 

அந்த கோவில் உள்ள இடம் தமிழக, கேரள எல்லையில் உள்ளது. எல்லைப் பிரச்னை காரணமாக சித்ரா பௌர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே இக்கோயில் பகுதிக்குள் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.  வருடத்திற்கு ஏறத்தாழ ஐம்பாதாயிரம் தமிழக - கேரள மக்கள்,  சிதலமடைந்த நிலையில் இருக்கும் இந்த கோவிலுக்கு வருகிறார்கள், கண்ணகியை வழிபடுகிறார்கள்.

சிதலமடைந்த கோவிலும், அரசியலும்:

கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் கண்ணகியை கற்புக்கரசி என்கிறார்கள். முற்போக்காளர்கள் பெண்ணடிமைதனத்தின் சாட்சி என்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி கண்ணகியும், கண்ணகி கோவிலும் நமக்கு இன்னொரு விஷயத்தை தெளிவாக உணர்த்துகிறது. அப்போது முடியாட்சியிலும் திகழ்ந்த ஜனநாயகத்தை, எளிய மக்கள் முறையிட தகுந்ததாய் இருந்த அரசபையை, தான் செய்த தவறுக்கு மக்கள் தன்னை தூற்றுவார்களோ என்று அஞ்சிய அரசனை, தவறிழைத்தவன் மன்னனே ஆயினும் அவனுக்கும் சாபம் கொடுக்கும் பெண்ணின் வீரத்தை என நமக்கு பல விஷயத்தை கண்ணகி கதை உணர்த்துகிறது.

கண்ணகி கோவிலுக்கு ஏன் ஆண்டுதோறும் கூட்டம் கூட்டமாக  கடினமான மலைப்பாதையில் மக்கள் வருகிறார்கள் ?  கண்ணகி வழிபாடு எதை உணர்த்துகிறது...?  கணவனுக்கு கட்டுப்பட்டு அவன் செய்யும் தவறுகளை பொறுத்து, அவனுடன் இணைந்து இறுதி வரை வாழ்ந்து அவனுக்காக மடிவதையா... இல்லை அரசிற்கு எதிராக அநியாயத்தை எதிர்த்து ஒரு புரட்சிப்பெண்ணாக கிளர்ந்தெழுவதையா?

நிஜத்தில் ஒரு வட்ட செயலாளரைக் கூட பகைத்து கொள்ள விரும்பாத நாம்,  திரையில் கதாநாயகன் அநியாயத்திற்கு எதிராக பொங்குவதை ரசிப்போம், பறந்து பறந்து அடிப்பதை கைதட்டி, விசிலடித்து போற்றுவோம். அது போலதான் நாம் கண்ணகியையும், கண்ணகி கோயிலையும் பார்க்கிறோம்.

நம்மால் என்றுமே அரசின் தவறை தட்டி கேட்க முடியாது. குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் கூட நாம் சினம் கொண்டு நம் பகுதி வார்டு உறுப்பினரை கேட்க மாட்டோம். ஏன் நமக்கு வீண் வம்பு என்று, நமக்கு நாமே, என்றுமே உதவாத சமாதானங்களை சொல்லிக் கொண்டு, காசு கொடுத்து தண்ணீர் வாங்க பழகிய நமக்கு, இந்த தவறுகளை எல்லாம் தட்டி கேட்கும் திரைநாயகன் யுகபுருஷனாக தெரிகிறான். அவனது உருவப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்கிறோம்.

இதை அப்படியே கண்ணகி வழிபாட்டிற்கும் பொருத்தி பார்த்துக் கொள்ளுங்கள். நம்மால் என்றுமே செய்ய முடியாத ஒரு விஷயத்தை கண்ணகி செய்தாள். மன்னனின் தவறை அவன் முகத்திற்கு நேரே சுட்டிக்காட்டினாள். தனக்கு நிகழ்ந்த அநியாயத்தை உலகிற்கு உணர்த்தினாள். இதை நாம் என்றாவது செய்திருக்கிறோமா ? குட்டக் குட்ட குனிய பழகிவிட்டோம்.

நாம் செய்ய முடியாத ஒன்றை, கண்ணகி செய்தாள். அதனால், அவளை அநீதிகளுக்கு பழிவாங்கும் உக்கிர தேவதையின் வடிவமாக நாம் போற்றுகிறோம்!

(இன்று சித்ரா பெளர்ணமி. இதனையொட்டிய சிறப்பு வழிபாடு, நாளை  கண்ணகி கோயிலில் நடைபெறும்)

- மு. நியாஸ் அகமது

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ