Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இந்த தேர்தலில் நான் ஓட்டுப் போட மாட்டேன்...!' - கண்சிவந்த கமல்

"தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க மாட்டேன்" என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'சபாஷ் நாயுடு' என்ற புதிய படத்தின் தொடக்க விழா,  சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், எனது சபாஷ் நாயுடு படப்பிடிப்பு, மே 16ம் தேதி தொடங்குகிறது.  அதனால் ஷூட்டிங் போய்விடுவேன். இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வாக்களிக்க மாட்டேன் . ஏனென்றால், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சாவடிக்கு போனபோது என் வாக்கினை வேறு யாரோ போட்டுவிட்டு சென்றனர். இந்த முறை வாக்களிப்பதற்காக கேட்டேன். வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இத்தனைக்கும் தேர்தல் கமிஷன் அதிகாரி என் நெருங்கிய நண்பர். இருந்தும் என்ன செய்வது?" என்று கண்சிவந்தார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் பதில் அளித்த பதில்களும் வருமாறு:

உங்கள் ரசிகர்களை எந்த கட்சிக்கு வாக்களிக்க சொல்வீர்கள்?

முதலில் என் ரசிகன் எனது அலுவலகத்திற்கு வரும்போது, செருப்பை கழற்றி வாசலில் விட்டுவிட்டு வரச்சொல்லுவேன். அதுபோல, திரும்ப செல்லும் போது, அந்த செருப்பை மாட்டிக்கொண்டு செல் என்று சொல்லுவேன். அதற்காக நான் செருப்பு என்று சொன்னதை தவறான உவமையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னிடம் அரசியல் கொண்டு வர வேண்டாம். என்னுடைய நற்பனி இயக்கங்களுடன் சேர்ந்து தொண்டு செய்வதே போதும்.

நீங்கள் சிவாஜி வாரிசு என்று சொல்கிறீர்கள். அவருடைய ஓட்டையே வேறு ஒருவர் போட்டு விட்டாரே?

பதில் அளிக்காமல் சிரித்தார்.



சாதியை வெறுக்கும் நீங்கள், உங்கள் படத்துக்கு 'சபாஷ் நாயுடு' என்று பெயர் வைத்து இருக்கிறீர்கள்?

முதலில், நீங்கள் வசிக்கிற தெருவில் இருக்கிற சாதி பெயரை எடுங்க. அதுக்கு அப்புறம் பார்க்கலாம். உங்களுக்கு எப்படி ஒரு கேரக்டர் பிடிக்குதோ, அதேபோல் எனக்கு இந்த தலைப்பு பிடித்திருக்கிறது. அதனால் இந்த தலைப்பை வைத்திருக்கிறேன்.

நீங்கள் ஏற்கனவே நடித்த தசாவாதாரம் படத்தில் நடித்த பல்ராம் நாயுடு கேரக்டரின் தொடர்ச்சிதான் சபாஷ் நாயுடுவா?

ஐயோ, அது வேறு இது வேறு, அது முழுக்க முழுக்க காமெடி. இது கதையும், காமெடியும் சேர்ந்த ஒரு கலவை.

உங்கள் மகள் ஸ்ருதி சம்பளம் வாங்கி விட்டாரா?

கமல் ஸ்ருதியை பார்க்க, அவர் கையை காட்டி சமிஞ்சை செய்தார்.

நீங்களும், ரஜினியும் கலந்து கொண்ட நட்சத்திர கிரிக்கெட்டுக்கு விஜய்யும், அஜித்தும் வரவில்லையே ஏன்?

தயவு செய்து இந்த விஷயத்தை அரசியல் ஆக்காதீர்கள். நடிகர் சங்கம் எல்லோருக்கும் பொதுவானது. நடிகர் சங்கத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. விஜய், அஜித் விஷயம் குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் சுமுகமாக பேசி முடிப்பார்கள்.

எம்.குணா
- படங்கள்: மா.பி.சித்தார்த்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ